Advertisment

முடிஞ்சா தொட்டுப்பார்! உதயகுமாருக்கு சவால்விடும் சையதுகான்!

ss

மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 26ஆம் தேதி தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஆளுங் கட்சியை விட்டுவிட்டு, ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். "தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக் கிறது. ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். எம்.பி. ரவீந்திரநாத் வெற்றிக்கு இங்குள்ள ஒவ்வொரு தொண்டனின் உழைப்பே கார

மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 26ஆம் தேதி தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஆளுங் கட்சியை விட்டுவிட்டு, ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். "தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக் கிறது. ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். எம்.பி. ரவீந்திரநாத் வெற்றிக்கு இங்குள்ள ஒவ்வொரு தொண்டனின் உழைப்பே காரணம். தற்போது ரவீந் திரநாத்திற்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அதனால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்ப்போம். நான் அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன்'' எனச் சவால் விட்டார். "அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகமான அம்மா வாழ்ந்த கோயிலை அடித்து நொறுக்கிய சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. அதுபோல் உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்?'' என்று கேட்டது பெரும்பரபரப்பைக் கிளப்பியது.

Advertisment

ss

இதனால் கொதிப்படைந்த ஓ.பி. எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் சையதுகான், மாவட்டப் பொறுப்பாளர்களை அழைத் துக் கூட்டம்போட்டு உதயகுமாருக்கு சவால்விடும் வகையில், "தேனியில் நடந்த கூட்டம் ஆளுங்கட்சியைக் கண்டித்து நடந்தப்படாமல், ஓ.பி.எஸ்.ஸை அசிங்கப் படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது என்பதே நூறு சதவிகிதம் உண்மை. எம்.பி. ரவீந்திரநாத்துக்கு செல்வாக்கு இல்லை, பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்கிறார் உதயகுமார். முதலில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அதற்கு பிறகு நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுகிறோம்.

கட்சியைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உதயகுமார் பேசி வருவார். கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று பிரச்சனையை எழுப்பியதே அவர்தான். இந்த உதய குமாரை, அம்மா ஆட்சியின்போது கட்சியிலிருந்தே நீக்கிவிட்டார். அதன் பின்புதான் கட்சியில் சேர்த்தார். இவர் அ.தி.மு.க.விற்கு வந்தே 20 வருடம் தான் ஆகிறது. இவருக்கு கட்சியைப் பற்றி என்ன தெரியும்? சின்னம்மா தான் எடப்பாடியை முதலமைச்சராகக் கொண்டுவந்தார். ஆனால் அவரையே எதிர்த்து இப்ப எடப்பாடி அரசியல் செய்கிறார். இதில் யார் துரோகி என்று அவர் களுக்கே தெரியும். சரியான வேட்டி கட்டின ஆம்பளை யாக இருந்தால் ஓ.பி.எஸ். வீட்டைத் தொட்டுப் பார்க்கட்டும்! பின்பு தேனி மாவட்டத்தை விட்டே வெளியே போக முடியாது'' என்று உதயகுமாருக்கு சவால் விட்டுக் கடுமையாகப் பேசினார். இப்படி இ.பிஎ.ஸ். ஆதரவாளரும், ஓ.பி.எஸ். ஆதரவாளரும் ஒருவருக் கொருவர் கடுமையாக சவால் விட்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

nkn030822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe