"கரூர் போகமுடியாது. மீறி அங்கு சென்றால் உங்களது உயிருக்கு ஆபத்து. பொறுமை காத்திருங்கள்'' என கரூர் அசம்பாவிதம் நடந்த நாளிலிருந்தே விஜய்க்கு மரண பீதியைக் காட்டியது விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி. "கரூருக்கு நேரில் செல்வதுதான் சரியாக இருக்கும்''” என நிர்மல்குமார், அருண்ராஜ் தங்கள் பங்கிற்கு வகுப்பு எடுத்த நிலையில், "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வேலை பார்த்தவர் நமது அரசியல் வியூகர் ஆரோக்கியசாமி. அவரது கணிப்பு சரியாக இருக்கும்' என ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மேலும் போட்டுவைத்தனர்.
உயிர் பயத்தில் விஜய் நடுங்குவதுதானே ஆதவ் அர்ஜுனாவிற்கு வேண்டும். ஆதவ் அர்ஜூனாவின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டல் முடிவானது. கொலையுண்டவர்களின் குடும்பத்தை எப்பொழுது சந்திப்பது என்கின்ற தேதி அன்றைய நாளில் முடிவாகவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் கரூருக்கு விஜய் வரவுள்ளார், பாதிக்கப் பட்டவர்களை சந்திக்கவுள்ளார் என கதை கட்டியது த.வெ.க. டீம்.
நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவுள்ளது கரூரில் இந்த திருமண மஹாலில், அந்த திருமண மஹாலில், இல்லையில்லை அந்த ஹோட்டலில் என செய்திகளைப் பரவவிட்டது த.வெ.க. டீம். எனினும் இறுதிவரை கரூரில் எந்த ஒரு இடத்தையும் த.வெ.க. தரப்பு புக் செய்யவில்லை. ஆனால் விஜய்யினால் ஆறுதல் உண்டு என்கின்ற செய்தி மட்டுமே பரவியது. கூடுதலாக காவல்துறையும், அரசும் ஒத்துழைக்கவில்லை என்றது. "சரி... கரூரில் யாரும் மண்டபம் தரவில்லை.. சென்னையில் நடிகர் விஜய்யின் ஷோபா கலயாண மண்டபத்தை தர யார் மறுத்தார்களோ..?'' என்கின்ற கேள்வியை விஜய்யின் ரசிகர்கள் இன்றுவரை ஏன் கேட்கவில்லை என்பதுதான் அனேகரின
"கரூர் போகமுடியாது. மீறி அங்கு சென்றால் உங்களது உயிருக்கு ஆபத்து. பொறுமை காத்திருங்கள்'' என கரூர் அசம்பாவிதம் நடந்த நாளிலிருந்தே விஜய்க்கு மரண பீதியைக் காட்டியது விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி. "கரூருக்கு நேரில் செல்வதுதான் சரியாக இருக்கும்''” என நிர்மல்குமார், அருண்ராஜ் தங்கள் பங்கிற்கு வகுப்பு எடுத்த நிலையில், "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வேலை பார்த்தவர் நமது அரசியல் வியூகர் ஆரோக்கியசாமி. அவரது கணிப்பு சரியாக இருக்கும்' என ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மேலும் போட்டுவைத்தனர்.
உயிர் பயத்தில் விஜய் நடுங்குவதுதானே ஆதவ் அர்ஜுனாவிற்கு வேண்டும். ஆதவ் அர்ஜூனாவின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டல் முடிவானது. கொலையுண்டவர்களின் குடும்பத்தை எப்பொழுது சந்திப்பது என்கின்ற தேதி அன்றைய நாளில் முடிவாகவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் கரூருக்கு விஜய் வரவுள்ளார், பாதிக்கப் பட்டவர்களை சந்திக்கவுள்ளார் என கதை கட்டியது த.வெ.க. டீம்.
நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவுள்ளது கரூரில் இந்த திருமண மஹாலில், அந்த திருமண மஹாலில், இல்லையில்லை அந்த ஹோட்டலில் என செய்திகளைப் பரவவிட்டது த.வெ.க. டீம். எனினும் இறுதிவரை கரூரில் எந்த ஒரு இடத்தையும் த.வெ.க. தரப்பு புக் செய்யவில்லை. ஆனால் விஜய்யினால் ஆறுதல் உண்டு என்கின்ற செய்தி மட்டுமே பரவியது. கூடுதலாக காவல்துறையும், அரசும் ஒத்துழைக்கவில்லை என்றது. "சரி... கரூரில் யாரும் மண்டபம் தரவில்லை.. சென்னையில் நடிகர் விஜய்யின் ஷோபா கலயாண மண்டபத்தை தர யார் மறுத்தார்களோ..?'' என்கின்ற கேள்வியை விஜய்யின் ரசிகர்கள் இன்றுவரை ஏன் கேட்கவில்லை என்பதுதான் அனேகரின் வாதம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/vijay-meet1-2025-10-30-15-59-51.jpg)
ஸ்விட்ச் ஆப் மூடில் இருந்த விஜய் சி.பி.ஐ.யின் வருகை உறுதியான பின், பாதிக்கப்பட்டோருக்கு ரூ20 லட்சம், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு, மாதந்தோறும் ரூ5,000 ஆயிரம் என அள்ளிவிட்டார். ஆனால் திருமலை திரைப்பட ரிலீஸின்போது காரைக்குடியில் விஜய்யின் ரசிகர் ஒருவர் கொல்லப்பட்டார். அப்பொழுது காரைக்குடி வந்த நடிகர் விஜய் கொலையுண்ட ரசிகர் குடும்பத்தினைச் சந்தித்து, "அம்மா.! எந்தச் சூழலிலும் உங்களை கைவிடமாட்டேன். எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன். கொலைக்கு நியாயம் கிடைக்கும். அதுபோல் பொருளாதாரரீதியாக பாதுகாப்பளிப்பேன்'' என்று வசனம் பேசினார். இன்று வரை அந்த குடும்பத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை விஜய். அதாவது 2003-ல் பேசப்பட்ட அதே வசனம்தான், கரூரின் 41 நபர்களிடமும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்.
"த.வெ.க. சார்பில் கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் என்றது. மற்றைய கட்சிகள்போல் கட்சிக்கென நிதி கிடையாது த.வெ.க.விற்கு. எதிர்பார்த்த தருணம் இது என்பது போல, "சார், அந்த பணத்தை நான் கொடுக்கிறேன்' என ஆதவ் அர்ஜூனா முன்வர, "பார்ட்டிக்கு என செய்கிறீர்கள். ஓ.கே.' என இரு மனதாக விஜய் தலையாட்டியதாக தகவல். இதேவேளையில் கொலையுண்டவர்களின் 30-வது நாளில் சரியாக அக்டோபர் 27 அன்று விஜய் உங்களுக்கு ஆறுத லளிக்கவுள்ளார். குடும்பம்தோறும் 3 நபர்களாவது வரவேண்டும் என நிர்வாகிகளுக்கு கட்டளையிட் டது ஆதவ் அர்ஜூனா. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீத முள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பத் தினரையும் சென்னைக்கு அழைத்துவர மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி களுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக வஇங டிராவல்ஸிடம் 7 பேருந்துகளை புக் செய்த தும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பே'' என்றார் த.வெ.க. நிர்வாகி ஒருவர்.
மொத்தமாக 88 அறைகளைக் கொண்ட மாமல்லபுரம் ஃபோர் பாய்ண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில், 11 டூ 11 கால அமைப்பில், ரூ.15 ஆயிரம் ப்ளஸ் வரி உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 55 அறைகள் தவிர, மிகப்பெரிய 1 சூட் அறையையும் புக் செய்தது ஆதவ் அர்ஜுனா டீம். தலா ஒரு பேருந்திற்கு ரூ.1 லட்சம் என 7 பேருந்துகளை புக் செய்த நிலையில், கொலையுண்ட குடும்பத்தினர் பலர் வராமல் தவிர்த்தனர். இந்நிலையில் 6 பேருந்துகளாக குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுவனமோ, த.வெ.க.வுடன் தொடர்பில் இருப்பதால் பேருந்திற்கான ரூபாயைத் தவிர்த்ததாகவும் தகவல் உண்டு.
மொத்தம் 37 குடும்பங்கள் வந்த நிலையில் ஹோட்டலில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். முன்னதாக 41 பேரின் புகைப்படங்களைக் கொண்டுவந்து மாலையிட்டு பூஜை செட்டப்பில் வைத்திருந்தது த.வெ.க. டீம். பிரச்சனைக்குரிய நிர்மல்குமாரை காளையார் கோவில் மருதிருவர் பூஜைக்கு அனுப்பிவைத்த ஆதவ் அர்ஜுனா, தனக்கு வேண்டப்பட்ட வெங்கட்ராமன், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை மட்டும் அருகில் வைத்துக்கொண்டார். அதுபோல் கொலையுண்ட வர்களின் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் அளிக்கவுள்ளார் என்றாலும், தங்களுடைய செய்தி நிறுவனம் சார்பில் யாரையும் அனுப்பவேண்டாம் என தனித்தனியாக ஒவ்வொரு செய்தி நிறுவனத் திற்கும் மின்னஞ்சலை அனுப்பியது த.வெ.க. பவுன்சர்கள் புடைசூழ, வாய்ஸ் ஆப் காமனில் வேலைசெய்யும் முன்னாள் பத்திரிகையாளர்கள் ஹோட்டலைக் கைப்பற்றிய நிலையில், விஜய்யின் புதிய ஸ்க்ரீன் ப்ளே ஆரம்பமானது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்குத் தேவையானதை எழுதிக்கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த அந்த விண்ணப்ப மனுவுடன், அறையிலிருக்கும் ஒவ் வொரு குடும்பத்தின ரையும் அவருடைய சூட் ரூமிற்கு வரவழைத்த விஜய், அங்கிருந்த புகைப் படங்களுக்கு மாலையிட வைத்து, விளக்கு ஏற்ற வைத்து அருகில் அமர்ந்து அவர்களிடம், "உங்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் இருக்கின்றதா?''” எனக் கேட்டு அழுதிருக்கின்றார். இதில் கிருஷ்ணவேணி என்கின்ற பெண்மணியின் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டதாக ரைட்அப் பரவியது. கூடுதலாக 37 குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வீதம் 1.85 கோடிக் கான புதிய இன்சூரன்ஸை வழங்கியது த.வெ.க. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற நிகழ்வில், வெளியில் இருந்த தங்களுக்கு சாதக மான செய்தியாளர்கள் மூலம் அழுதார், காலில் விழுந்து கதறினார் என செய்தியினைப் பரவ வைத்தது ஆதவ் அர்ஜுனா டீம்.
"தனி ரூம்ல கூப் பிட்டு அது தர்றேன், இது தர்றேன்னு டயலாக் விட்டு கதறியது போன்று, ஒல்லியாக இருக்கின்றார் போன்ற சீனையும் போட்ருக்கானுக. இது புதுவகையான மனோவியாதி. முதலில் கரூர் சம்பவத்தில் சதி என்றார் விஜய். அது உண்மையென்றால் விஜய் ஏன் அனைவரின் காலில் விழவேண்டும்.? தமிழ்நாடு அரசின்மீது குற்றம்சாட்டப்படுகிறது. அரசு சார்பாக அதிகாரிகள் விளக்கம் தருகிறார்கள். அப்படி விளக்கமளிப்பது சந்தேகத்திற்கு போதுமானதாக உள்ளது என்று கூறி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளான அந்த 41 நபர்களின் குடும்பத்தினரை தனி அறையில் சந்தித்து, தனித்தனியாகப் பேசுவது சாட்சிகளைக் கலைப்பதாகவோ, மாற்றுவதாகவோ ஆகாதா? சி.பி.ஐ. இவர்களை விசாரித்த பின் விஜய் இவர்களை சந்திப்பதுதானே சரியாக இருக்கும். விஜயின் புதிய ரைட்அப் ஊர் முழுவதும் பரவினாலும் சம்பவத்தைப் பொறுத்தவரை விஜய் கொலைகாரனே'' என்கின்றார் உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பாஸ்கர் மதுரம்.
____________
காங்கிரசுடன் "கை'கோர்க்கும் த.வெ.க.!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/vijay-meet-box-2025-10-30-16-00-05.jpg)
நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சி கரூர் சம்பவத்திற்குப் பிறகு மிக நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த குழந்தையைப்போல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ஒரு புதிய செயற்குழுவை அந்தக் கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். அந்த செயற்குழுவில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூன்று உறுப்பினர்களைச் சேர்த்தார். அவர்கள் புஸ்ஸி ஆனந்துக்கு எதிரானவர்கள். த.வெ.க.வின் பொருளாளர் என அறிவிக்கப் பட்ட பொறியாளர் வெங்கட்ராமன் அந்த செயற்குழுவில் இடம்பெறவில்லை. “மத்திய பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டாம் என செயற்குழுவில் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அது கரூரில் உயிர்த்தியாகம் செய்தவர் களுக்கு எதிரானது என்ற குரல்கள் எதிரொலித்தன. த.வெ.க. ஒரு மாதத்திற்கு முன்பே அ.தி.மு.க. -பா.ஜ.க. இரண்டு கட்சிகளிடமிருந்து விலகி நிற்கிறது என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை என கட்சியின் நிர்வாகி நிர்மல்குமார் அறிவித்தார். நாங்கள் சி.பி.ஐ. போட்ட எஃப்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என இன்னொரு கட்சி நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்தார். விஜய்யை பொறுத்தவரை தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதேநேரம் ஆதவ் அர்ஜுனா மூலம் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கும் முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வுடன் அவர்கள் வைக்கும் கோரிக்கையான 30 சீட்டுகள்தான் த.வெ.க.வுக்கு என்பதில் விஜய்க்கு உடன்பாடில்லை. அதேநேரம் கரூர் சம்பவத்தைப் பயன்படுத்தி கூட்டணிக்கு வா என மிரட்டுவதை விஜய் தவிர்க்க விரும்புகிறார். அவரது வியூகம் காங்கிரசுக்கே. முடிவு காங்கிரசின் கையில் என்கிறார்கள் த.வெ.க.வினர்.
-தாமோதரன் பிரகாஷ்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us