""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்து எப்படி அமையப் போகுதுங்கிற கேள்விக்கு 23-ந் தேதி விடை தெரிஞ்சிடும். அத னால் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர் களைப் போல, நம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் ’திக் திக்’கில் இருக்காங்க.''’

""ஆமாம்பா, கடந்த ஒரு மாதமா ஓட்டுக்காக மக்களைத் தேடி ஓடிய தலைவர்கள்ல பலரும் இப்ப, நல்ல முடிவு வரணுமேன்னு கடவுளைத் தேடி கோயில் கோயிலா ஓடறாங்க போலிருக்கே?''’

modi

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, குறிப்பா சொல்லணும்னா, பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் முடிஞ்ச கையோட, தன்னோட வாரணாசி தொகுதி வாக்குப்பதிவு தொடங்கு றதுக்கு முன்பாகவே, உத்தர காண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயிலுக்கு ஹெலி காப்டர்ல பறந்துட்டார். கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அந்தக் கோயிலில் மோடிக் காக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டி ருக்கு. மலைமேல் மோடி தியானம் பண்றதுக்காக ஏற்கனவே ஒரு புதிய குகையை உருவாக்கி இருந்தாங்க. அங்கே மெத்தை, நவீன கழிவறை, ஹீட்டர், தண்ணீர், மின்சார வசதின்னு சகல வசதிகளையும் செய்து , அதை ஒரு ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு அழகாக்கி வச்சிருந் தாங்க. அந்தக் குகையைச் சுற்றிக் கண்காணிப்புக் கேமராக்களையும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. இப்படி ஹைடெக்கா அமைக்கப்பட்டிருந்த காஸ்ட்லியான குகையில்தான், காவி உடையில், தான் அணிந்திருக்கும் கண்ணாடியைக்கூட கழட்டாமல் பரமபக்தியோடு மோடி தியானம் பண்ணியிருக்கார். பிரதமர் பதவியும் பா.ஜ.க. ஆட்சியும் தொடரணும்ங்கிற வேண்டுகோளோடத் தான், மோடியின் ஹைடெக் தியானம் இருந்திருக்கு.''’

""ஓ.. அதைத்தான் தனக்காக கடவுளிடம் எதுவும் கேட்கவில்லைன்னும், நாட்டு மக்கள் நலனைத்தான் வேண்டினேன்னும் ஊடகத்தின ரிடம் மோடி சொன்னாரா?''’’

""அவர் எதைச் சொன்னாலும் அதன் உள்அர்த்தத்தை நாம தேடிப் புரிஞ்சிக்கணும். தியானத்துக்கு முந்துன நாள் தன்னோட 5 வருச ஆட்சிக்காலத்தில் முதல்முறையா நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் மோடியிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பக்கத்தில் இருந்த அமித்ஷாதான் பதில் சொன்னாரு.''’’

Advertisment

""பார்த்தேம்ப்பா.. தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக ஆட்சியாளர்கள் என்ன நினைக் கிறாங்க?''’’

""அவங்களும் கடவுள்கிட்ட வேண்டிக் கிட்டிருக்காங்க. முதல்வர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுங்கிற பிரார்த்தனையோடு, சேலத்தில் இருக்கும் தனது பங்களாவில் கேரள நம்பூதிரிகள் ஒன்பது பேரை வரவழைச்சி ஸ்பெஷல் யாகம் நடத்தியிருக்காரு எடப்பாடி பழனிச்சாமி. அதில் குடும்ப உறுப்பினர்கள் தவிர வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படலை. அதே மாதிரி துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சும், திருப்பதிக்குப் போய் ஸ்பெஷல் தரிசனம், ஸ்பெஷல் பூஜைன்னு ஏழுமலையானை சேவிச்சிருக்கார். அவருடைய திருப்பதி பயண ஏற்பாடுகள் முழுதையும் மணல் அதிபர் சேகர் ரெட்டி தரப்பு செஞ்சு கொடுத்திருக்கு. பூஜையின் போது ‘டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியும் தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியும் மீண்டும் மலரணும்னு சொல்லி, அர்ச்சகர்களை மந்திரம் ஓதச்சொன்னாராம் ஓ.பி.எஸ். இவர்களுக்கிடையில் அ.ம.மு.க. தினகரனும் திருச்சி, ஸ்ரீரங்கம்ன்னு வரிசையா கோயில்களுக்குப் போய் பிரார்த்தனை பண்ணியிருக்காரு.''’’

eps-ops

""கடவுள்கிட்டே முறையிடுவதிலும் அரசியல் போட்டா போட்டியா?''’

""பிரார்த்தனையில் மட்டுமில்லை. யாருக்கு அதிக பவர்ன்னு மோத ஆரம்பிச்ச எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், இப்ப அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பிச்சிட்டாங்க. எதிர்பாராத திசைகளில் எல்லாம் அவங்க காய் நகர்த்தறதைப் பார்த்த அ.தி.மு.க. சீனியர்கள், அடிக்கிற வெயில் போதாதா... இவங்களுக்கு இது வேறயா? நமக்கெல்லாம் என்ன வழின்னு தெரியலையேன்னு தலை கிறுகிறுத்துப் போய் நிக்கிறாங்க.''’

""எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அப்படி என்ன காய் நகர்த்தறாங்க?''’

""தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ஜ.க. அணியில் தி.மு.க. சேர்ந்துடுமோங்கிற பயம் எடப்பாடிகிட்ட இருக்கு. அதனால்தான், பா.ஜ.க.வோடு தி.மு.க. பேசிக்கிட்டு இருக்குன்னு பா.ஜ.க. தமிழிசை மூலமாவே எடப்பாடி, ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டாருன்னு சொல் றாங்க. அதுமட்டுமில்லாம தன் அமைச்சரவை சகாக்களிடம் எடப்பாடி, பா.ஜ.க. என்னை இன்னும் 6 மாசம் கூட பதவியில் விட்டு வைக்காது. ஓ.பி.எஸ்.சுக்காக எனக்கு எதிரா அது எந்த அஸ்திரத்தையும் கையில் எடுக்க லாம். அதனால், அதுக்கு இடம் கொடுக்காமல், நாம் நம் ஆதரவைக் கட்சியில் பலப்படுத்த ணும்னு சொல்லியிருக்காரு. டெல்லிப் பக்கம் இருந்து அவருக்குக் கிடைச்ச சில தகவல்கள் தான் அவரை இப்படி உஷார்ப்படுத்தி யிருக்கு.''

""அதற்கு பரிகார நடவடிக்கை என்ன வாம்?''’’

""சசிகலாவை பகிரங்கமாகத் தலைவி யாவே ஏத்துக்கிட்டு, அதன் அடையாளமா அ.ம.மு.க. தினகரனை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவந்துடணும்ன்னு முடிவெடுத்திருக்காராம். தன்னைப் பாதுகாத்துக் கறதுக்கு இப்ப தனக்கு இருக்கும் ஒரே வழி இதுதாங் கிற எண்ணத்துக்கு அவர் வந்துட்டார். அதற்கான தூதுப் படலங்களும் தொடங் கிடுச்சி. தன் முக்கியமான உறவினர்கள் சிலரை சசிகலாவின் தம்பி திவாகரனிடம் அனுப்பி, சின்னம்மாவின் தலைமையை மனப்பூர்வமா ஏத்துக்கறோம். தினகரனை அ.தி.மு.க.வில் இணைச்சிக்கவும் விரும்பறோம்னு சொல்லச் சொல்லியிருக்கார். இதைக்கேட்டு உற்சாகமான திவாகரன், இந்தத் தகவலை கர்நாடக சிறையில் இருக்கும் சசியின் காதுக்குக் கொண்டுபோனார். புன்னகை செய்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்க்கலாம்ன்னு சொல்லியிருக்கார். இதையறிஞ்ச ஓ.பி.எஸ்.சும், தன் உறவினர்கள் மூலம் சசிகலாவுக்குத் தூது விட்டிருக்கார்.

""சமாதியில் தியானம், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம்னு நடத்துன ஓ.பி.எஸ்.ஸுமா?''

""பதவின்னு ஒண்ணு இருக்குல்ல.. அவருக்கும் பசிக்கும்ல.. ஓ.பி.எஸ். சார்பில் சசிகலாவை சந்திச்ச வங்க, மோடிக்கு எடப்பாடியின் போக்குகள் பிடிக்கலை. கொலை, கொள்ளை நடந்த கொடநாடு வழக்கில் எடப்பாடியை இழுத்துவிட்டு நட வடிக்கை எடுக்க, பா.ஜ.க. தீவிரமா இருக்குது. அவரோடு, அவருக்கு எல்லா வகையிலும் துணையா இருக்கும் மணியான ரெண்டு மந்திரிகளும் கைதாகப் போறாங்க. அதனால் எடப்பாடி தரப்பு இல்லாத... ஒரே கட்சியா நாம் செயல்படுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. இவங்ககிட்டயும் சசிகலா பிடிகொடுக்காமல், அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லியிருக்காராம். இதுதான் அ.தி.மு.க. சீனியர்களை இப்பத் திகைக்க வச்சிருக்கு.''’

""அரசியல்ல எது வேணும்ன்னாலும் நடக்கும். காலம் தன் காட்சிகளை எப்படி வேணும்னாலும் அமைக்கும்.''’

ttv

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தேர்தல் முடிவு நெருங்கும்போதே இங்க இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்காங்க. இதையறிந்த முதல்வர் எடப்பாடி, யார் யார் ஸ்டாலி னைத் தொடர்பு கொள் றாங்கன்னு உளவுத்துறையைக் கண்காணிக்கச் சொல்லியிருக் காராம்.''’

""தே.மு.தி.க. பக்கம் என்ன செய்தி?''’

""உடல்நலம் குன்றி, சரியாகப் பேசமுடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த்தை, ரெண்டு நாளைக்கு முன்பு அவருடைய உறவினர்கள் சிலர், நலம் விசாரிக்கப் போயிருக்காங்க. அப்ப, தான் நல்லா இருப்பதா சைகையிலேயே உற்சாகமாகச் சொல்லியிருக்கார் விஜயகாந்த். அந்த நேரம் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உட்பட எல்லோரும் அடுத்து டெல்லியில் காங்கிரஸா இல்லை மறுபடியும் பா.ஜ.க.வான்னு விவாதிச்சிக்கிட்டு இருக்கும் போது, அதைக் கூர்ந்து கவனிச்சிக்கிட்டு இருந்த விஜயகாந்த், நாம போட்டியிடும் நான்கு தொகுதியிலும் நிலவரம் எப்படி இருக்குன்னு தெளிவாவே கேட்டிருக்கார். இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைச் சொல்ல முடியாத பிரேமலதாவும், சுதீஷும், கேள்வி கேட்டதன் மூலம் முன்பை விடத் தெளிவா விஜயகாந்த் உச்சரிக்கத் தொடங்கியதை உணர்ந்து பூரிச்சிப் போயிருக்காங்க. விஜயகாந்த்தின் குடும்ப டாக்டர்களோ, கூடிய விரைவில் அவர் பழையபடி பேசுவார்ன்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்காங்க.''’

""சங்கர மடத்தின் பக்கம் புகைச்சல் அதிகமா தெரியுதே?''’

ja""நாமதான் தொடர்ச்சியா பேசிக்கிட்டிக் கோம் தலைவரே, ஜெயேந்திரர் மறைவுக்குப் பின் சங்கரமடத்தின் பவர் புள்ளியாக, ஆடிட்டர் குருமூர்த்தி ஆனதையும், திருவனந்தபுரத்தில் ஜெயேந்திரருக்கு நெருக்கமான கௌரி காமாட்சியின் பொறுப் பில் உள்ள, மடத்துக்குச் சொந்தமான மெடிக்கல் காலேஜ் விவகாரம் பத்தியும் ஏற்கனவே நிறைய பேசியிருக் கோம். இதைத் தொடர்ந்து பரபரப்பான காரியங்கள் பலவும் அங்கே நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஜெயேந்திரருடன் 16 ஆண்டு காலம், அவருடைய நிழல் போலவே இருந்த குல்பர்க்கா சங்கர் என்பவரிடம், திருப்பதியில் இருக்கும் சங்கரமடத்தை ஒப்படைக்க விரும்பி னாராம் ஜெயேந்திரர். அதற்காக ஆவணமெல்லாம் ரெடியான நிலையில் ஜெயேந்திரர் இறந்துட் டாராம். அவர் இறந்ததுமே குல்பர்க்கா சங்கரை, மடத்தில் இருக்கும் காலடி விசுவநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியேற்றி விட்டார்களாம். அந்த குல்பர்க்கா சங்கர், இப்போது தன் உரிமையையைக் நிலை நாட்டக் கிளம்பிட்டாராம்.''

""ஓ...''…

""அதேபோல், விழுப்புரம் சங்கர மடத்தை கைப்பற்றிவிட்ட ஆடிட்டர் தரப்பு, மடத்துக்கு சொந்தமான திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜை, கல்வி அதிபரும் எம்.பி.தேர்தலில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டவருமான மூன்றெழுத்து இனிஷியல்காரரிடம் கைமாற்றிவிட வேண்டும்னு வரிந்துகட்டி நிற்கிறாராம். இப்படி அங்கிருந்து ’கிடுகிடுத்’ தகவல்கள் வந்துக்கிட்டே இருக்கு.''’

ra

""நானும் ஒரு முக்கியமான ’கிடு கிடு’ செய்தியைச் சொல்றேன். ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போறாருன்னு நான் ஏற்கனவே சொன் னதை, இப்ப கோத்தபயவே உறுதிப் படுத்தியிருக்காரு. அமெரிக்க குடியுரிமை யையும் சரண்டர் பண்ணிட்டாரு. ஏற்கனவே மகிந்த ராஜபக்சே பதவியில் உட்கார்ந்து தமிழினத்தை அழிச்சிட்டார். மிச்சமிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களான இஸ்லாமியர் களையும் கிறிஸ்துவர்களையும் முழுசா அழிச்சிட்டா, இலங்கையை ஒட்டுமொத்த சிங்கள பவுத்த நாடா ஆக்கிடலாம்ன்னு நினைச்சிதான், கோத்தபய அதிபராகத் துடிக்கிறார். அதற்கான முன்னோட் டம்தான் அண்மையில் சர்ச்சுகளில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள். அண்ணன் தம்பி ரெண்டு பெருமே டேஞ்சரஸ் பார்ட்டிகள்தான்னு இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தினர் பயப்படுறாங்க.''

இறுதிச்சுற்று!

தோப்பிலிருந்து விலகும் தனிமரம்!

தேர்தல் முடிவுகள் வரும் முன்னே அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அக்கட்சியின் எம்.எல்.ஏ. கடந்த நக்கீரன் இதழில் ‘கொங்குமண்டல அ.தி.மு.க.வில் புதிய புயல்’ என அமைச்சர் கருப்பணனுக்கும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும் ஏற்பட்ட கோஷ்டி யுத்தத்தைக் கோடிட்டு காட்டியிருந்தோம். கடந்த மே 20-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்த முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், ஜெ.. பேரவை இணைச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம்கொடுத் தார். “"கொஞ்சம் பொறுங்க… ரிசல்ட்டுக்கப்புறம் உங்களுக்கான மரியாதை கிடைக்கும்' என எடப்பாடி சமாதானப்படுத்தியும், கண்டுகொள்ளாமல் வெளியேறிவிட்டார். தோப்பு அணியைச் சேர்ந்த மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி. சிவசுப்பிரமணியம், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோரும் தோப்பு வழியில் நடக்கத் தயாராவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சரிந்தது தனிமரமா- தோப்பா என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள்தான் சொல்லும்!

-ஜீவா தங்கவேல்