தமிழ்நாட்டுக்கு பாதை காட்டும் ஹரியானா பாஜக.. - மரியம்குமாரன்

ff

ந்தத் தலைப்பே பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

சமூகநீதி மாநிலம் ஆகிய தமிழ் நாட்டிற்கு சமூக அநீதிக் கட்சியான பா.ஜ.க. எப்படி வழிகாட்ட முடியும்..? என்று பலருக்கும் ஐயம் எழலாம்.

சட்டமன்றத்தில் நிர்வாணச் சாமியார் தருண்சாகரை சபாநாயகருக்கு அருகில் அமரவைத்து நாட்டின் பரிசுத்தம்(?) தொடங்கி பாலுறவு வரைக்குமான உரையாற்ற வைத்தது பா.ஜ.க. அரசு. அந்த வழிகாட்டுதலை நாம் எடுத்துக் கொள்ளச்சொல்லவில்லை. நிர்வாண சாமியாரை சட்டமன்றத்தில் உரையாற்ற வைத்துவிட்டு கர்நாடகாவில் புர்கா அணிந்த

ந்தத் தலைப்பே பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

சமூகநீதி மாநிலம் ஆகிய தமிழ் நாட்டிற்கு சமூக அநீதிக் கட்சியான பா.ஜ.க. எப்படி வழிகாட்ட முடியும்..? என்று பலருக்கும் ஐயம் எழலாம்.

சட்டமன்றத்தில் நிர்வாணச் சாமியார் தருண்சாகரை சபாநாயகருக்கு அருகில் அமரவைத்து நாட்டின் பரிசுத்தம்(?) தொடங்கி பாலுறவு வரைக்குமான உரையாற்ற வைத்தது பா.ஜ.க. அரசு. அந்த வழிகாட்டுதலை நாம் எடுத்துக் கொள்ளச்சொல்லவில்லை. நிர்வாண சாமியாரை சட்டமன்றத்தில் உரையாற்ற வைத்துவிட்டு கர்நாடகாவில் புர்கா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற பா.ஜ.க.வின் முரண்பட்ட நிலைப்பாட்டையும் நாம் வழிகாட்டுதலாக கொள்வதில்லை .

hh

மாறாக, ஹரியானா பா.ஜ.க. முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான அரசு அண்மையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. ரூபாய் 30 ஆயிரத்துக்கு உட்பட்ட ஊதியம் தரப்படும் வேலைகளில் உள்ளூர் இளைஞர் களுக்கு 75 விழுக்காடு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

அந்த சட்டத்திற்கு அம்மாநில உயர்நீதி மன்றம் பிப்ரவரி 3ஆம் தேதியன்று இடைக்காலத் தடை விதித்தது.

இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ் மற்றும் பி.எஸ். நாராயண சின்ஹா ஆகியோர் இது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல என்று கூறினர்.

இது தங்களுடைய தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக தொழில் அதிபர்களின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது .

ஹரியானா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அந்த சட்டம் செல்லும் என்று கூறியிருக்கிறது.

உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கியும் இருக்கிறது. இது பிப்ரவரி 18, 2022 நாளேடுகளில் முதல் பக்கச் செய்தியாக வந்திருக்கிறது. மாதச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் கீழுள்ள வேலை வாய்ப்பு களில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடென்றால், அதனைத் தமிழ்நாட்டில் கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்காது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பணி வாய்ப்புகளை கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க.வின் பின்னணியோடு வடநாட்டுக்காரர்கள்தான் ஆக்ரமித்திருக் கிறார்கள். திட்டமிட்ட வடவர் குடியேற்றங்களும் இங்கே நடந்துவருகின்றன .

தமிழ்நாட்டில் தங்களுக்கு ஆதர வானவர்களை குடியேற்றி, அவர்களை தொழில் துறையில் முன்னணி வகிக்க செய்து தங்களுக்கான ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பா.ஜ.க.வின் அரசியல் திட்டமாக இருக்கிறது. அதனால்தான் ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அவசரமாகப் புகுத்தினர்.

ஹரியானாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது சட்டபூர்வமானது என்றால் தமிழ்நாட்டுக்கும் அது பொருந்துமே. விழிப்போடு செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு அதற்கான பணிகளை இன்னும் முனைப்போடு செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர் பார்ப்பாகும்.

nkn230222
இதையும் படியுங்கள்
Subscribe