சென்னை அடையாறில் இயங்கிவரும் கலாஷேத்ரா கல் லூரியில், மாணவிகளிடம் பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இவ்விவகாரத்தின் தொடக்கத்தில், அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநரான லீலாசாம்சன், பேராசிரியர் ஹரிபத் மன் கல்லூரி மாணவி ஒருவருடன் தகாத உறவிலிருந்து, அம்மாணவி கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்த தாக மாணவியின் பெயரோடு பதிவிட்டு, சட்டப்பிரச்சனைக்குப் பயந்து அப்பதிவை உடனடியாக நீக்கியிருந்தார். இப்படியாகப் பற்றவைக்கப்பட்ட நெருப்பை அணைப்பதற்காக கலாஷேத்ரா நிர்வாகம், தாங்களே இன்டெர்னல் கமிட்டிமூலம் விசாரித்ததாகவும், அப்படியான சம்பவம் நடக்க வில்லையென மாணவிகளே தெரிவித்ததாகவும் கூறி முற்றுப்புள்ளி வைக்க முயன்றது.
இந்நிலையில், நக்கீரனுக்கு பேட்டியளித்த முன்னாள் மாணவியான மீராகிருஷ்ணன், அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்தினார். ஒருபுறம், கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் தீவிரமாக, இன்னொருபுறம், மீராகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், ஹரிபத்மன் மீது மூன்று பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, சென்னை, மாதவரத்தில் தனது தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்ம னை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்படியும், ஹரிபத்மனின் பெண் தோழி, போலீசாருக்கே சவால்விடுக்க, போலீசார் தங்கள் பாணியில் பேச, அங்கே பதுங்கியிருந்த ஹரிபத்மன் கைதானார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி, ஆய்வுக்கு அனுப்பியு ள்ளனர்.
எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்தில் வைத்து ஹரிபத்மனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "நான் கேரளா வில் பிறந்திருந்தாலும் கலாஷேத்ரா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. எனக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடனம் சொல்லிக் கொடுக் கும் பொழுது மாணவி களிடம் தொட்டுப் பேசிப் பழகியிருக்கிறேன், கண் டிப்பாக இருந்துள்ளேன். இதை மாணவிகள் தவ றாகப் புரிந்துகொண்டு, என் மீது புகார் கூறியுள் ளார்கள்''. என்று தெரி வித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி யின் தாயாரும் புகார் தெரிவித்துள்ளார். நடனம் சொல்லித் தருவதாக வீட்டிற்கு அழைத்ததும், தன்னிடம் சீண்டலில் ஈடுபட்டதும், தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததையும் மகள் தெரிவித்ததால், மானத்தை விற்று கலையைக் கற்றுக்கொள்ளும் அவசியமில்லை என்றுகூறி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கேரளாவிற்கு வந்து விட்டாள். அதுகுறித்து நிர்வாகத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஹரிபத்மனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி முடிக்க, அக்கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, இன்டர்னல் கமிட்டி நிர்வாகி உமா மகேஸ்வரி ஆகியோர், மகளிர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித் தனர். அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேராசிரியர்களும், கல்லூரி வளாகத்திற்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதோடு, ஹரிபத்மன், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத், சஞ்ஜித்லால் ஆகியோரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது விசாரணையை ஏப்ரல் நான்காம் தேதி துவங்கியது. இந்நிலையில் கலா ஷேத்ராவின் இன்டெர்னல் கமிட்டி நிர்வாகி வழக் கறிஞர் அஜிதா, நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்து உள்விசாரணை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், ஹரி பத்மனின் மனைவி, "என் கணவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக, இரண்டு பேராசிரியர்களின் தூண்டுதலில் அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். முன்னாள் மாணவியைத் தூண்டிவிட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் பணியாற்றும் ஒருவர் நம்மிடம், "மாணவிகள் குறிப்பிடும் அனைத்தும் உண்மைதான்.
ஹரிபத்மனின் மனைவி திவ்யா ஹரிபத்மன், காதல் திருமணம் செய்ய உதவியவர்கள் மீதுதான் தற்போது புகாரளித்துள்ளார் திவ்யா. முன்னாள் இயக்குநர் லீலாதாம்சன்தான் அவர்களின் குழந்தைக்கு பெயர் வைத்தவர். ஹரிபத்மன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி திவ்யா பலரிடம் புலம்பியிருக்கிறார். இந்நிலையில், திவ்யா மீது இரக்கப்பட்டுதான், லீலாசாம்சன், இங்கேயே திவ்யாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இது திவ்யாவின் மனசாட்சிக்கு தெரியும்.
ஹரிபத்மன் குறித்து பிரதமர் வரை 12 மாணவர்கள் புகாரனுப்பி யுள்ளனர். சஞ்ஜித்லால் மீது இன்டர்னல் கமிட்டியில் 4 மாண வர்கள் புகாரளித்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் நடந்த கூர்ம அவ தாரம் நிகழ்ச்சியில் ஒரு மாணவ னின் பிரைவேட் பார்ட்டில் கை வைத்து அசிங்கம் செய்த புகார் அவர் மீது உள் ளது. சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகா மாநி லத்தை சேர்ந்த ஒரு பெண் ஹரிபத்மனால் கர்ப்பம் ஆனதாகவும், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவரை, வலுக்கட்டாயமாகக் கருக் கலைப்பு செய்யவைத்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், ஹரிபத்மனையும், மற்ற குற்றவாளிகளை யும் காப்பாற்றுவதற்காக, பிராமணர்கள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைப்பதாகக்கூறி இவ்வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்'' என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.