ழுத்து நிறைய டாலடிக்கும் தங்க நகைகள். பத்து விரல்களிலும் மோதிரங்கள். கையில் தடிமனான பிரேஸ்லெட். என்று தோராயமாக இரண்டு கிலோவுக்கும் மேலான எடைகொண்ட நகைகள் என தனித்துவமான அடையாளமுடையவர், "பனங்காட்டுப் படை' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார்.

hari nadar

ஜனவரி 28 அன்று காலை கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்திறங்கிய ஹரிநாடாரை ரவுண்டப் செய்து அள்ளிச்சென்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். ""இந்த நகைகள் எங்கே வாங்கினீர்கள், இதன் எடை எவ்வளவு, வருமான வரி கட்டினீர்களா, என்ன தொழில் செய்கிறீர்கள், தொழிலுக்குரிய அசஸ்மெண்ட் உண்டா'' என்று ஹரி நாடாரிடம் ஐ.டி.யினர் விசாரித்ததாகத் தெரிகிறது.

இரண்டாம் நாள் இரவு நேரம் ஐ.டி.யினரின் விசாரணையிலிருந்து வெளியே வந்த ஹரிநாடாரை தொடர்புகொண்டு பேசியபோது, “""வரப்போகும் தேர்தல் விஷயமாக நாகர்கோவிலில் கட்சியினரைக் கூட்டி ஆலோசனை செய்வதற்காக சென்னையிலிருந்து கிளம்பி காலை 11 மணியளவில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்த என்னைப் போலீசோடு வழிமறித்த சிலர் அடையாள அட்டையைக் காண்பித்து, நாங்கள் வருமான வரித்துறையின் இன்வெஸ்டிகேசன் அதிகாரிகள். கேரளப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்று சொல்லி என்னைக் வலுக்கட்டாய மாக காரில் ஏற்றிக் கொண்டு கேரள வரு மான வரித்துறை அலுவல கம் கொண்டு சென்றனர்.

Advertisment

நான் முறையாக வருமான வரி கட்டுபவன். ஒளிவுமறைவு தொழில் பண்ணல. இதே கெட்டப்புலதான் தேர்தல்ல நிக்கிறப்ப நாமினேசன் ஃபைல் பண்ணுனேன். வரப்போற தேர்தல்லயும் நிக்கப்போறேன். தேர்தல் நாமினேஷன் தாக்கல் பண்ணப்ப அந்தக் கணக்குலயும் இந்த நகையைக் காட்டியிருக்கேன்’’ என்றேன். அதற்கான ஆவணத்தைக் கேட்டார்கள். உடனே நான் எனது ஆடிட்டருக்குத் தகவல் கொடுத்து ஆவணங்களை மெயில் பண்ணச் சொன்னேன்.

மெயிலில் வந்த ஆவணங்களைச் செக்கப் செய்தார்கள். பிறகு யோசித்தவர்கள் "நீங்கள் எங்களுக்குக் காட்டிய கணக்கிற்குப் பிறகும் பணவரவு செலவு செய்திருக்கிறீர்கள். அதற்கான வருமான வரி விவரங்கள் இல்லையே' என நெருக்கடி கொடுத்தார்கள்.

"சார் அதற்கு வரிக்கட்ட மார்ச் வரை கெடு இருக்கிறது. நான் வரியைச் செலுத்துவேன். என்னைத் தேவையில்லாமல் பிடித்து வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது' என்றேன்.

Advertisment

பின்னர் வந்த அதிகாரிகள், நடந்த டிரான்ஷாக்சனுக்கான வருமான வரியை டி.டி.யாக எடுத்துக்கொடுங்கள் என்று என்னைக் கட்டாயப்படுத்தி வங்கிக்குக் கூட்டிப்போய் ஒரு கோடியே 52 லட்சத்திற்கான டி.டி.யை வாங்கிக்கொண்டு மறுநாள் இரவில்தான் வெளியே அனுப்பினர்.

அரசியல்ரீதியாக என்னை மடக்க மேலே யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இத்தனை பெரிய கெடுபிடிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சுகிறவ னில்லை'' என்றார்.