Advertisment

குடிசையில இருந்த மகிழ்ச்சி அரசுக் குடியிருப்புல இல்லை… -விரக்தியில் நரிக்குறவப் பெண்கள்!

ii

மிழக -ஆந்திர எல்லையில் அமைந்துள் ளது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பத்திரப்பள்ளி கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காட்சியளிக்கும் மலைக்கிராம பகுதி. இங்கு பழங்குடியின மக்கள் (நரிக்குறவர்) வசிக்கும் பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக ஊருக்கு வெளியே கீற்றுக் கொட்டகை வீடுகளில் வசித்துவந்தனர். அந்த கீற்றுக் கொட்டகைகளில் மழைக்காலங்களில் வாழ்வது சிரமமான ஒன்று. இவர்களுக்கு சொந்தமாக இடம் இல்லாததால் சாலையோர மாகவே இருந்துவந்தனர்.

Advertisment

nn

நாடோடியாக ஊர் ஊராகச் சுற்றிவந்தாலும் தங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு வேண்டுமென்பது இவர்களின் பல்லாண்டு கால கோரிக்கை. கடந்த 2019-ஆம் ஆண்டு இங்குள்ள நரிக்குறவ மக்களைக் கணக்கெடுத்தனர். 40 குடும்பங்கள் இருந்தன, ஆவணங்கள் அடிப்படையில் 37 தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டது. தங்க ளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள் ளது பழங்குடியின மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது, மக

மிழக -ஆந்திர எல்லையில் அமைந்துள் ளது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பத்திரப்பள்ளி கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காட்சியளிக்கும் மலைக்கிராம பகுதி. இங்கு பழங்குடியின மக்கள் (நரிக்குறவர்) வசிக்கும் பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக ஊருக்கு வெளியே கீற்றுக் கொட்டகை வீடுகளில் வசித்துவந்தனர். அந்த கீற்றுக் கொட்டகைகளில் மழைக்காலங்களில் வாழ்வது சிரமமான ஒன்று. இவர்களுக்கு சொந்தமாக இடம் இல்லாததால் சாலையோர மாகவே இருந்துவந்தனர்.

Advertisment

nn

நாடோடியாக ஊர் ஊராகச் சுற்றிவந்தாலும் தங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு வேண்டுமென்பது இவர்களின் பல்லாண்டு கால கோரிக்கை. கடந்த 2019-ஆம் ஆண்டு இங்குள்ள நரிக்குறவ மக்களைக் கணக்கெடுத்தனர். 40 குடும்பங்கள் இருந்தன, ஆவணங்கள் அடிப்படையில் 37 தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டது. தங்க ளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள் ளது பழங்குடியின மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது, மகிழ்ச்சியடைந் தனர். அதன்பின் நடந்தவற்றை நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராணி நம்மிடம் பேசும்போது, “"இங்கு இப்போது சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சில வீடுகள் கட்டி முடிக்கப்பட்டாலும், பல வீடு கள் முடிவுபெறாத நிலையில் உள்ளது. பல்வேறு கனவுகளோடு அனைவரும் அரசு தொகுப்பு வீட்டில் குடியேறினோம். இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. மின்சாரம் கிடையாது. மெழுகு வத்தி வெளிச்சத்தில்தான் இரவில் இருக்கிறோம். வீட்டுக்கு மட்டுமில்லை, தெருவுக்கும் மின்சார வசதி இல்லை. சோலார் மூலம் இயங்கும் மின் விளக்குகள் அமைத்துத் தருகிறோம் என்று அதி காரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் தெரிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, மூன்று ஆண்டு களாக மின்சாரம் இல்லாமல்தான் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மின்சாரம் இல்லாமல் எங்கள் குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடியவில்லை.

Advertisment

வீட்டின் தரம் மிகவும் மோச மான நிலையில் உள்ளது. குடிதண்ணீர் கிடையாது, சாலை வசதி, கழிவறை வசதி இல்லை. நாங்கள் வாழ்வதற்கு உண்டான எந்த ஒரு அடிப் படை வசதியும் அரசு தரப்பில் செய்து தரவில்லை. மழைக் காலத்தில் மழை நீர் செல்ல வழியில்லாமல் அனைத்து நீரும் வீட்டின்முன் குட்டைபோல் தேங்குகிறது. தரமற்ற முறையில் அவசரமாக வீடுகள் கட்டப்பட்டு அதிகாரிகள் வந்து திறப்பு விழா நடத்திவிட்டு புகைப்படம் எடுத்துச் சென்றுவிட்டனர்.

பெண்களுக்கு மானம்தான் முக்கியம். பல்வேறு திட்டங் களில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் எங்களுக்கு கழிவறை வசதி, குளியலறை வசதி செய்துதரவில்லை. நாங்கள் புடவைகளை தடுப்பாகக் கட்டிக்கொண்டு குளிக்கின்றோம். ஆரம்பத்தில் 37 குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால் எந்த அடிப்படை வசதியும் செய்யப்படாத இந்த இடத்திலிருந்து பல்வேறு குடும்பங்கள் புலம்பெயர்ந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். எங்களால் எங்கும் செல்ல முடியவில்லை. வாழத் தகுதியற்ற இடமாக இந்த இடம் உள்ளது. குடிசை வீட்டில் வாழும்போது நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். தமிழக அரசு அடிப்படை வசதிகளை எங்களுக்கு செய்து தரவேண்டும்''’என்றார்.

பேரணாம்பட்டு வட்டார ஊரக வளர்ச்சி அலுவலரை அலுவலக மொபைல் எண்ணில் பலமுறை தொடர்புகொண்டபோதும் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, "ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு சி.யூ.ஜி. நம்பர் அரசு தந்துள்ளது, அதற் கான மாத பில் தொகையை அரசாங்கம் செலுத்துகிறது. இந்த நம்பரைத்தான் பொதுமக்களுக்கும் தந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் புது நம்பரிலிருந்து யார் அழைத்தாலும் எடுக்கமாட் டார்கள், எடுப்பதில்லை' என்றார்கள்.

dd

இந்த மக்களின் நிலைகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமியிடம் முறையிட்டதும், "நாங்கள் இப்போது முதல்வர் குறை கேட்பு திட்டத்தில் மனு வாங்கச் சென்றபோது அந்த ப்பகுதி மக்கள் எங்களிடம் மனு தந்தார்கள். அதில், நரிக்குறவ மக்கள் சிலருக்கு வீடு வழங்க வில்லை, அவர்களுக்கு வழங்கவேண் டும் எனக் குறிப்பிட்டு மனு தந்தார்கள். அவர்களுக்கு வீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துவருகிறோம். வி.ஏ.ஓ மற்றும் தாசில்தார் மூலம் அரசு புறம்போக்கு இடம் எங்குள்ளது என பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இடத் தைக் கண்டறிந்து அவர்களுக்கு வீடு கட்டித்தர முடிவுசெய்துள்ளோம். அங் குள்ள மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிக் குறைபாடுகள் குறித்து யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. நீங்கள் சொன்னதை நான் உடனே பேரணாம் பட்டு பி.டி.ஓ.வுக்கு தெரியப்படுத்தி, அவர்களை நேரில் சென்று விசாரிக்கச் சொல்லி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறேன்''’என்றார்.

நரிக்குறவ மக்களின் உரிமை களுக்கு குரல் கொடுக்க அமைப்பு ரீதியாக, அரசியல் ரீதியாக யாரு மில்லை என்பதற்காக அவர்களை மனிதர்களாகக்கூட மதிக்கமாட் டேன் என பெரும்பாலான அதிகாரிகள் நினைப்பது சரியா?

nkn310824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe