மகிழ்ச்சி பொங்கவில்லை! விவசாயிகள், வணிகர்கள் வேதனைப்பொங்கல்!

jj

பொங்கல் பண்டிகை என்றாலே நகரப் பகுதிகளில் உள்ள துணிக்கடை, மளிகைக்கடை உட்பட பல இடங்களில் கூட்டம் அள்ளும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை அப்படியே மாறிவிட்டது.

fr

தமிழகத்திலேயே அதிக கிராமங்கள் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட கிராம மக்கள் பண்டிகைக்கு தேவை யான பொருட்களை வாங்க நகரத்துக்குதான் வருவார்கள். திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் பொங்க லுக்கு முன்பு நாம் பார்த்த நகரப்பகுதிகளிலும் மார்க்கெட் டில் மக்கள் கூட்டமே இல்லை. மக்கள் பண்டிகையை எப்படி கொண்டாடினார்கள் என்பதை பண்டிகை சார்ந்த பொருட் களின் வியாபாரத்தைக் கொண்டே அறிந்துகொள்ள லாம் என்பதால், பொங்கல் வியாபாரம் எப்படியிருந்தது என அறிய தைப் பொங்கலன்று மதியம் வியா பாரிகளை சந்தித்து கேட்டோம்.

கரும்பு வியாபாரி எடப்பாளையம் கோபாலகிரு

கரும்பு வியாபாரி எடப்பாளையம் கோபாலகிருஷ்ணன், ""பண்ருட்டியில் இருந்து 200 கட்டுகள் கரும்பு இறக்கி விற்பனைக்கு வச்சிருக் கேன். இதுவரை 30 கட்டுதான் விற்பனையாகி இருக்கு. மாட்டுப்பொங்கலுக்கு பெருசா வியா பாரம் இருக்காது. 6 வருஷமா பொங்கல் கரும்பு விற்பனை செய்யுறேன். முதல் முறையா போட்ட முதலீட்டையே திரும்ப எடுக்கமுடியாத ஆண்டா இந்த பொங்கல் பண்டிகை அமைஞ் சிடுச்சு''’என்றார் கவலையோடு.

ff

சாலையோர துணிக்கடை வியாபாரி மதுரை இருளப்பன், குரு ஆகிய இருவரும் நம் மிடையே பேசியபோது, ""மதுரையிலிருந்து பொங்கல் பண்டிகையின்போது இங்க வந்து துணிக்கடை போடுவோம். இந்த பொங்கலுக்கு கடைபோட்டு 10 நாளாச்சி. லாட்ஜல ரூம் வாடகை ஒரு நாளைக்கு 400 ரூபாய், இரண்டு பேருக்கு 3 வேளை சாப்பாடு, டீ செலவுன்னு தினமும் 1000 ரூபாய் வரை செலவாகுது. ஆனா நேத்து (போகிப் பண்டிகையன்று) வியாபாரம் வெறும் 700 ரூபாய்தான். இப்படியொரு மோசமான பொங்கல் விற் பனையை இத்தனை வருடத் தில் நாங்கள் செய்ததில்லை''’ என வேதனையோடு சொன்னார் கள்.

மற்றொரு சாலையோர துணி வியாபாரி அபுதாஹீர், ""பழனியில் இருந்து இங்க வந்து கடை போட்டிருக்கேன். பொங்கலுக்கு முன்னாடியே புதுத் துணிகளை வாங்கி விற் பனைக்கு வைப்போம். அதில் வரும் லாபத்தின் மூலமா ஒரு மாசத்துக்கு பிரச்சினையில்லாம வாழ்க்கையை ஓட்டலாம். இந்த வருடம் பொங்கல் சேல்ஸ் சுத்தமா இல்ல. முதலீட்டுக்கு எப்படி வட்டி கட்டறதுன்னு தெரியலை''’என்றார்.ff

கயிறு வியாபாரி எடப்பாடி அன்பழகன், ஐந்துரை இரு வரும்... ""திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செங்கம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிக்கு மட்டும் 300 கயிறு வியாபாரிகள் விற்பனைக்காக எடப்பாடியில் இருந்து வந்து கடை போட்டிருக்கோம். ஒரு இடத்துலயும் ஒருத்தருக்கும் சொல்லிக்கற அளவுக்கு வியா பாரமில்லை''’’என்றார்கள்.

பொங்கல் பானை வியாபாரி சரசு என்கிற மூதாட்டி, ""பெரிய, பெரிய பானையில்தான் பொங்கல் வைப்பாங்க. இப்போ சின்ன பல்லா (பானை)வில்தான் பொங்கல் வைக்கறாங்க. போன வருஷம் 70 பொங்க பானை வித்துச்சி. அதனால் இந்த வருஷம் கூடுதலா விற்கும்னு கணக் குப் போட்டு 150 பல்லா வாங்கி வந்தோம். ஆனா 30 பல்லாக்கூட விற்கல. அடுக்கி வச்சது அப்படியே கிடக்கு''’என்றார்.

கலர் கோலமாவு விற்பனை யாளர் ஜக்கையன் மட்டும்... ""போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் கலர் பவுடர் நல்ல வியாபாரமாச் சிங்க''’என்றார்.

பானை வாங்கிய சென் னையைச் சேர்ந்த குடும்பத் தலைவி யமுனாவிடம் பேசியபோது, ‘’""சிட்டியில் கூட பொங்கல் பண் டிகைன்னா பெருசா கொண் டாடமாட்டாங்க. இப்போ பலரும் பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாதுன்னு கொண்டாடத் தொடங்கியிருக்காங்க. அது வும் நம்ம கலாச்சாரப்படி, பழைய வழக்கப்படி பானையில்தான் வைக்கணும்னு குக்கரில் வைப்ப தில் இருந்து மாறிக்கிட்டிருக் காங்க. நான்கூட குடும்பத்தோட பொங்கல் வைக்கத்தான் ஊரில் இருந்து வந்து பானை வாங்கிக்கிட்டு கோயிலுக்குப் போறேன்''’என்றார்.

கலசப்பாக்கம் யாதவர்புரம் விவசாயி ராமகிருஷ்ணன், ""இந்த வருஷமும் மழையில்லை. விவசாயிகிட்ட பணமும் இல்லை; வேற எங்கயும் வேலை வாய்ப்பில்லை. அடுத்த வருஷம் இதைவிட மோசமாதான் இருக்கும்'' என்றார்.

சிறு வியாபாரிகளும் இப்படி கண்ணீர்விடத் துவங்கியுள்ளார்கள் என்பது வேதனையின் உச்சம். பெரிய பெரிய கார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பிஸ்கட் கம்பெனிகள், துணி உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமில்லை. சாதாரண சிறு வியாபாரமும் படுத்துவிட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டதையே இந்தப் பொங்கல் பண்டிகை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

-து.ராஜா

nkn180120
இதையும் படியுங்கள்
Subscribe