மீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

Advertisment

இந்த வெற்றி வரும் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநில தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisment

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வாக்குக்கு பத்தாயிரம் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா உத்திரபிரதேசத்தில் ராமர் கோயில் கட்டியதைப்போல பீகாரில் சீதைக்கு கோயில் கட்டப்போவதாக அறிவித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பீகார் தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதம் முன்பிருந்தே பீகாரிலுள்ள கிராமங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல லட்சம் பேரை, உத்தரப்பிரதேசத்திலுள்ள ராமர் கோயிலுக்கு அழைத்துச்சென்று, பா.ஜ.க.தான் ராமர் கோயில் கட்டியது என்ற பிரச்சாரத்தை முன்வைத்தது. இந்த வியூகமும் பீகார் தேர்தலில் தே.ஜ. கூட்டணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளது. 

Advertisment

அதே வியூகத்தை தற்போது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்திலுள்ள முக்கிய ஆன்மீக தலங்களில் ஒரு பிரச்சார வியூகத்தை பா.ஜ.க. கையிலெடுத்துள்ளது. இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகத் தலங் களில் சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மீகத் தைப் பற்றி பேசுவதைப்போல ஆரம்பித்து, திராவிட மாடல் ஆட்சியிலுள்ள குறைகளைப் பேசுவதை வியூகமாக்கியுள்ளனர். ஓட்டுக்கு பத்தா யிரம் என்பதைவிட இந்த ஆன்மீகப் பிரச்சாரம் பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் கைகொடுக்குமென எதிர்பார்க்கின்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மீது சவாரி செய்து தமிழகத்தில் காலூன்றி, பிறகு அக்கட்சியை ஓரம்கட்டி பா.ஜ.க.வை தமிழகத்தில் வேரூன்ற வைக்கும் வியூகமே இது. பீகாரில் சீதைக்கு கோயில் என்ற பிரச்சாரம் கைகொடுத்ததுபோல ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு 100 அடி சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. 

தமிழகத்தில் பூர்வகுடி சாமிகள் எனப்படும் சிறுதெய்வங்களான கோட்டைசாமி, மாரியம்மன், எல்லை சாமி, பைரவர் சாமி, முனீஸ்வரன் போன்ற குலதெய்வ வழிபாட்டை திசை திருப்பி, வடமாநிலத்தவர் வழிபடும் அனுமன் போன்ற சிலைகளை பொதுவெளியில் அமைக்கும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது. 

ஏற்கனவே ஆண்டுதோறும் இந்து முன்னணி முன்னின்று நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல பிரச்சினைகளை மக்களிடையே ஏற்படுத்தி பிரிவுகளை கொண்டுவரும் முயற்சியில் ஈடு பட்டுள்ள இந்துத்துவா, அடுத்தகட்டமாக ராமேஸ்வரம் கடற்கரையில் வெட்ட வெளி யில் 100 அடி அனுமன் சிலை அமைக்கத் திட்டமிட்டு வருகின்றது.