த்தரபிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் ஒரே துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தில் தலித் பெண்களுக்கெதிராக குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன.

Advertisment

s

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டு தலித் சகோதரிகள் தங்கள் துப்பட்டாவினால் தனித் தனியாக மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதற்கும் முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளம் பெண்ணை, மேல்தட்டு வர்க்கமான தாகூர் ஜாதியை சேர்ந்த நான்கு பேர் கும்பல், கடுமையாகத் தாக்கி வன்புணர்வு செய்து வீசியது. அப்பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாள். அப்பெண்ணின் மரணம் உத்தரபிரதேசத்தில் பெருங்கொந் தளிப்பை ஏற்படுத்தியதால், போலீசாரே இரவோடிரவாக அவளது உடலை ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று, அதிகாலை 2.30 மணிக்கு தீயிட்டு தகனம் செய்தனர். தற்போது, ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, உத்தர பிரதேசம் ஃபரூக்காபாத் மாவட்டத்திலுள்ள பகௌதிபூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 18 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகள், அங்குள்ள மாந்தோப்பு ஒன்றிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டனர். இருவரும் ஒரே துப்பட்டாவில் தூக்கிட்டுத் தொங்கியிருப்பது தான் இது கொலையாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருவருமே பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கக்கூடிய நெருங்கிய தோழிகள் எனக் கூறப்படுகிறது. முந்தைய நாள் இரவில் இருவரும் அருகிலுள்ள கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்ச்சி யில் கலந்துகொள்ளச் சென்றிருக் கிறார்கள். மறுநாள் காலையில் தான் இவர்கள் தூக்கிட்டு தொங் கிய நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் இரு சிறுமி களின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். உடற்கூராய்வில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடற்கூராய்வுக்கு அனுப்புமுன்பே இரு சிறுமிகளும் தற்கொலைதான் செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதை அச்சிறுமிகளின் பெற்றோர் மறுத்துள்ளனர். ஒரே துப்பட்டாவில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்வது எப்படி சாத்தியமாகும்? என்கிறார் ஒரு பெண்ணின் தந்தை. மேலும், ஒரு பெண்ணின் உடலில் முட்கள் குத்திய காயங்களும், பெல்ட்டின் தடங்களும் பதிந்துள்ளன. எனவே கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும், தூக்கில் தொங்கிய பெண்களில், எடை அதிகமுள்ள பெண்ணின் உடல் உயரத்திலும், எடை குறைவாகவுள்ள பெண்ணின் உடல் தாழ்வாகவும் தொங்கியதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்பெண்கள் தூக்கில் தொங்கிய இடத்தினருகே ஒரு பெண்ணின் உறவினரின் செல்போனும், ஒரு சிம் கார்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளிவரக்கூடும்!

Advertisment