கொரோனா நிதியில் கைவரிசை! -தேனி மாவட்ட சலசலப்பு!

tth

தேனி மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளே கொரோனா மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

கடந்தாண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த நேரத்தில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவத்தொடங்கியது. முதல்வரும் அமைச்சர்களும் பம்பரமாகச் செயல்பட்டு இரண்டாவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டி மாவட்டந்தோறும் கொரோனா தடுப்புப் பொருள்கள் வாங்க அரசு சார்பில் நிதிகளை ஒதுக்கிவந்தனர். அதன் அடிப்படையில்தான் தேனி மாவட்ட சுகாதாரத் துறைக்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய தேசிய நல குழுமமும் 70 லட்சம் ஒதுக்கியது. இதுதவிர முக்கிய பிரமுகர்களும் பல லட்சங்களை நிவாரண நிதியாகக் கொடுத்தனர்.

tt

அரசு ஒதுக்கிய நிதியில் நிவாரணப் பொருட்கள் வாங்காமல் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் முரளிதரனு

தேனி மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளே கொரோனா மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

கடந்தாண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த நேரத்தில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவத்தொடங்கியது. முதல்வரும் அமைச்சர்களும் பம்பரமாகச் செயல்பட்டு இரண்டாவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டி மாவட்டந்தோறும் கொரோனா தடுப்புப் பொருள்கள் வாங்க அரசு சார்பில் நிதிகளை ஒதுக்கிவந்தனர். அதன் அடிப்படையில்தான் தேனி மாவட்ட சுகாதாரத் துறைக்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய தேசிய நல குழுமமும் 70 லட்சம் ஒதுக்கியது. இதுதவிர முக்கிய பிரமுகர்களும் பல லட்சங்களை நிவாரண நிதியாகக் கொடுத்தனர்.

tt

அரசு ஒதுக்கிய நிதியில் நிவாரணப் பொருட்கள் வாங்காமல் கோடிக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர், உடனே ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியான உமாமகேஸ்வரி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில், அரசு ஒதுக்கிய நிதியை முறையாக அதிகாரிகள் செலவு செய்யாமல் முறைகேடு செய்திருப்பது தெரிய வர, அந்த அறிக்கையை சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பியிருக்கிறார்.

இது சம்பந்தமாக சுகாதாரத் துறையில் பணிபுரியும் சில பணியாளர்களிடம் கேட்டபோது, “"கொரோனா இரண்டாவது அலையின்போது தேனி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மருந்து இருந்தும்கூட அதை பொது மக்களுக்குப் போடாமல் மெத்தனம் காட்டிவந்தனர். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் இங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளை சத்தம் போட்டுவிட்டுப் போனார்கள். அதோடு கொரோனா மையங்கள் மற்றும் வீடுகளிலும் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள்கூட கொடுக்கமுடியாமல் தட்டுப்பாடாக இருந்தது.

ஓ.பி.எஸ். இதைவைத்து அரசியல் செய்ய முயல, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தெரிந்ததின் பேரில் உடனே தனது சொந்தப் பணம் 3 லட்ச ரூபாயைக் கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுக்கச் சொன்னார்.

கோடிக்கணக்கில் குவிந்த நிதியை மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், (தற்போது தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார்) சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளர் மனோஜ்குமார் (தற்போது பழனியில் பணிபுரிந்து வருகிறார்), உதவியாளர் ரவி (தற்போது கண்டமனூரில் பணிபுரிந்து வருகிறார்) ஆகியோர் மோசடி யாகக் கையாண்டிருக்கின்றனர். தஞ்சாவூரிலுள்ள சார் (நஆத) பார்மா கம்பெனி மூலம் மாஸ்க், கையுறை, மாத்திரை மருந்துகள் உள்பட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதாக பொய்யான பில் வாங்கி பல லட்சங்களுக்கு கொள்ளை அடித்திருக்கிறார்கள்

ரோட்டரி, லயன்ஸ் கிளப், மில் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கொடுத்த கொரோனா இலவச நிவாரணப் பொருட்களை எல்லாம் கொரோனா நிதியில் வாங் கியதாக பொய்க் கணக்கு எழுதி அந்த பணத்திலும் பல லட்சங்களைச் சுருட்டியிருக் கிறார்கள். கலெக்டர் அலுவல கத்தில் கொரோனா தடுப்பு கண்ட்ரோல் ரூம் அமைப் பதற்காக ஒரு கோடி ரூபாய் தேசிய நல குழுமத்தால் ஒதுக்கப்பட, அந்தப் பணத்தில் கம்ப்யூட்டர் மற்றும் சேர்கள் வாங்காமலேயே பொய்க் கணக்கு எழுதிச் சுருட்டிவிட்டனர்.

theni

மனோஜ்குமாருக்கு பெரியகுளத்தில் ஒரு லாட்ஜ் இருக்கிறது. அதில் மருத்துவர்கள் தங்கவே செய்யாத நிலையில், அங்கு மருத்துவர்கள் தங்கியதாக கணக்குக் காட்டி பல லட்சம் சம்பாதித்திருக்கிறார். அதேபோல தேனியின் பிரபல லேப் ஒன்றுக்கு அரசின் கொரோனா பரிசோத னைகளை ஒதுக்குவதற்கு கைமாறாக, ஏ.சி ஒன்றை கேட்டு வாங்கியிருக்கிறார். ரமேஷ் குமாரை குளிர்விக்க தான் சம்பாதித்ததில் டி.வி.யும் ஏ.சி.யும் வாங்கி பரிசளித்திருக்கிறார்.

இந்த ரமேஷ்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர். கோவையில் ஊழல் புகாரில் சிக்கிதான் தேனிக்கு மாற்றப்பட்டார். ஆனால் தேனியிலும் கோவையில் செய்ததையே தொடர்ந் திருக்கிறார்.

இந்த விவகாரங்களில் புகார் எழுந்து, கலெக்டர் மேற்பார்வையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகத்தை, ரமேஷ் குமாரும் மனோஜ்குமாரும் சந்தித்து ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டு இடமாறுதல் வாங்கிச் சென்றதுதான் கொடுமை. சுகாதாரத்துறை இயக்குனரும் இதற்கு உடந்தையாக செயல் பட்டிருக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம்''’என்று கூறினார்கள்.

இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது, "கொரோனா நிவாரண நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக எனக்கு புகார் வந்ததின் பேரில் குழு அமைத்து விசாரிக்கச் சொன்னேன். அந்த குழு கொடுத்த விசாரணை அறிக்கையை துறை அமைச்ச ருக்கும் இயக்குனருக்கும் அனுப்பி துறைரீதியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறேன்''” என்று நாசூக்காக முடித்துக்கொண்டார்.

nkn290122
இதையும் படியுங்கள்
Subscribe