"தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப் போல அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் எதிரொலியாக யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் அ.தி.மு.க.வில் வெட்டுக்குத்துகள் நடந்து கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் அ.தி. மு.க. தலைவர்கள்.

ops

"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என்ற பா.ஜ.க. 4 எம்.எல்.ஏ.க்களுடன் ஓய்ந்துபோனது. இந்தத் தோல்வியை பிரதமரும் உள்துறை அமைச்சரும் பெரிதாக ரசிக்கவில்லை. பா.ஜ.க. பெரிதாக கால் ஊன்றாத கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சுற்றி அமைந்துள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம். புதுச்சேரியைச் சுற்றி இந்த மூன்று மாநிலங்களில் ஐம்பது மாவட்டங்கள் அமைந்துள்ளன. செங்கல்பட்டு தொடங்கி தஞ்சை மாவட்டம் வரை தமிழக மாவட்டங்கள் அமைந்துள்ளன.

"புதுச்சேரியில் வெற்றிபெறக் கூடிய நபர்களை கட்சி மாறவைத்து ஆறு எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற வைத்த பா.ஜ.க., ஏனாமில் வெற்றிபெற்ற சுயேச்சையை பா.ஜ.க.வில் இணைய வைத்து ஏழாக கணக்கை மாற்றியது. அத்துடன் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து தனது வலுவை ஒன்பதாக கொண்டுசெல்லப் போகிறது. துணை முதலமைச்சர் நமச்சிவாயம் என மறைமுக பா.ஜ.க. ஆட்சியை நிறுவப்போகிறது. அத்துடன் நிற்காமல் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க.வில் மூன்றுபேரை பா.ஜ.க.விற்கு கொண்டு வரும் வகையில் புதுச்சேரியில். தி.மு.க.வை பா.ஜ.க. உடைக்கிறது. அத்துடன் ரங்க சாமி கட்சியிலும் உடைப்பை நிகழ்த்தி முழுமுதல் பா.ஜ.க. ஆட்சியை புதுச்சேரி யில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது'' என்கிறார்கள் புதுச்சேரி பா.ஜ.க.வினர்.

Advertisment

w

இப்படி ஆபரேஷன் புதுச்சேரியை திட்டமிட்டிருந்த பா.ஜ.க., தமிழகத்தில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய ஓ.பி.எஸ்.ஸை வளைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் வேலுமணியையும் ஜக்கி வாசுதேவையும் கோவா மாநிலத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தையைத் துவக்கியது. வேலுமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்றுதான் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. இதில் உற்சாகமான வேலுமணி, மொத்தமுள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் 20 பேரிடம் பேசி, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நான்தான் வேட்பாளர் என ஆதரவு திரட்டினார். அத்துடன் கோவையில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை "எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பா.ஜ.க.தான் தீர்மானிக்கும்' என பேச வைத்தார்கள்.

ee

Advertisment

பா.ஜ.க.வின் இந்த மூவ் ஓ.பி. எஸ்.ஸை அதிர வைத்தது. அத்துடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், செங்கோட்டையன் ஆகியோரையும் தூண்டிவிட்டது. "வேலுமணி எதிர்க் கட்சித் தலைவர் என்றால் நாங்கள் என்ன அவருக்கு சளைத்தவர்களா?' என அவர்கள் வேலுமணிக்கு போட்டியாக நிற்க ஆரம்பித்தார்கள். அனைவரும் பா.ஜ.க.வை தொடர்புகொண்டார்கள். அவர்களுக்கு வேலுமணிக்கு கிடைத்தது போன்ற வரவேற்பு கிடைக்கவில்லை. எல்லாவற்றக்கும் ஜக்கிதான் காரணம் என அவரைச் சுற்றிவர ஆரம்பித்தார்கள். பலன் கிடைக்கவில்லை.

இதைப்பார்த்த ஓ.பி.எஸ். அலட்டிக்கொள்ளவில்லை. அவர் சசிகலாவுடன் நேரடியாகப் பேசினார். சசிகலா விரிவாக ஓ.பி.எஸ்.ஸிடம் பேசினார். "எடப்பாடியை நான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்கினேன். அவர் என்னிடம் ஒரு ஒப்பந்தம் பேசினார். "ஜெயித்தால் நான் முதலமைச்சர், தோற்றால் நீங்க எதிர்க்கட்சித் தலைவர்' என்றார். அதனால்தான் அவரை முதல்வர் வேட்பாளராக் கினேன்'' என்றிருக்கிறார் ஓ.பி.எஸ்.

அவரிடம் சசிகலா, "நீங்கள் தோற்பதற்கு எல்லா வேலையையும் எடப்பாடி செய்தார். அதில் ஒன்றுதான் தேர்தல் அறிவிப்பதற்கான கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு. உங்கள் எதிர்ப்பை மீறி அது அறிவிக்கப்பட்டது. "அது தற்காலிக மானது' என நீங்கள் சொன்னபோது, "இல்லை... நிரந்தர மானது' என சி.வி.சண்முகம் மூலமும் ராமதாஸ் மூலமும் பேசவைத்தார். தென்மாவட்ட அரசியல் பிரமுகர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, சரத்குமார் போன்றவர்களை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டார்.

போடி தொகுதி என்பது பிரமலைக்கள்ளர்கள் உட்பட 108 சாதியைச் சேர்ந்த சீர்மரபினர் அதிகமுள்ள தொகுதி. வன்னியர் இட ஒதுக்கீட்டால் வெறுப்படைந்த மக்கள் உங்களை எதிர்த்து வேலைசெய்ய நீங்கள் தொகுதியை விட்டு வெளியே போகாமல் தொகுதிக்குள்ளேயே சந்துபொந்துகளில் கூட ஓட்டுக்கேட்டு சுற்றும்படி வைத்தார். அவர் மட்டும் வன்னியர்கள், கவுண்டர்கள் என பாதுகாப்பாக தனது தொகுதியை வைத்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றிவந்தார்'' என சசி விளக்கமாக எடுத்துச் சொல்லிவிட்டு, எடப்பாடி பணம் செலவு செய்ததாக சொல்கிறார். அது என்ன அவரது சொந்தப் பணமா?

e

முன்பு கட்சி நிதி என நீங்கள் கொடுப்பதை நானும் அக்காவும் தேர்தல் நேரத்தில் தருவோம், அதுபோல முக்கியமான பொதுப்பணித்துறை தொழிற்சாலைத்துறையை வைத்திருந்த அவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான உங்களிடம் கட்சி நிதி ஏதாவது தந்தாரா? அந்தப் பணத் தைத்தானே செலவு செய்தார், நான் நான்காவது முறை வேண்டுகோள் வைத்த பிறகு அமித்ஷாவே என்னைக் கட்சியில் இணையுங்கள் என சொன்ன பிறகும் எடப்பாடி இணைக்கவில்லை. அதனால்தானே தென்தமிழகத்தில் அ.தி.மு.க. தோற்றது என சசி விரிவாகப் பேச... "அடுத்து என்ன செய்ய' என சசியிடம் கேட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.

மேலும், பா.ஜ.க. சொன்னாலும் எடப்பாடி மதிக்கமாட்டார். தேர்தல் தோல்விக்கு எடப்பாடியின் அணுகுமுறைதான் காரணம் என பா.ஜ.க. நினைக்கிறது என்கிற கூடுதல் தகவலையும் சசியிடம் பகிர்ந்தார் பன்னீர். இருவரும் இணைந்து பேசி ஒரு அதிரடி திட்டத்தை தயார் செய்தனர்.

இதற்கிடையே பன்னீர் பா.ஜ.க.வை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். எடப்பாடியோ தங்கமணி மூலம் பா.ஜ.க.வை தொடர்புகொண்டார். பன்னீருக்கு கிடைத்து வரும் மரியாதை, அ.தி.மு.க.வின் தோல்விக்குப் பிறகு எடப்பாடிக்கு கிடைக்கவில்லை. ஒருபக்கம் சசி, மறுபக்கம் பா.ஜ.க. என உற்சாகமான பன்னீருக்கு விஜயபாஸ்கர் ஆதரவளித்தார். கடம்பூர்ராஜு, ஆர்.பி. உதயகுமார் என பன்னீர் அணி பலமானது.

ve

அ.தி.மு.க.வின் மூன்று செய்தித் தொடர்பாளர்களை விட்டு, பன்னீர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என பேச வைத்தார். உடனே கே.பி.முனுசாமியை அனுப்பி, பன்னீரிடம் பேசவைத்தார் எடப்பாடி. சமரசமே இல்லை என்ற பன்னீர், கட்சி அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நடுவே எடப்பாடி சொன்ன எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பந்தத்தைப் பற்றிப் பேச, "அப்ப கட்சித் தோற்கும்னு உங்களுக்குத் தெரியுமா?' என எடப்பாடி திருப்பிக் கேட்க... வன்னியர் இட ஒதுக்கீடு, சசிகலா புறக்கணிப்பு இவற்றைப் பற்றி ஓ.பி.எஸ். பேச... "நான்தான் செலவு செய்தேன்' என எடப்பாடி திருப்பியடிக்க... "உங்க சொந்தக் காசையா கொடுத்தீங்க?' என பன்னீர் எகிற... அப்போது பன்னீரை ஒருமையில் தடித்த வார்த்தைகளால் சரமாரியாகத் திட்டினார் வேலுமணி. மூன்றுமணி நேரம் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நேரடி வாக்குவாதம் நடக்க... தகவல் அறிந்த அ.தி. மு.க. தலைமைக்கழகத்தில் திரண்டிருந்த தி.நகர் சத்யாவின் ஆட்கள், பன்னீருக்கு ஆதரவாக கோஷம்போட்ட அவரது ஆதரவாளர்கள் மேல் பாய்ந்தார்கள்.

"முதலமைச்சராக இருந்ததால் காரை, கட்சித் தலைமையக வாசலுக்கு நேரா நிறுத்தலாம். இப்ப யார் இந்த எடப்பாடி? ஓ.பி.எஸ்.தானே ஒருங்கிணைப்பாளர். அவர் கார்தானே உள்ளே நிற்கணும்' என பார்க்கிங் விவகாரம் வரை தலைமை அலுவலகத்தில் பூதாகரமாக வெடித்தது. கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஜெ. நினைவிடத்தில் தலைவர் கள் மறுபடியும் மோதிக்கொண்டார்கள். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் போட்ட கோஷத்தால் எடப்பாடி சிக்கித் திணறி னார் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

"அ.தி.மு.க. உடையுமா? எடப்பாடிக் குத்தான் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பதால், அவர் ஓ.பி.எஸ்.ஸை நீக்கு வாரா? அல்லது நான் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பி.எஸ். பொதுச்செய லாளர். பொதுக்குழுவில் முடிவு என்கிற எடப்பாடியின் பார்முலா வுக்கு ஓ.பி.எஸ். உடன்படுவாரா? சசி+ பா.ஜ.க. ஆதரவில் ஓ.பி.எஸ்., எடப்பாடியை எதிர்கொள் வாரா?' என பலவற்றையும் திகிலுடன் எதிர்பார்க்கும் அ.தி.மு.க.வினர்... "இதில் சசி யார் பக்கம், அவர் வெளிப்படையாகப் பேசுவாரா? என பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக் கிறார்கள்' என்கிறது அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரங்கள்.