அரை இருட்டு ஆட்டம்! கிறு கிறுக்கும் போதை! -தமிழக -கேரள எல்லையில் களை கட்டும் ரிசார்ட்டுகள்!

dd

குமரி மாவட்ட களியக்காவிளையை ஒட்டியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த எல்லைப் பகுதி. அங்கேதான் கேரளாவின் குறிப் பிடும்படியான முக்கிய சர்வதேச சுற்றுலா மையமான காரைக்காடு பூவார் ரிசார்ட்டுகள் அமைந்திருக்கின் றன. பட்டப் பக-லேயே சூரியன் உள்ளே புகத் தயங்கும் அரைகுறை இருட்டுப் பகுதி அது. பகலிலேயே இப்படி என்றால் இரவு கேட்கவே வேண்டாம். இயற்கையிலேயே தனித்தீவு போன்று கடலை ஒட்டி அமையப் பெற்ற இங்கேதான் அட்டகாசமான ரிசார்ட்டுகள்... சொர்க்க அனுபவங்களை விநியோகித்து வருகின்றன.

drugs

படா படா பார்ட்டிகளுக்குச் சொந்தமான இந்த பூவார் ரிசார்ட்டுகளை ஒட்டியே கடல் அமைந்திருப்பதால் காஷ்மீரைப் போன்று, போட் ஹவுஸ் எனப்படும் படகு வீடுகள் கடலில், கட்டுத்தறியில் யானை அசைவது போல் மிதந்தபடி இருக்கும். சாதாரணமாக இந்த ரிசார்ட்டுகளின் தினசரி வாடகை ஆயிரக்கணக்கில் இருக்கும். படகு வீட்டில் ஜாலியாக இருக்க தனி ரேட்டாம். அதனால்தான் இது கனவான்களின் சொர்க்கபுரி என்கிறார்கள் கேரளத்தின் சேட்டைக்குரிய சேட்டன்கள்.

வெளிநாடு, வெளிமாநில கனவான்கள், தொழிலதிபர்கள், ஸ்டார்கள், அரசியல் புள்ளிகள் என்று பலதரப்பட்டவர்கள் சங்கமிக்கும் கடல் இது. தமிழக கேரள எல்லையில் அமைந்திருப்பதால் மணல் கடத்தல் மற்றும் போதை மாஃபியாக்களும் ரிலாக்சுக்காக இங்கே பதுங்குகிறார்கள். அப்படி பதுங்குபவர்களை அத்தனை சுலபமாக அடையாளம் காண முடியாத அளவுக்கு மரங்களடர்ந்த சுற்றுப் புறச்சூழல் நிலவுவது தான், மாஃபியாக்களுக்கு வசதியாக இருக்கிறது.

பார்ட்டிகள் உள்ளே களை கட்டினாலும் அவர் களின் சுகத்திற்கு கேடு வந்துவிடக் கூடாது என்பதற்காக ர

பார்ட்டிகள் உள்ளே களை கட்டினாலும் அவர் களின் சுகத்திற்கு கேடு வந்துவிடக் கூடாது என்பதற்காக ரிசார்ட் தீவின் எல்லைப் பகுதியில் செக்யூரிட்டிகள், தனி குண்டர் படைகள் என காவல்படைகளை நிறுத்தியிருக்கிறார்கள். இங்கே செல்ல ஸ்பெஷல் பாஸ்கள் கொடுக்கப்படுகின்றன. சந்தேகத்திற் குரியவர்கள் உள்ளே நுழைய முயற்சித்தால் அடித்து உதைத்து எலும்புகளை இடம் மாற்றி, பெண்டு நிமிர்த்திவிடுமாம் ரிசார்ட்ஸின் குண்டர் படை.

கரன்சிகளும், டாலர்களும் சாதாரண பேப்பர் லெவலுக்குப் புழங்குகிற இந்த சர்வதேச பூவார் ரிசார்ட்டுகளில், குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ’டூபீஸ் மீயூசிக் பெஸ்ட்டிவெல்’ என்ற பெயரில் போதைப் பார்ட்டிகள் நடப்பதாகவும், அதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலப் புள்ளிகள் கலந்துகொள்வதாகவும் போதைத் தடுப்புப் பிரிவின் எஸ்.பி. அனில் குமாருக்குத் தகவல் போக, அவர் தன்னுடன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீஸ் படையினர் மற்றும் எக்ஸைஸ் துறையைச் சேர்ந்த வர்கள் என்று சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட டீமோடு, கடந்த வாரம் மாறுவேடத்தில் பூவார் ரிசார்ட்டின் தீவுப் பகுதிக்குள் அதிரடியாய் நுழைந்தார்.

drugs

உள்ளே மியூசிக்கல் பார்ட்டி என்ற பெயரில் ஆண் பெண் இளசுகள் போதையில் மேலாடைகள் பறப்பது கூடத் தெரியாமல், போதையாட்டத்தில் கிறங்கியபடி தள்ளாடித் துவண்டு கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ந்த அதிகாரிகள், யாரும் தப்பிவிடாதபடி அத்தனை பேரையும் ரவுண்ட் கட்டினர். போதையில் மரத்துப்போன நினைவுகள் தெளிந்து, நிதானத்துக்கு வந்த பின்னர், சிக்கியவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, இதற்கெல்லாம் காரணமான மூன்று பேர் கொண்ட அந்த டீமையும் மடக்கினர்.

இது குறித்துப் பேசிய டி.எஸ்.பி. அனில்குமார், "ஆடம்பரமான இந்த சர்வதேச பூவார் ரிசார்ட், சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். போதைப் பார்ட்டி நடக்குமிடத்திற்கு அவ்வளவு எளிதாக வெளியாட்கள் சென்றுவிட முடியாது. அப்படி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். போதைப் பார்ட்டி நடந்த காயலின் தீவு போன்ற அந்த இடத்திற்கு நாங்களும் பார்ட்டி யில் கலந்துகொள்வதைப் போல, இரண்டு படகில் சென்றோம். அந்தப் பார்ட்டியில் ஆண்களும் இளம் பெண்களும் போதைக் கிறக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். 11 பெண்கள் உட்பட 19 பேர்களை மொத்தமாக வளைத்தோம் அதில் இளம் தொழிலதிபர்கள், ஐ.டி. ஊழியர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்று பலரும் இருந்தனர்.

ஒரு ஆளுக்கு 3 ஆயிரம் கொடுத் தால், அனுமதிக்கான சில்வர் பாஸ் என்று ரேட் நிர்ணயித்திருக்கிறார்கள். 6 ஆயிரத்திற்கு கோல்டு பாஸாம். 10 ஆயிரம் கொடுத்தால் வி.ஐ.பி. பாஸ் தருவார்களாம். இப்படி வாழ்க்கையை அனுபவிக்க, வகை வகையான பாஸ்கள் தருகிறார்கள். பீர், பிராந்தி வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹை குவாலிட்டி போதைப் பொருள் என்று சகலமும் அங்கே சப்ளை செய்யப்பட்டி ருக்கிறது. இது தவிர வேறு போதைப் பொருள், வசதி என்றால் அதற்கு தனி ரேட் என எல்லாமே இங்கே கிடைக்கும்படி சப்ளை செய்திருக் கிறார்கள். இதற்காக வாட்ஸ் அப் குரூப், இன்ஸ்டாகிராம் என்று கஸ்டமர்கள் திரட்டப் படுகிறார்கள். அத்தனை பேரையும் கைது செய்திருக்கிறோம்''’என்றார் உற்சாகமாக.

மெகா போதை, விருந்தாளிகள் வளைக்கப் பட்டிருப்பது பாறசாலை பகுதியையே அதிர்ச்சியில் தடதடக்க வைத்திருக்கிறது.

போதைத் தடுப்பு தனி யூனிட்டின் அதிகாரி யிடம் நாம் பேசியபோது, "பூவார் போதைப் பார்ட்டியில் நாங்கள் வளைத்தவர்களில் போதை சப்ளை டான்களின் தலைவனான ஆரியநாடு அக்சய மோகன் கூட்டாளிகள், களக் கூட்டத்தைச் சேர்ந்த ஆசீர்கான், கண்ணான் துறையைச் சேர்ந்த பீட்டர் ஷான் ஆகியோரும் உண்டு. இந்த மாஃபியாக்கள் தான் கேரளாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களைப் போதைச் சந்தையாக மாற்றி வருபவர்கள். குறிப்பிட்டுச் சொல்லும் படியான பூவார் ரிசார்ட்டில் எம்.டி.எம்.ஏ., பிரவுன் சுகர், கொக்கெய்ன், தெலங்கானாவின் அசல் கஞ்சா (கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் ஆரியங்காவு நகரில் 65 கிலோ தெலங்கானா கஞ்சாவும் கடத்தல் புள்ளிகளும் பிடிபட்டதை நக்கீரன் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது) போன்ற போதைச் சரக்குகள் புழங்கியுள்ளன.

drugs

வெளிநாட்டு போதைப் பொருட்களின் இறக்குமதிக்கு கொச்சிதான் சென்டர். அங்கு செயல்படும் இதுபோன்ற போதைக் கும்பல்கள் தான் கேரளா முழுக்க சரக்கை சப்ளை செய்கிறது. பிடிபட்ட இந்த மூவர் கும்பலை நாங்கள் கடந்த ஒரு மாதமாகவே நிழலாய் கவனித்து வந்தோம். இந்த மினி லைட் போதைப் பொருட்கள், அருகிலுள்ள பெங்களூரிலிருந்து தான் கேரளாவுக்குள் இறக்குமதியாகியுள்ளன.

கடந்த ரெண்டு மாதங்களுக்கு முன், கொச்சி யின் பிரபல ஓட்டலில் போதைப் பார்ட்டிகள் நடப்பதாக எங்களுக்குத் தகவல் வர, நாங்களும் வேறு வழியில் செக்கப் செய்துவிட்டுக் கண்காணித் தோம். அங்கே தனியாகவும், பார்ட்டிகளாகவும் கார்களில் வந்து புக் செய்கிறார்கள். ஓட்டல் நிர்வா கம் இதற்குத் தடை செய்வதில்லை. மாட்டிக்கொண் டால் நிர்வாகம் சைலண்ட்டா கழன்றுவிடும்.

அப்படி நடந்த அந்த பார்ட்டியைக் கண் காணித்ததில், பார்ட்டி முடிந்து எல்லோரும் போன பிறகு ஒரு கார் மட்டும் தனியாக நின்றிருந்தது. அதன் டிரைவரைப் பிடித்து, எங்கள் பாணியில் விசாரித்தபோது, நேரங்கழிஞ்சி வந்த அக்சய மோகன், ஆசீர்கான், பீட்டர் ஷான் மூன்று பேரும் சிக்கினார்கள். அதன்பின்னே அவர்களை விட்டுப் பிடிச்சிக் கண்காணிப்பில் வைத்திருந்தோம். வெளி நாடுகளிலிருந்து வரும் போதைப் பொருட்களை இந்த கும்பல் சாலை மார்க்கமாகவே கேரளாவின் பல பகுதிகளுக்குக் கடத்திச் சென்று சப்ளை செய்த தோடு, பூவார் போன்று பல சென்டர்களை போதைப் பார்ட்டி ஸ்பாட்டாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

இதில் இன்னுமொரு விசேஷம் உண்டு'' என்றவர் அதுகுறித்தும் விவரிக்கத் தொடங்கினார்...

"அங்கே பேக்கரிகளில் தயார் செய்யப்படும் மக்ரூன் என்னும் இனிப்புப் பண்டம் பிரபலமானது. சீனி, பால், முட்டை, முந்திரிப் பருப்பு கொண்டு தயார் செய்யப்படும் மக்ரூனை வாயில் போட்ட உடனே ஐஸ்கிரீம் போன்று கரைந்துவிடும். இந்த மக்ரூன்களில் போதைப் பொருளை வைத்து தயார் செய்யும்போது, அது பிரவுன் கலராக மாறிவிடும். சாதாரணமா கடைகளில் ஒரு மக்ரூன் 12 ரூபாய் விலையில் கிடைப்பவை. போதை மக்ரூனாகத் தயார் செய்யப்பட்ட பின், அது ஆயிரத்து இருநூறு ரூபாய் விலையில், கொச்சி போதை விருந்தில் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இந்த மக்ரூனைச் சாப்பிட்டால் சாதரணமா மனிதனை 3 நாட்கள் தொடர்போதையில் வைத்திருக்குமாம்'' என்றார்.

கடவுள்களின் தேசம் எனப்படும் கேரளத்தின் எல்லைப்பகுதி சாத்தான்களின் இருப்பிடமாக மாறி இருப்பதையே இது போன்ற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

nkn251221
இதையும் படியுங்கள்
Subscribe