துணிவாகப் பேசிய ஹெச் அ.வினோத்!

dd

"வணக்கம் சார்... உங்க க்ரெடிட் கார்ட பேஸ்பண்ணி உங்களுக்கு லோன் சாங் ஷன் ஆகியிருக்கு', "நமஸ்தே சார்... யூ ஹாவ் ப்ரீ-அப்ரூவ்ட் லோன்', "வணக்கம் சார்... உங்க சிபில் ஸ்கோர் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அப்ரூவ் ஆகியிருக்கு...', "ஹலோ சார், நல்ல ரிட் டர்ன்ஸ்ல மியூச்சுவல் ஃபன்ட் ஸ்கீம் இருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் எக்ஸ்பிளயின் பண்ணலாமா?....'

ஒருநாளில் இதுபோல எத்தனை அழைப்பு கள்? நீங்கள் ஒரு மாதச்சம்பளம் வாங்கும் பணியில் இருந்தால், இதுபோல உங்களை தேடித் தேடி வாடிக்கையாளர் ஆக்க எத்தனை வங்கிகள், நிதி நிறுவனங்கள்! "நம்மதான் இவுங்கள்ட்ட க்ரெடிட் கார்டே கேக்கலையே... நம்ம எங்கேயுமே லோன் கேட்டுப் போகலையே, எப்படி, ஏன் இவுங்க நமக்கு போன் பண்ணுறாங்க?' என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். லோன் கேட்டு, க்ரெடிட் கார்டு கேட்டுப் போனவர்களுக்கு மட்டும் கொடுத்திருந்தால் இந்தியாவில் க்ரெடிட் கார்ட் சேவை நிறுவனமோ, வங்கியோ கூட மிஞ்சி இருக்காது. மிகக்குறைந்தவர்களே தேடிப் போய் வாங்கியிருப்பார்கள். அதே போலத்தான் பெரும்பாலான வங்கி சேவைகளும். தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெருகப் பெருக அவர்களுக்குள் நடக்கும் வணிகப் போட்டி, மக்களை தேடிச்சென்று தொலைபேசி வலை வீசி வாடிக்கையாளராக்கச் செய் கிறது.

"அதிக சம்பளமோ வங்கிப் பரிவர்த்தனையோ இல்லை, ஆனாலும் எனக்கும் போன் வருதே' என்று கேட்கிறீர்களா? "தம்பி என்ன இந்தப் பக்கம், வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க' என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப் போலத்தான் பல வங்கிகள்,

"வணக்கம் சார்... உங்க க்ரெடிட் கார்ட பேஸ்பண்ணி உங்களுக்கு லோன் சாங் ஷன் ஆகியிருக்கு', "நமஸ்தே சார்... யூ ஹாவ் ப்ரீ-அப்ரூவ்ட் லோன்', "வணக்கம் சார்... உங்க சிபில் ஸ்கோர் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அப்ரூவ் ஆகியிருக்கு...', "ஹலோ சார், நல்ல ரிட் டர்ன்ஸ்ல மியூச்சுவல் ஃபன்ட் ஸ்கீம் இருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் எக்ஸ்பிளயின் பண்ணலாமா?....'

ஒருநாளில் இதுபோல எத்தனை அழைப்பு கள்? நீங்கள் ஒரு மாதச்சம்பளம் வாங்கும் பணியில் இருந்தால், இதுபோல உங்களை தேடித் தேடி வாடிக்கையாளர் ஆக்க எத்தனை வங்கிகள், நிதி நிறுவனங்கள்! "நம்மதான் இவுங்கள்ட்ட க்ரெடிட் கார்டே கேக்கலையே... நம்ம எங்கேயுமே லோன் கேட்டுப் போகலையே, எப்படி, ஏன் இவுங்க நமக்கு போன் பண்ணுறாங்க?' என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். லோன் கேட்டு, க்ரெடிட் கார்டு கேட்டுப் போனவர்களுக்கு மட்டும் கொடுத்திருந்தால் இந்தியாவில் க்ரெடிட் கார்ட் சேவை நிறுவனமோ, வங்கியோ கூட மிஞ்சி இருக்காது. மிகக்குறைந்தவர்களே தேடிப் போய் வாங்கியிருப்பார்கள். அதே போலத்தான் பெரும்பாலான வங்கி சேவைகளும். தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெருகப் பெருக அவர்களுக்குள் நடக்கும் வணிகப் போட்டி, மக்களை தேடிச்சென்று தொலைபேசி வலை வீசி வாடிக்கையாளராக்கச் செய் கிறது.

"அதிக சம்பளமோ வங்கிப் பரிவர்த்தனையோ இல்லை, ஆனாலும் எனக்கும் போன் வருதே' என்று கேட்கிறீர்களா? "தம்பி என்ன இந்தப் பக்கம், வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க' என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப் போலத்தான் பல வங்கிகள், ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை யெல்லாம் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் செய்தார்கள். ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கச் செய்து, பின்னர் அப்படி தொடங்கப் பட்ட லட்சக்கணக்கான அக்கவுண்டுகளால் பயனேதும் இல்லை, பராமரிப்புச் செலவுதான் என்பதால் அவற்றில் பெரும்பாலான வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற புது ஆயுதத்தை கொண்டு வந்தன. அந்த மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களின் கணக்குக்கு எப்போது பணம் வந்தாலும் "உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கு' போல காத்திருந்து பணத்தை எடுத்தன.

நமது நாட்டில் நாம் சம்பாதித்துச் சேமிப்பதை முதலீடு செய்து பெருக்க வேண்டும் என்ற எண்ணமும் அணுகுமுறையும் கடந்த முப்பது ஆண்டுகளில் அதிகம் வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்பிருந்தே ரியல் எஸ்டேட்டில் மக்கள் மிக அதிகமாக முதலீடு செய்து அதற்கான பலனையும் அடைந்துள்ளனர். பின்னர் கஒஈ, பங்குசந்தை என மாறி, மியூச்சுவல் ஃபண்ட் வந்து சமீபமாக க்ரிப்டோ கரன்சி வரை மக்களின் முதலீட்டு ஆர்வம் அவ்வப்போது மாறி, பரிணமித்து வருகிறது. பங்குச்சந்தை, க்ரிப்டோ கரன்சி போன்றவை முழுக்க நிதி மேலாண்மை தெரிந்தவர்களுக்கானதாக அல்லது பெரிதாக விஷயம் தெரியாவிட்டாலும் முரட்டு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கானதாக இருக்கின்றன. சாதாரண நடுத்தர மக்கள் நம்புவது கஒஈ, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஒப்பீட்டளவில் குறைந்த ரிஸ்க் உள்ளவற்றைதான்.

dd

முழு பாதுகாப்பாக இருக்கும் கஒஈயில் சமீப மாக சில குழப்பங்கள். மக்களுமே, பாதுகாப்பாக இருந்தாலும் குறைந்த அளவு வட்டி விகிதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கஒஈ முதலீட்டை குறைத்துவிட்டனர் என்பதே உண்மை. கஒஈயை விட்டுவிடலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முழுக்க முழுக்க பாதுகாப் பானதாக இருக்கின்றனவா? வங்கி மற்றும் நிதி நிறுவன சேல்ஸ் ரெப்புகள் நமக்கு முழு தகவல் களைப் பகிர்கின்றனரா? வங்கிகள் நம்மிடம் கையெழுத்து வாங் கும் படிவங்களை நாம் முழுதாகப் படிக்கிறோமா? க்ரெடிட் கார்ட் பணத்தை சரியான நேரத்தில் திரும்பக் கட்டாமல் விட் டால் எத்தனை மடங்கு வட்டி? க்ரெடிட் கார்டை பயன்படுத்தி ஆபங-மில் பணம் எடுத் தால் அதன் வட்டி விகி தம் என்ன? வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் பரா மரிக்காவிட்டால் என்ன ஆகும்? நம் கண்ணில் படாமல் எத்தனை விதமான சார்ஜுகளை வங்கிகள் நம்மிடம் பெறுகின்றன? பெரும்பாலான மக்களின் நிதி சார்ந்த அறியாமையையும் அலட்சியத்தையும் நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன? இன்னும் பல கேள்விகள் எழுகின்றன... எழுப்பியிருப்பது இயக்குனர் வினோத்தின் "துணிவு' திரைப்படம்.

அஜித் போன்ற ஒரு மாஸ் நாயகன், ஒரு பெரும் வீச்சு கொண்ட நடிகர் நடித்துள்ள கமர்சியல் படமான "துணிவு' சராசரி மக்கள் சார்ந்த ஒரு பிரச்னையை விரிவாகப் பேசியிருப்பது, பேசத் தூண்டியிருப்பது பாராட்டத்தக்கது. ஹெச்.வினோத், தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு முக்கிய பிரச் சினையை எடுத்து, அதன் வேர்கள்வரை ஆராய்ந்து முழுமையாக திரைக்கதைக்குள் கொண்டுவந்து சிறப் பான சமூக நோக்கம் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படத்தை தர முயல்கிறார். "சதுரங்க வேட்டை', "தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்கள் மிகச்சிறந்தவை. "வலிமை' படத்தில் அந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. "துணிவு, அந்த விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் ஏமாற்றப்படக்கூடிய சாத்தியங்களை பலவிதமாகப் பேசியுள்ள வினோத், அதோடு தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களின் சேல்ஸ் ரெப்புகள் டார்கெட் என்ற பெயரில் அழுத்தப்பட்டு மக்களை ஏதாவது சொல்லி உள்ளே இழுக்கும் நிலைக்குத் தள்ளப்படு வதையும் கூறியுள்ளார். காலம் காலமாக நம்மை கண்டேகொள்ளாத பொதுத்துறை வங்கிகளின் மேனேஜர்களும், க்ளர்க்குகளும் சமீபமாக நம்மிடம் புன்னகைத்து க்ரெடிட் கார்டு விற்கிறார்களே? அதற்கெல்லாம் காரணம் படத்தில் இருக்கிறது.

ccசரி... மியூச்சுவல் ஃபண்ட், க்ரெடிட் கார்டுகள் போன்றவை முற்றிலும் தேவையில்லையா? ஆபத்தானவையா? வங்கிகள் அனைத்துமே நம்மைக் கொள்ளையடிக்கின்றனவா? இல்லவே இல்லை... இந்தியா போன்றதொரு நாடு இன்று அடைந்திருக் கும் ஓரளவு வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு மிகப்பெரியது. வங்கிகள் கொடுத்த கடனின் பங்கு மிகமிகப் பெரியது. ஆனால், அதேநேரம் அது முழு வணிகமயம் ஆனதன் ஆபத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா? பங்குச்சந்தையில் தவறுகளை கண்காணிக்க நஊஇஒ இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டை கண்காணிக்க ஆஙஎஒ இருக்கிறது. எல்லாம் உண்மை தான். அவற்றை தாண்டித்தான் மபஒ மோசடி, கேட்டன் பரேக் மோசடி உள்ளிட்ட பல மோசடிகள் நடந்தன. பங்குச்சந்தையில் ஹர்ஷத் மேத்தாவில் இருந்து பல மோசடிகள் நிகழ்ந்துள்ளன. ஒஈஒஈஒ வங்கியின் முன்னாள் ஈஊஞ சந்தா கோச்சார் வீடியோ கான் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி கடனை அள்ளிக் கொடுத்த குற்றத்துக்காக ஈஇஒயால் கைது செய்யப்பட்டார். விஜய் மல்லையாவும் நிரவ் மோடியும் என்ன செய்துவிட்டு வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கின்றனர்? மோசடிகள் நடக்க சாத்தியங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதே நேரம், இன்னொரு காட்சியில் வங்கிக் கொள்ளையை மீம் போட்டுக் கலாய்க்கும் மக்களை நோக்கி, "ஒரு வங்கியின் தோல்வி என்பது ஒரு சமுதாய செயல்பாட்டின் தோல்வி' என்று வலிமையான வார்த்தைகளால் வங்கியின் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்.

சரி... படத்தில் எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றனவா? அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமா? இல்லை... லாஜிக் ஓட்டைகள், மேஜிக் காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் கோடிக் கணக்கில் மக்கள் பார்க்கும் ஒரு படத்தில் இந்த விஷயத்தை பேசியதன்மூலம் ஒரு விவாதத்தை, மக்கள் மனதில் ஒரு சிந்தனையைத் தூண்டியுள்ளார் ஹெச்.வினோத், இல்லை யில்லை அ.வினோத். ஆம், தனது இனிஷியலை "ஹெச்' என்பதி லிருந்து மாற்றி "அ' என்று போட்டுள்ளார். 'ஹெச்' மீது ஏதோ ஒவ்வாமை போல...! படத்தில் ரசிகர்கள் கொண்டாடிய இன் னொரு வசனம் 'ரவீந்தர்... இது தமிழ்நாடு... இங்க வந்து உன் வேலையைக் காட்டாத'. படத்தின் பாடமாக "நோ கட்ஸ், நோ க்ளோரி'... மக்கள் ஒரு போதும் ஏமாந்து தற்கொலை செய்யக்கூடாது, துணிந்து தட்டிக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளது அஜித்-வினோத் கூட்டணி. அது எந்த அளவு சாத்தியமென்று தெரியவில்லை. ஆனால், மக்கள் சிந்திக்கவேண்டும், கவனமாக இருக்கவேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை "துணிவு' தூண்டுகிறது.

-வசந்த்

nkn210123
இதையும் படியுங்கள்
Subscribe