Advertisment

போதைக் களமாகும் ஜிம்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

jim

சம்பவம் 1 :

அரக்கோணத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரின் மகன் சுஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறான். தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்றுவரும் நிலையில், சமீப நாட்களாக முகமும், உடம்பும் வீக்கத்தோடும், ரத்தக்கட்டோடும் வந்துள்ளான். பதறிப்போய் வீட்டில் கேட்கும்போது பாத்ரூம்ல விழுந்துட்டேன், பஸ்ல இடிச்சுக்கிட்டேன் என ஏதேதோ காரணம் சொல்லியுள்ளான். இதற்கிடையே வீட்டில் கடந்த 5 மாதங்களாக ஆயிரக்கணக்கில் பணம் திருடுபோயிருக்கிறது. ஒன்றரை பவுன் நகையும் திருடுபோக, கணவன் மனைவியிடையே சண்டை வந்திருக்கிறது. இந்நிலையில், திடீரென ஆறாயிரம் ரூபாய் காணாமல் போக, மகனையும் அழைத்து விசாரித்ததில், தான் தான் எடுத்ததாகச்சொல்லி அதிர்ச்சியளித்துள்ளான். காரணம் கேட்டதற்கு சொல்லவேயில்லை. இதையடுத்து அவனது மொபைலை வாங்கிப் பார்த்ததில், வினித் என்பவனுக்கு கொஞ்சங் கொஞ்சமாக 1.48 லட்சம்வரை அனுப்பி யிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் மகனிடம் மிரட்டிக் கேட்டபோது உண்மை வெளிவந்திருக்கிறது. உடலை கட்டுமஸ்தாக்க அரக்கோணத்திலுள்ள ஜிம்மில் சேர்ந்துள்ளான் சுஜித். பள்ளிக்கு பேருந்தில் போகும்போது, 12வது படிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த வினித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவனிடம் இதைப்பற்றி சொல்ல, அவனும் ஜிம் போவதாகக்கூறி அரக்கோணத்திலுள்ள மற்றொரு ஜிம் பெயரைச் சொல்லியுள்ளான். அதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரோகித் என்பவனும்  ஜிம்முக்கு போகிறானாம். மூவரும் நண்பர்களாகிறார்கள். 

Advertisment

jim1

"உடம்பை இரும்பு மாதிரி மாத்துனாத் தான

"உடம்பை இரும்பு மாதிரி மாத்துனாத் தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும். இதோ பார் என் கேர்ள் ப்ரண்ட், என் உடம்பை பார்த்துதான் என்னோட டேட்டிங் வர்றா'' எனச் சொன்ன ரோகித் போட்டோக்களை காட்டியுள்ளான். "சீக்கிரமா உடம்பை அழகா மாத்தணும்னா, புரோட்டீன் பவுடர் சாப்பிடணும், ஸ்டீராய்ட் இன்ஜெக்ஷன், மாத்திரை சாப்பிடணும்'' எனச்சொல்லி சுஜித்துக்கு தந்துள்ளான். அதை சுஜித் பயன்படுத்தும்போது வீடியோ எடுத்துவைத்து, இதை உன் வீட்டுக்கு அனுப்பிடுவேன் எனக்கூறி அடித்து மிரட்டி பணத்தை கறந்துள்ளார்கள் ரோகித்தும், வினித்தும். இதைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர், காவல்நிலையத்தில் நவம்பர் 5ஆம் தேதி புகார் தர, காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Advertisment

சம்பவம் 2:

திருவண்ணாமலை மாநகரின் முக்கிய அரசியல்வாதியின் மகன் அவர். பிரபலமான தனியார் பள்ளியில் படிக்கும்போது ஜிம்மில் சேர்ந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பழக்கம் அம்மாணவனின் குடும்பத்தை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரபலமான ஸ்கூல்ல படிக்க வச்சேன். நல்லா படிச்சுட்டு இருந்தான். ஸ்கூல்ல இரண்டு குரூப்பா ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுட்டு இருந்திருக்காங்க. உடம்பை கட்டுமஸ்தாக்க ஜிம்ல சேரப்போறதா எங்கிட்ட சொன்னான். நாலு மாசமா ஜிம்முக்கு போனவன், உடம்பை வலிமையாக்க புரோட்டீன் பவுடர் வாங்கி சாப்பிடணும்னு மாஸ்டர் சொன்னாருன்னு சொன்னான், நானும் சரின்னு சொல்லி பணம் தந்தேன். ஒரு கட்டத்துல ஜிம் கட்டணத்தவிட புரோட்டீன் செலவு அதிகமாச்சு. அவன் +2 பெயிலாகிட் டான். அதுக்கப்புறம் அவன் ரூம்ல பார்த்தால், இன்ஜெக்ஷன் இருந்தது. உடம்ப ஃபிட்டா வச்சிக்க மாஸ்டர் ரெக்கமெண்ட் செய்ததுன்னு சொன்னான். அது சரிப்படாததால ஜிம்முக்கு போககூடாதுன்னு நிறுத்திட்டேன். மறுதேர்வு எழுதி பாஸாகி காலேஜ் போகத் தொடங்கிட்டான். இப்ப லீவ்ல வந்தால் அவன் பேக்கில் ஊசி இருக்குது. சென்னையில் ஒரு மருந்துக்கடையில் வாங்கினதா சொன்னான். இவன் மட்டுமில்ல, இவனைப்போல பல பசங்க ஜிம்முக்கு போறதா சொல்லிட்டு, கடைசியில் இதுபோல பழக்கத்துக்கு அடிக்ட் ஆகிடுறாங்க'' என்றார் கவலையுடன். 

jim2

தமிழ்நாட்டில் புற்றீசலாய் ஜிம்கள் உருவாகிவருகின்றன. கடந்த காலத்தில் ஒரு ஜிம் தொடங்க, காவல்நிலையத்தில் அனுமதி பெறவேண்டும். அதில் லஞ்சம் விளையாடுகிறது எனச்சொல்லி அவ்விதியை அரசு நீக்கிவிட்டது. இப்போது இடமும், பணமும் இருந்தாலே தொடங்கிவிடலாம். தமிழ்நாட்டின் சின்னஞ்சிறிய நகரங்களிலேயே 20 ஜிம்கள் உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. 

திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள ஒரு ஜிம் பயிற்சி யாளரிடம் பேசியபோது, "சட்டவிரோதமாக சில ஜிம் ட்ரெய்னர்கள் ட்ரக் விற்பனை செய்வதற்கு காரணம், ஜிம்மை லாபகரமாக நடத்தமுடியாததே ஆகும். சிறிய ஜிம் உருவாக்கவே குறைந்தது 25 லட்சம் தேவைப்படும். அதுவே பெரிய ஜிம் என்றால் இடமும் பெரியதாக வேண்டும், முதலீடும் அதிகமாகும். குறைந்தது 2 கோடி ரூபாய் இருந்தால்தான் பெரிய, தரமான ஜிம் அமைக்கமுடியும். சாதாரண ஜிம் ட்ரெய்னருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். ஜிம் நடத்துவதற்கான நடைமுறை செலவும் இருக்கிறது. இப்படியான சூழல்களில் ஜிம்மை தொடர்ச்சியாக இயங்கச்செய்ய ட்ரக்ஸ் விற்பனையில் இறங்குகிறார்கள். இங்குதான் பிரச்சனை உருவாகிறது. 

உடல் பருமனை குறைக்கவேண்டுமென்று 65 சதவீதம் பேர் வருகிறார்கள். சிலர் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காகவும், 25% பேர், சிக்ஸ்பேக் வைத்துக்கொண்டு பெண்களை கவர்வதற்காகவும் வருகிறார்கள். இந்த 25% தான் ஜிம் நடத்துபவர்களின் டார்கெட். உடலை வலிமையாக்க புரோட்டீன் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. பின்னர், மாத்திரை, ஊசி போன்ற ட்ரக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனையெல்லாம் பயன்படுத்த முறைப்படி மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். ட்ரக்ஸ் விற்பனைக்கும் லைசன்ஸ் பெறவேண்டும். பெரும்பாலான ஜிம்கள் இதனை கடைப்பிடிப்பதில்லை. 

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெங்களூருவிலிருந்து சட்டவிரோத ட்ரக்ஸ் விற்பனையாகிறது. சென்னையிலிருந்து திருச்சி வரையிலான பகுதிகளுக்கு வடமாநிலங்களிலிருந்து விற்பனையாகிறது.  என்னிடமே மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர், நீங்கள் கேட்கும் பெயரில், விலையில் ட்ரக்ஸை பிரிண்ட் செய்து சப்ளை செய்கிறோம் என்று விலைபேசினார். ஒரு மருந்தின் விலை 500 ரூபாய் என்றால், 10 ஆயிரம் ரூபாய் என எம்.ஆர்.பி. பிரிண்ட் செய்து தருகிறேன் என்றார். இப்படித்தான் மோசடியாக விற்கிறார்கள். ஒருவர் ஜிம்மில் சேர்ந்ததும், அவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டபின் ட்ரக்ஸ் பயன்படுத்த வைப்பார்கள். இன்னும் சிலர், கால் பாய்ஸாகவும் பயன்படுத்துகிறார்கள். சினிமா  சின்னத்திரையில் இருப்பவர்கள் அதிகளவில் இதனை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் பிரபல க்ளப் பெண்களில் சிலர் ஜிம் பாய்ஸ் வேண்டுமெனக் கேட்பதால். ட்ரக்ஸால் உடம்பை ஏற்றிக்கொண்ட இளைஞர்களை வைத்து பணம் சம்பாதிப்பதும் உண்டு'' என்றார். 

இதுகுறித்து பொதுமருந்தியல் பிரிவு தலைவரான மருத்துவர் ரம்யா அய்யாதுரையிடம் கேட்டபோது, "ஒருவரால் 15 முதல் 20 நிமிடம் வரை மட்டுமே உடற்பயிற்சி செய்யமுடியும், அதன் பின் உடல், சோர்வுக்கு உள்ளாகிவிடும். நீண்டநேர உடற்பயிற்சிக்கு புரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்து வார்கள். சராசரி மனி தர்களின் உடலுக்கு ஒரு கிலோ எடைக்கு 0.8 மி.கி. புரதம் தேவை. அதாவது 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 48 மி.கி. புரதம் தேவை. ஜிம் போறவங்க கிலோவிற்கு 1.2 - 2 மி.கி. வரை புரதம் எடுத்துக் கொள்ளலாம். புரோட்டீன் பவுடர்கள் உடலை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ளும். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யமுடியும். இதனை பழக்கமாக்கிவிட்டால், சாதாரண வேலை செய்யக்கூட ஊசி போட்டுக்கொள்ளச் சொல்லும். இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில், அங்கீகரிக்கப்படாத புரதப் பொடி உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் எனத் தெரிய வந்துள்ளது. அதனால் மருத் துவர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி மட்டுமே கூடுதல் புரதம் எடுக்கவேண்டும். 

தினமும் ஒரு முட்டை, ஒரு கப் கெட்டித் தயிர், 100 மில்லி பால், 4-5 பாதாம்  சாப்பிட் டாலே உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைத்துவிடும். அதேபோல் இளைஞர்கள், உடல் உறுப்புகளின் அளவை அதிகரிக்கவேண்டும், பெண்கள் அழகாகவேண்டும் என ஹார்மோன் ஊசிகளை எடுத்துக்கொள்கிறார்கள், இது மிகவும் ஆபத்தானது. சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகக் கல், மனஅழுத்தம் போன்றவை இவற்றால் ஏற்படும். இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எதையும் எடுக்கக்கூடாது'' என எச்சரித்தார்.  

nkn221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe