Advertisment

குற்றவாளிகளுக்கு உடந்தையான குஜராத் அரசு! -பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் சுளீர் தீர்ப்பு!

sdd

2002-ல் குஜராத்தில் பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்துசெய்துள்ளதுடன், மாநில அரசையும் கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Advertisment

ff

இந்தியாவை உலக நாடுகள் ஏளனமாகப் பார்க்க வைத்த விஷயங்களில் ஒன்று 2002 குஜராத் கலவரம். அதே கலவரத்தில்தான் பில்கிஸ் பானு மானுடமே வெட்கித் தலைகுனியும் ஒரு துயரத்துக்கு ஆளானார். கோத்ரா ரயில் எரிப்புக்கு பழி என்ற பெயரில் குஜராத்தில் வசித்த முஸ்லிம் கள் அனைவரையும் பழிவாங்கக் கிளம்பினர் இந்துத்துவர்கள். குஜராத் அரசின் கணக்குப்படியே இதில் 1000-க்கும் அதிக மானவர்கள் உயிரிழந்தனர். உண்மையில் இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் இரு மடங்கு என்கின்றனர் இந்த கலவரத்தை நெருக்கமாகக் கவனித்தவர்கள்.

அந்த குஜராத் கலவரத் தின்போது அகமதாபாத் அருகேயுள்ள ரண்திக்பூர் கிராமத்தில் புகுந்த இந்துத்துவ வெறியர்கள், 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த 20 வயது பில்கிஸ் பானுவை, கர்ப்பவதி என்பதையும் பொருட்படுத் தாமல் சீரழித்தனர். கலவரக் கும்பல் அவளைக் கூட்டுப் பாலியல் செய்ததோடு அவளது குடும்பத் தைச் சேர்ந்த 7 பேரையும் கொடூரமாக கொலை செய்தது. ஈவிரக்கமற்ற கும்பல் பானுவின் 3 வயது மகளைக்கூட உயிருடன் விட்டுவைக்கவில்லை. மேலும் பில்கிஸின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காணாமல் போயினர். அவர்களையும் கொல்லப் பட்டவர்களாகத்தான் கணக்கில் கொள்ளவேண் டும். வன்புணர்வுக்குப் பின், அருகிலிருந்த மலைப் பகுதிக்கு உயிரைப் பிடித்தபடி எப்படியோ நகர்ந்து சென்றதால் பில்கிஸ் பானு உயிர்பிழைத்தார்.

Advertisment

ff

இந்தக் கயமையில் ஈடுபட்டவர்களில் பில்கிஸ் வ

இந்தக் கயமையில் ஈடுபட்டவர்களில் பில்கிஸ் வீட்டில் பால் வாங்கியவர்கள், பில்கிஸ் "மாமா' என்றழைத்த பெரியவர்கள், பில்கிஸின் தந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவரும் அடக்கம்.

இந்த வழக்கைப் பதியவே மிகுந்த சிரமம் ஏற்பட்டது பில்கிஸ் பானுவுக்கு. குஜராத் நீதிமன்றங்களில் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யையே பில்கிஸ் இழந்தார். அரசு மருத்துவர், பில்கிஸ்பானு வல்லுறவுக்கு ஆளாக்கப்படவே இல்லை என்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பலரின் முயற்சியால் 2004-ல் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் போனபின்புதான் வேகமெடுத்தது.

குஜராத் நீதிமன்றங்களால் இந்த வழக்கைக் கையாளமுடியாது என்ற பில்கிஸின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து மகாராஷ்டிராவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அங்குதான் 2008-ல் 11 குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகள் சிறை போனபின்பும் தான் இருக்குமிடத்தை ரகசிய மாகவே வைத்திருக்கவேண்டிய நெருக்கடியில் பில்கிஸ் பானு இருந்தார். இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கின் 11 குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுவிக்க 2002-ல் உச்சநீதிமன்றத் துக்கு மனு செய்தார். இந்த மனுவை பரிசீலிக்குமாறு குஜராத் அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண் டது. நீண்ட காலம் சிறையிலிருப்பவர்களுக்கான பொது மன்னிப்பு வழங்கும் குஜராத் அரசின் நடைமுறையின்கீழ், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்வது குறித்து மே மாதம் குஜராத் அரசு ஆலோசிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைவரையும் விடுதலை செய்தும் அறிவித்தது.

ff

பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஒரு சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் பெருங்குற்றத்தைச் செய்தவர்கள். அவர்களை முன்கூட்டியே விடுவித்தாலும் அவர்களது குற்றம் மாறப்போவதில்லை. அத்தகைய குற்றவாளிகளை விடுதலை செய்ததை மாநிலமே கொண்டாடி யது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, குற்றவாளிகள் 11 பேரையும் மேடையில் அமர வைத்து மாலை சூட்டிக் கொண்டாடியது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரே, "அவர் கள் பிராமணர்கள். இத்தகைய குற்றத்தைச் செய்திருக்க வாய்ப்பில்லை'' என்று கூறினார்.

கற்பழிப்புக் குற்றவாளிகளை தூக்கில் போடச்சொல்லி போராட்டம் செய்யும் இந்தியாவில், விழா எடுத்துக் கொண்டாடும் கலாச்சாரம் பரவிவருவதாக அப்போது விமர்சனம் எழுந்தது.

குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராக பில்கிஸ்பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்ற வாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுவிக்கப் பட்டதை ஏற்கமுடியாது. விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராஷ்டிர மாநில நீதிமன்றம், எனவே இதில் குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்கமுடியாது. 11 பேரின் விடுதலையை ரத்துசெய்யவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உகந்ததென ஏற்றுக்கொண்டது. நீண்ட விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல்புயான், பி.வி. நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், “பில்கிஸ்பானு விவகாரத்தில் நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் குஜராத் அரசின் முடிவு செல்லாது.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மிக முக்கியம். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை அளித்தும் குஜராத் அரசு விடுதலை செய்யலாம் என்ற ஆணையைப் பெற்றுள்ளனர். அது செல்லாது. குற்றவாளிகள் இரண்டு வாரத்துக் குள் சரணடைய வேண்டும்''”எனத் தீர்ப்பளித்தனர். மேலும், குற்றவாளிகளுடன் இணைந்து அவர் களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட் டுள்ளதாகவும் மகாராஷ் டிர மாநில அரசின் உரிமையைப் பறித் துள்ளதாகவும் நீதிபதி கள் கண்டனம் தெரி வித்தனர்.

ss

சி.பி.ஐ. மற்றும் மகாராஷ்டிர சிறைத் துறை அதிகாரிகள் இந்த 11 பேரின் முன் கூட்டிய விடுதலைக்கு அதிருப்தி தெரிவித் துள்ளனர். அது உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குச் செல்லாமல் மறைக்கப்பட்டதாகவும் அதையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பையடுத்து, "இன்று தான் எனக்குப் புத்தாண்டு. நான் நிம்மதியாகக் கண்ணீர்விட்டேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக சிரித்தேன். நெஞ்சிலிருந்த மலைபோன்ற கல் அகன்றிருக்கிறது. இதுதான் நீதி''’என தனது வழக்கறிஞர் ஷோபாகுப்தா மூலம் அறிக்கைவிட்டிருக்கிறார் பில்கிஸ்பானு.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “"தேர்தல் ஆதாயத் துக்காக நீதியை கொலை செய்வதென்ற போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றவாளிகளுக்கு ஆதரவளிப் பவர் யார் என்பதை நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது''’என்று குறிப்பிட்டுள்ளார்.

_________

பில்கிஸ்பானு வழக்கு - முக்கிய நிகழ்வுகள்!

3-3-2002: தனது கிராமத் தில் வைத்து பில்கிஸ் பானு கலவரக்காரர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட் டார். பானுவின் 3 வயது குழந்தை யுடன் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காணாமலே போயினர்.

4-3-2002: முதல் தகவல் அறிக்கை பதிவு

25-3-2002: -ம்கேடா மாவட்ட நீதிபதி இந்த வழக்கின் அறிக்கையைப் பெற்று வழக்கை முடித்துவைத்தார்.

2003, ஏப்ரல்: தேசிய மனித உரிமை ஆணையத்தை பில்கிஸ் பானு அணுகினார்.

18-12- 2003: மாநில அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லாத பில்கிஸ் பானுவின் மனுவை ஏற்று, உச்சநீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

பிப்ரவரி 11, 2004: கலவரத்தில் குஜராத் காவல்துறை உடந்தையாகச் செயல்பட்டதாக சி.பி.ஐ. அறிக்கை.

ஆகஸ்ட் 2004: பில்கீஸ் பானு வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2008, ஜனவரி 21: பில்கீஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்ப உறுப்பினர் கள் 7 பேரைக் கொலைசெய்ததற்காக 11 பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

2017, மே 4: தங்கள் கடமை களை சரிவரச் செய்யவில்லை மற்றும் சாட்சியங்களை அழித்தனர் என்கிற குற்றச்சாட்டின்கீழ் 5 போலீசார் மற்றும் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேரை குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.

2019, ஏப்ரல் 23: குஜராத் அரசு பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

2022, மே 13: குற்றவாளிகள் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுவிக்க கோரிய மனுவைப் பரி சீலிக்குமாறு, குஜராத் அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

2022, ஆகஸ்ட் 15: குஜராத் அரசு, பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரையும் முன் கூட்டியே கோத்ரா சிறையிலிருந்து விடுதலை செய்தது.

2022, நவம்பர் 30: குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2024, ஜனவரி 8: குஜராத் அரசின் உத்தரவை ரத்துசெய்து 11 பேரையும் மீண்டும் சிறையிலடைக் கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

nkn130124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe