எடப்பாடி பழனிச்சாமியின் கேபினெட்டிலிருக்கும் அமைச்சர் கள் பலர் மீது ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். அதன்படி, மூன்று வருட நீதிமன்ற தண்டனையால் பதவி இழந்திருக்கிறார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி.
தனது ஆதரவாளராக இருந்த ரெட்டியின் பதவி பறிபோனதில் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உடுமலைராதாகிருஷ்ணன் உள் ளிட்டவர்களோடு நடத்திய அவசர ஆலோசனையில் ரெட்டியும் கலந்துகொண்டார். அப்போது, "தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதால் பாலகிருஷ்ணரெட்டி சிறைக்கு செல்லத்தேவையில்லை. ஆனால், குற்றவாளி என்பதற்கு தடை இல்லை என்பதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். இதனை தடுக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. மேல்முறையீட்டில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டால் அதன்ப
எடப்பாடி பழனிச்சாமியின் கேபினெட்டிலிருக்கும் அமைச்சர் கள் பலர் மீது ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், முதல் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். அதன்படி, மூன்று வருட நீதிமன்ற தண்டனையால் பதவி இழந்திருக்கிறார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி.
தனது ஆதரவாளராக இருந்த ரெட்டியின் பதவி பறிபோனதில் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உடுமலைராதாகிருஷ்ணன் உள் ளிட்டவர்களோடு நடத்திய அவசர ஆலோசனையில் ரெட்டியும் கலந்துகொண்டார். அப்போது, "தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதால் பாலகிருஷ்ணரெட்டி சிறைக்கு செல்லத்தேவையில்லை. ஆனால், குற்றவாளி என்பதற்கு தடை இல்லை என்பதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். இதனை தடுக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. மேல்முறையீட்டில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டால் அதன்பிறகு அதிலுள்ள சட்டச்சிக்கல்களை ஆராயலாம். இப்போதைக்கு அவரது பதவியை பாதுகாக்க முடியாது' என சொல்லியிருக்கிறார் சட்ட அமைச்சர் சண்முகம். ஆலோசனையைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை எடப்பாடியிடம் தந்தார் பால கிருஷ்ணரெட்டி. சிறிது நேரத்தில் ராஜினாமா அறிவிப்பு வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் பாகலூரில் கொடிகட்டிப்பறந்த கள்ளச்சாராயத்தை எதிர்த்து 1997 ஆக.24-ல் மக்கள் போராட்டத்தை நடத்தியது பா.ஜ.க. மா.செ. கோவிந்தரெட்டி தலைமையில் நடந்த அந்த போராட்டத்தில் அப்போது பா.ஜ.க. ஒன்றியத் துணைத் தலைவராக பாலகிருஷ்ணரெட்டியும் கலந்துகொண்டார். அப்போது நடந்த கல் எறியும் சம்பவத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டு, ஜீப் எரிக்கப்பட்டதால் வழக்கு வலுவானது. பொதுச்சொத்துக்கள் சேதப் படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 108 பேர் சேர்க்கப்பட்ட னர். அதில் 18-வது குற்றவாளி பாலகிருஷ்ணரெட்டி.
2006-உள்ளாட்சித் தேர் தலின் போது பா.ஜ.க.விலிருந்த பாலகிருஷ்ண ரெட்டியை அ.தி.மு.க.வுக்கு கொண்டுவந்தார் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. சொத்துக் குவிப்பு வழக்கில் சசி சிறைக்கு சென்றபோது, ஜெயில் வசதிகளைப் பெற்றுத் தருவதில் முனைப்பு காட்டி, அவர் தரப்புக்கு நம்பிக்கையானவராக இருந்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. தற்போது எடப்பாடி விசுவாசி. அவர் மீது நீண்ட வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சமீபத்தில்தான் மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி 3 வருட சிறைத் தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனால் பால கிருஷ்ணரெட்டியின் எம்.எல்.ஏ. பதவி உடனடியாக பறிபோனது.
அதேசமயம், மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்ததால் சிறைக்கு செல்லாமல் தப்பித்தார் ரெட்டி. பதவி பறிபோனதால் அரசு காரை தவிர்த்து சாதாரண காரில் சென்றவர், மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார்.
ரெட்டியின் அமைச்சர் பதவி பறி போயிருக்கும் நிலையில், அவரது இலாகாவிற்கு புதிய அமைச்சரை நியமிப்பதா? அல்லது மூத்த அமைச்சர்களில் ஒருவரிடம் கூடுதல் பொறுப்பாக அதனை ஒதுக்குவதா? என தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி, 7-ந் தேதி இரவு வரை முடிவெடுக்க முடியாமல் தவித்தார்.
"இலாகாவை மாற்றித் தாருங்கள்' என பல மாதங்களாக அமைச்சர்கள் பலரும் எடப்பாடியிடம் வற்புறுத்தி வருவதால், தற்போது அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டிய சூழலில் பல்வேறு இலாகாவையும் மாற்றியமைக்கலாமா? என்கிற விவாதத்தினால்தான் முடிவெடுக்க முடியாமல் முதல்வர் தவித்தார் என்கிறது கோட்டை வட்டாரம். நீதிமன்ற தண்டனையால் பதவியை பறிகொடுக்கும் பெருமை தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு பாலகிருஷ்ணரெட்டிக்கு கிடைத்திருக்கிறது.
-இளையர்
_______________
இரண்டாவது தீர்ப்பு!
நாட்டில் அதிகாரப் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ., எம்.பி. போன்றவர்களின் மீதான வழக்குகள் முறையான விசாரணையின்றி தேங்கிவிடுவதாக புகார் எழுந்ததையொட்டி, இத்தகைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் யோசனை எழுந்தது. முதல்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் எம்.எல்.ஏ., எம்.பி. போன்றோரின் வழக்குகளை மட்டும் விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் அமைந்த சிறப்பு நீதிமன்றத்தில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீதான வழக்கு முதல் வழக்காக அமைந்தது. கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சிறுமி பாலியல்ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் ராஜ்குமாருக்கும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கும் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அடுத்தபடியாக விசாரிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குதான் பாலகிருஷ்ண ரெட்டியின் வழக்கு..