மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் மார்கோனி. ம.தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக இருந்துவந்தார். அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நிழலாகவும், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராகவும் இருந்துவந்த சீர்காழி ரமேஷ்பாபு கொலைவழக்கில் சிறைசென்றார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் அவரை அ.தி.மு.க.வில் சேர்த்திருப்பது, அம்மாவட்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் அனலாகத் தகிக்கிறது. மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், பூம்புகார் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ், மார்கோனியை அ.தி.மு.க.விற்கு அழைத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த மார்கோனி, மணல் பாபு கொலை வழக்கை மனதில் கொண்டு ஒப்புக்கொண்டதும், மறுநாளே எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்துள்ள னர். இத்தகவல் ம.தி.மு.க. தலைமைக்கு தெரியவர, மார்கோனியை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கினர். இதற்கு ம.தி.மு.க. தலைமையை கண்டித்து மார்கோனி தரப்பு பதிவிட, அவர்களைக் கண்டித்து ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் தரப்பினர் குத்தாலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மார் கோனியை கண்டித்து தீர்மானங்கள் போட்டனர்.
மறுநாளே

மறுநாளே சீர்காழியில் பத்திரிகையாளர் களை சந்தித்த மார்கோனி, வைகோவிற்கும் கட்சிக்கும் செய்த சாதனைகளை பட்டிய லிட்டார். மேலும், "சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வந்த ஹெச்.ராஜா என்னை பா.ஜ.க.விற்கு வந்துடுங்க, உங்கள் மீதுள்ள வழக்கை முடிச்சிக் கொடுத்துடுறோம். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் தரச் சொல்றோம்னு சொன்னதை மறுத்துவிட்டேன். அ.தி.மு.க.வில் சேரும்படி பவுன்ராஜ் அழைத்ததையும் மறுத்தேன். இந்நிலையில் சிலரோடு ஒகேனக்கல் சென்றதை, எடப்பாடியை சந்திக்கச் சென்றதாக எனக்கு வேண்டாதவர்கள் புகாரளிக்க, என்னை விசாரிக்காமலேயே கட்சியிலிருந்து நீக்கியிருக்காங்க. துரை.வைகோவின் நடவடிக்கைகளை ஏற்க முடியாமல் ம.தி.மு.க.விலிருந்து விலகுகிறேன்'' எனக் கூறி, அ.தி.மு.க.வுக்கு சிக்னல் காட்டியுள்ளார். இந்நிலையில், பத்தாயிரம் பேரோடு அ.தி.மு.க.வில் இணையப் போகிறார் எனப் பேச்சுவர, அவரோ தனது ஆதரவாளர்களோடு, அமாவாசைக்கு முந்தையை 16ஆம் தேதியே எந்தவித சத்தமும் இல்லாமல் பவுன்ராஜ் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்து, ஓ.எஸ்.மணியனிடம் ஆசி பெற்றுள் ளார். "ரமேஷ்பாபு கொலை வழக்கில் உள்ளவரை அ.தி.மு.க.வில் இணைத்திருப்பது புரியாத புதிராக இருக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
இதுகுறித்து சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடம் விசாரித்தோம். "முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பொருளாதார ரீதியாகத் தேற்றியவர் மணல்பாபு என்கிற ரமேஷ்பாபு. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற போது முழு செலவையும் பாபுதான் மணியனுக்காக செய்தார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணி யன் உள்ளிட்ட அமைச்சர்களை வைத்துக்கொண்டு டெண்டர், மணல் குவாரி மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர், அவரவர்களுக்கான பங்கி னையும் சிதறாமல் கொடுத்துவந்தார். அவருடைய அபரிமிதமான வளர்ச்சியால் எதிர்ப்புகளும் கூடியது. இந்தசூழலில் தான் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், சீர்காழி கடை வீதியில் வெடிகுண்டு வீசி கொடூரமாகக் கொல்லப்பட்டார் ரமேஷ்பாபு. இந்த கொலைவழக்கில் மார்கோனி, அ.தி.மு.க. கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். அதோடு, ஓ.எஸ்.மணியனுக்கும், பவுன்ராஜுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே சந்தேகிக்கப்பட்ட இருவரும் மார்கோனியை தங்களோடு அ.தி.மு.க.வில் இணைத்துள்ளது பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது. இவர்களின் கூட்டணி எதைக் காட்டுகிறது என்பதை அ.தி.மு.க.விலும், ம.தி.மு.க.விலும் பேசத்துவங்கிவிட்டனர். மார்கோனிதான் கொலைக்கு காரணமென்று முன்பு கூறிய மணியன், இப்போது என்ன சொல்ல வருகிறார்?'' என்று ஆதங்கப்படுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரோ, "மார்கோனியை அ.தி.மு.க.வில் இணைக்க கட்சிக் காரர்களையோ, மூத்த முன்னோடிகளையோ, பொறுப்பாளர்களையோ கலந்தாலோசிக்காமல், பவுன்ராஜ் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியிடம் தேதி வாங்கிவிட்டார். பிறகு அ.தி.மு.க.வில் பவுன் ராஜால் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து, நடந்த சம்பவங்களையும், கொலை நடந்தபோது வெளியிட்ட அறிக்கையை யும் எடுத்துக்கூறியதால், மாவட்ட அளவிலேயே இணைப்பை நடத்திக்கொள்ளும்படி கூறிவிட்டார். எனவே சத்தமே இல்லாமல் கமுக்கமாக இணைந் துள்ளனர். ஒரே உறையில் கத்திகள் சேர்ந்துவிட்டன. விரைவில் உண்மை வெளிவரும்''” என்கிறார்.
இதுகுறித்து ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், "பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருண்டுடுச்சின்னு நினைக்குமாம், அதுபோலதான் மார்கோனி அ.தி.மு.க.விற்கு சென்றது. அவருக்கு அவங்க அம்மா நகராட்சி சேர்ம னாகணும், அவரு எம்.பி. ஆகணும் என்ற கணக் கோடு போயிருக்கிறார். ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கண்டிசன் பெயிலில் கையெழுத்து போடப் போனபோது, ஓ.எஸ். மணியன் ஆட்கள் என்னைக் கொன்னுடுவாங்க என்று பயந்து நடுங்கியவருக்கு முழுப்பாதுகாப்பு கொடுத்தது எங்கள் தலைவர்தான். அவரை குறைகூறுவது நியாயமற்றது'' என்றார். ஓ.எஸ்.மணியனிடம் இதுகுறித்து கேட்டபோது, "அது மயிலாடுதுறை மாவட்டம். அங்குள்ள மாவட்டச் செயலாளர் பவுன்ராஜிடம்தான் கேட்கணும்''’என்றார்.
மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜை தொடர்புகொண்டும், நமது போனை எடுக்கவில்லை. மார்கோனியும் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறுகையில்,’"ம.தி.மு.க.விற்காக நிறைய சொத்துக்களை இழந்துள்ளேன். என்னை கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியதாக சொல்றாங்க. காப்பாற்றுவதென்றால் ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றணும், ஜாமீனில் வெளி வந்ததை காப்பாற்றியதாகச் சொல்வது அர்த்த மில்லாதது. அக்கொலையை நான் செய்யவில்லை. விரைவில் வழக்கிலிருந்து வெளியே வருவேன்'' என்றார். அன்று குற்றவாளி என்றவரை இன்று நிரபராதி என்பதா? எனக் குமுறுகிறார்கள் அ.தி.மு.க.வினர்!