தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்துக்கொண்டு வரும் சூழ்நிலையில் ராஜபோதை தரும் "கொய்யா கஞ்சா இளம்பெண்களைச் சீரழித்துக்கொண்டியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் காலை 8 மணியளவில் நாகர்கோவில் -வடசேரி பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ -மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஜீன்ஸ் -டிசர்ட் மற்றும் சுடிதார் அணிந்த இரண்டு இளம் பெண்கள் அங்குமிங்குமாக போதையில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் சரளமாகப் பேசிய அந்த இரண்டு இளம்பெண்களும் படித்த நல்ல வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போன்று தெரிந் தாலும், அலப்பறையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் ஜீன்ஸ் அணிந்திருந்த பெண்ணின் பேண்ட் இடுப்பிலிருந்து நழுவ, அதை சுடிதார் அணிந்திருந்த பெண் சரிசெய்ய... இதையெல்லாம் அங்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அருவருப்பே எஞ்சியது.
தகவல் போய் அங்குவந்

தகவல் போய் அங்குவந்த இரண்டு மகளிர் போலீசார், அந்த இளம்பெண்களிடம் விசாரிக்க, அவர்கள் வள்ளியூர் போகவேண்டுமென்று கூறியதால், திருநெல்வேலி பஸ்சில் ஏற்றிவிட, தலைக்கேறிய போதையால் நிமிர்ந்து இருக்க முடியாமல் பஸ் சீட்டில் படுத்துக்கொண்டனர்.
கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகிலுள்ள 5 ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஒரு லாட்ஜில் அறை யெடுத்துத் தங்கியிருந்த அந்த இளம்பெண்கள் அதிகாலை 5 மணிக்கு என்னுடைய காரில்தான் நாகர்கோவில் வந்தனர், என்றொரு வாடகைக் கார் ஓட்டுநர் கூற... அவரிடம் விசாரித்தோம்.
"இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்வதாக பேச்சினிடையே தெரிவித்தனர். இருவரும் ஒரு பெரிய கொய்யாப் பழத்தை எடுத்து அதில் போடப்பட்டிருந்த துளையில் வாயை வைத்து மாறி மாறி இழுத் தனர். அவர்கள் கொய்யா கஞ்சா இழுத்தனர்'' எனக் கூறினார் அந்த ஓட்டுநர்
"கொய்யா கஞ்சாவா? அப்படின்னா...'' என்ன என அவரிடமே கேட்டபோது, "கன்னியாகுமரியில் கார் ஓட்டுற எங்களுக் கெல்லாம் இது பழசாயிடுச்சி. சமீபகாலமா இளம்பெண்கள் கொய்யா கஞ்சா போதைக்கு அடிமையாகிவருகிறார்கள். பெரும்பாலான லாட்ஜ்களில் தங்கும் பெண்களுக்கு கஞ்சாவை லாட்ஜ் நிர்வாகமே சப்ளை செய்கிறது. இங்குள்ள பெரும்பாலான ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களில் நடக்கும் பார்ட்டிகளில் பெண்கள் கொய்யா கஞ்சா போதையில்தான் கலந்துகொள்கிறார்கள்'' என வேதனைப்பட்டார்.
இந்த கொய்யா கஞ்சா குறித்துத் தெரிந்துகொள்ள காவல்துறை சம்பந் தப்பட்டவர்கள், போதைப் பொருட் களைப் பற்றித் தெரிந்தவர்களுடன் பேசினோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/kancha1-2025-11-13-17-02-23.jpg)
தமிழகத்துக்குள் ஒரிசா, அஸ்ஸாம், நாகலாந்து உட்பட பல மாநிலங்களிலிருந்து கஞ்சா வந்தாலும் கஞ்சாவுக்கு பெயர்போனது தேனி மாவட்டம் வருசநாடு கஞ்சாதான். இந்த கஞ்சாவை கொய்யாவுக்குள் அதற்கான சேர்மானங்கள் எல்லாம் சேர்த்து வைத்து இழுத்தால் அதன் போதையே தனிரகம் என்கிறார்கள்.
பழுக்காத, விளைந்த கொய்யாவில் மேல்பகுதியில் பெருவிரல் அளவிலும் துளைபோட்டு அதற்குள் பீடித்தூள் உட்பட 4 வகையான சேர்மானங்களுடன் நன்றாகத் தூளாக்கிய கஞ்சாவையும் கலந்து அதை அதன்பிறகு பாலீதீன் கவரில் கட்டி வைத்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்தில் கொய்யாவின் உள்பக்கம் முழுவதும் படர்ந்து கலர் மாறிவிடும். அதன்பிறகு பற்றவைத்து மேல்பகுதி துளையில் கொய்யா துண்டை வைத்து அடைத்து கொய்யாவின் கீழ்ப்பகுதியில் சிறிய துளைபோட்டு இழுத்தால் முதல் இழுப்பிலே ராஜபோதை வருமாம்.
கஞ்சா வாசனையும் வராது கொய்யா பழம் சாப்பிட்ட மணம்தான் வரும் நடவடிக்கை தான் காட்டிக்கொடுக்குமே தவிர, மற்றபடி கண்டுபிடிக்க முடியாது. இதனால் கொய்யா கஞ்சாவின் மவுசு இளம்பெண்களிடம் அதிகரித்துள்ளது.
பெரிய நகரங்கள், கிளப்புகள், சுற்றுலா ஸ்தலங்கள், நட்சத்திர விடுதிகள், கல்வி நிறுவனங்களின் விடுதிகள், ஐ.டி. நிறு வனங்கள், தனிமையில் இருக்கும் வசதியான பெண்கள் என அவர்களை குறிவைத்து தமிழகத்தில் கொய்யா கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலரான நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரினி வாசபிரசாத் கூறும்போது, "கேரள கஞ்சா வியாபாரி களால் குமரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதி கரித்துக்கொண்டிருந்த நிலை யில் 6 மாதத்திற்கு முன் பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனை ஓரளவுக்கு கட்டுக்குள்வந்தது. இளம்பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கொய்யா கஞ்சா கலச்சாரம் எல்லோருக்கும் கவலை தருவதுதான்.
இந்த மாதிரி கலச்சாரம் கேரளாவி லிருந்துதான் இங்கு நுழைகிறது. இளம்பெண் கள் மத்தியில் தற்போது வேகமாகப் பரவும் கொய்யா கஞ்சாவைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் பள்ளி, கல்லூரி களில் போதை தடுப்பு விழிப்புணர்வு நடத்துவதுபோல் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள், இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்'' என்றார்.
"வெவ்வேறு தினுசுகளில் போதை தரும் பல வெரைட்டிகளைக் கண்டுபிடிப்பவர் களைத் தடுத்து, அதைப் பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதன்மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்'' போதைத் தடுப்பு பிரிவு போலீசார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us