இஸ்ரேலுக்கு பெருகும் எதிர்ப்பு! முடிவுக்கு வருமா போர்?

ss

ஸ்ரேல் -ஹமாஸ் போரில், அமெரிக்க -ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிராக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் பணியாற்றும் உயரதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகி வருகிறது.

israel

இஸ்ரேல் -ஹமாஸ் இடையி லான போரில், கடந்த ஆண்டு அக் டோபர் 7ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை, 27,019 பாலஸ்தீனி யர்கள் கொல்லப்பட்டனர். 66,139 பேர் காயமடைந்துள்ளனர். 20 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள னர். இது மிகப்பெரிய இன அழிப் பாகும். இஸ்ரேலுக்கு இந்த போரால் பெருத்த அழிவு இல்லையென்றாலும், தங்கள

ஸ்ரேல் -ஹமாஸ் போரில், அமெரிக்க -ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிராக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் பணியாற்றும் உயரதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகி வருகிறது.

israel

இஸ்ரேல் -ஹமாஸ் இடையி லான போரில், கடந்த ஆண்டு அக் டோபர் 7ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை, 27,019 பாலஸ்தீனி யர்கள் கொல்லப்பட்டனர். 66,139 பேர் காயமடைந்துள்ளனர். 20 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள னர். இது மிகப்பெரிய இன அழிப் பாகும். இஸ்ரேலுக்கு இந்த போரால் பெருத்த அழிவு இல்லையென்றாலும், தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் போலியாக பிரச்சாரம் செய்ய, அதனை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டு, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தன. இதில் இன்னொரு கொடுமையாக, போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர் களுக்கு மருத்துவம் மற்றும் உணவு வழங்கும் உதவியைச் செய்துவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி செய்வதை 15க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியதால், பாலஸ்தீனியர்களுக்கு கிடைக்கவேண்டிய மனிதாபிமான உதவிகள் கேள்விக்குறியாகி வருகிறது.

iss

இத்தகைய சூழலைக் கவனித்துவரும் அமெரிக்க -ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமிக்க அதிகாரிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத் தத் தொடங்கிவிட்டனர். கடந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்க அதிகாரி ஜோஸ்பால் என்பவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காசாவில் இஸ்ரேலின் அட்டூழியங் களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவு தருவதாகவும், பாலஸ்தீனியர்களை மனிதாபிமானத்துடன் பார்க்க மறுப்பதாகவும் கூறி, பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில், அமெரிக்காவிலுள்ள சுமார் 40 அரசு அலுவலகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இஸ்ரேல் -ஹமாஸ் போரில் அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து கடிதம் எழுதியிருந்தனர். அடுத்ததாக இதே போல் அமெரிக்க இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஏஜென்ஸியைச் சேர்ந்த 1000 ஊழியர்கள் பைடனுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது, அமெரிக்கா -ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 800 உயரதிகாரிகள், இஸ்ரேல் -ஹமாஸ் போரில், தங்கள் நாடுகளின் கொள்கைகள், உலகளவிலான சுதந்திரம், நீதி, மனித உரிமைகளுக்கு எதிரானதாக இருப்பதாகவும், போர்க் குற்றங்களுக்கும், இனப் படுகொலைக் கும் ஆதரவளிப்பதாக இருப்பதாகவும் தங்கள் கடிதத்தில் தெரிவித் துள்ளனர். இவர்களில் அதிகபட்ச மாக அமெரிக்காவைச் சேர்ந்த 80 அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ள தாகவும், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடு களின் அதிகாரிகளும் கையெழுத் திட்டதாகவும் தெரியவருகிறது. இதையடுத்து தற்போது இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பும், பாலஸ்தீன நாட்டுக்கான ஆதரவும் பெருகிவருகிறது. விரைவில் போர் முடிவுக்கு வந்தால் நல்லது.

nkn070224
இதையும் படியுங்கள்
Subscribe