மிழ்நாட்டில் வெளியான "ஜெய்பீம்' எந்த அளவுக்குத் தாக்கத்தையும் அழுத்தத் தையும் ஏற்படுத்தியதோ, அதைவிடப் பன்மடங்கு தாக்கத்தை கேரளாவில் கிளப்பியிருக்கிறது "குரூப்' திரைப்படம்.

மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்து, நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான "குரூப்' திரைப்படம் பட்டயக் கிளப்பியதுடன்... மீண்டும் கேரளாவைப் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது.

f

சுமார் 37 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த சாக்கோ கொலை 12 வருடங்களுக்குப் பின்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் பரபரப்பானது. தேடப்பட்ட, தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் 37 வருடமாக இன்றைய அளவில் தனிப் பெயராக நீடிப்பது மட்டுமல்லாமல், நீதித்துறை வரலாற்றில் நீண்ட வழக்காக நீடித்துக் கொண்டிருக்கும் சாக்கோ கொலையின் குற்றவாளி தலைமறைவிலிருக்கிறானா அல்லது மரணமடைந்து விட்டானா என விடை தெரியாத அளவுக்கு ஆச்சர்யக் குறியாய் நிற்கிறது சாக்கோ கொலை வழக்கு.

Advertisment

கேரளாவின் மாவலிக் கரையைச் சேர்ந்த சுகுமார குரூப் என்பவன் 1979-களில் வளைகுடா நாட்டில் வேலையிலிருந்தவன். அப்போதைய நேரத்தில் தனக்கான எட்டு லட்சம் ரூபாயில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக் கிறான். 1983-ல் கேரளா திரும்பிய சுகுமார குரூப், தான் சாகாமல் அந்த 8 லட்சம் இன்சூரன்ஸ் தொகையைப் பெறவேண்டும் என திட்டமிடுகிறான்.

அதை நிறைவேற்ற முகூர்த்தம் குறித்த சுகுமார குரூப், மாவலிக் கரையைச் சேர்ந்த தன் வயதையொத்த இளைஞனும் டாக்சி டிரைவருமான அப்பாவி சாக்கோ வைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். 1984 ஜனவரி 7-ஆம் தேதியன்று இரவு நேரம் பஸ்சுக்காகக் காத்திருந்த சாக்கோவை சினிமா பிரதிநிதி ஒருவர் தன் காரில் லிப்ட் கொடுத்து ஏற்றிக்கொண்டு போகும்போது, தன்னோடு இரண்டு பேரைச் சேர்த்துக்கொண்டு காரை வழி மறித்து சாக்கோவைக் கடத்தி யிருக்கிறான். தன்னுடைய அம்பாசிடர் காரில் சாக்கோவைத் திணித்த சுகுமார குரூப்பும் அவனது ஆட்களும் வலுக்கட்டயாமாக சாக்கோவின் வாயில் மதுவை ஊற்றினர். போதை ஏறியதும் சாக்கோவிற்கு தனது உடையை அணிவித்து, பின் அவரை மாவலிக்கரையை ஒட்டியுள்ள குன்னம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி அடையாளம் தெரியாமல் எரித்துக் கொன்ற சுகுமார குரூப், அதில் தன் உடைகள் மட்டும் எரிந்தும் எரியாதவாறும் அடையாளம் தெரிகிற மாதிரி செட்டப் செய்திருக்கிறான். இறந்து கிடப்பது சுகுமார குரூப் என்றும் அதற்கான அடையாளத்தைக் காட்டிவிட்டு, தன்னுடைய இன்சூரன்ஸ் தொகை 8 லட்சத்தையும் இன்சூரன்ஸ் கம்பெனியிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டுத் தலைமறைவாகிவிட்டான் சுகுமார குரூப்.

rr

Advertisment

செங்கன்னூர் டி.ஒய்.எஸ்.பி.யான டி.எம்.ஹரிதாஸ் ஸ்பாட் விசாரணை செய்தபோது, சம்பவ இடத்திற்கு வந்த சுகுமார குரூப்பின் மனைவி, "தன் புருஷனக் காணல என்றும், அங்கு கிடந்தது தன் புருஷனின் உடை, உடல் என்றும்... அவரை யாரோ கொலை செய்து எரிச்சிருக்காங்க' என்றும் டி.ஒய்.எஸ்.பி. ஹரிதாசிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இன்வெஸ்ட்டி கேஷன் அதிகாரியான ஹரிதாசிற்கு கரிக்கட்டையாய் கிடப்பது சுகுமார குரூப் தானா என கனத்த சந்தேகம். சுகுமார குரூப்பின் 8 லட்சம் பாலிசி விவகாரம் தெரிய வருகிறது.

இதனிடையே சாக்கோவைக் காணவில்லை என்ற மேன் மிஸ்ஸிங் எப்.ஐ.ஆரும் காவல் நிலையத்தில் பதிவாக... டி.ஒய்.எஸ்.பி.யின் விசாரணையில் கடத்தி எரித்துக் கொல்லப்பட்டது சாக்கோ என்று தெரியவர, அதனைப் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. அதையடுத்தே இன்சூரன்ஸ் தொகையை அடைய சாக்கோவை கடத்தி எரித்துக் கொன்று விட்டு, தான் கொல்லப்பட்டதாக நாடகமாடிய சுகுமார குரூப் தப்பித் தலைமறைவாகியிருக்கிறான் என்ற விசாரணை அறிக்கையோடு நீதிமன்றம் ஏறுகிறது வழக்கு. குற்றவாளி சுகுமார குரூப், பிடிபடாமல் தலைமறைவான நிலையில்... 12 வருடமாக நடந்த சாக்கோ கொலை வழக்கில், சிக்கிய அவனது டிரைவர் பொன்னப்பன் மற்றும் அவன் மைத்துனர் பாஸ்கர பிள்ளை இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுகுமார குரூப் போலீசின் வசம் சிக்காமல் போனதால் அந்த வழக்கு நிலுவையில் நீண்டு போயிருக்கிறது.

பிடிபடாமல் தலைமறைவாகிப் போன சுகுமார குரூப் இருக்கிறானா? இறந்துவிட்டானா, அல்லது வெளிநாடு தப்பிவிட்டானா என இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் இறந்தது சுகுமார குரூப் அல்ல என்று போலீசின் ஆவணங்களில் ஏற, அதனடிப்படையில் சுதாரித்த இன்சூரன்ஸ் நிறுவனம் 8 லட்சம் பாலிசி தொகையை தராமல் முடக்கிவிட்டது.

kk

37 வருடமாகியும் குற்றவாளி சுகுமார குரூப் போலீசுக்குக் கிடைக்காமல் தலைமறைவு லிஸ்ட்டிற்குள் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குரூப் என்ற பெயரைத் தாங்கிய திரைப்படம் கடந்த வாரம் கேரளாவில் ரிலீஸ் ஆனது. ’பழைய பயங் கரத்தை அப்பட்டமாகத் தோலுரிப்பதால் படம் கேரளாவில் வைரலாகி திகிடுமுகடாக ஓடுகிறது. தற்போது கேரள மக்களிடம் சாக்கோ கொலை பற்றிய சூடான பேச்சு கனமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது.

குரூப் கேரக்டரில் நடித்திருக்கும் துல்கர்சல்மான் 37 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலையைக் கண்முன்னே கொண்டுவந்தி ருக்கிறார். சம்பவத்திற்குப் பிறகு, ஹீரோ தனக்குப் பல்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு, அண்டாவேர்ல்டு டானாக மாறி, கடத்தல் போதைக் கடத்தல் கூலிப்படை என பல்வேறு ஆக்ஷன்களில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது திரைப்படம்.

தற்போது 83 வயதைத் தொடும் சாக்கோ கொலையின் இன்வெஸ்டிகேசன் அதிகாரியான டி.ஒய்.எஸ்.பி. டி.எம். ஹரிதாஸ் கொல்லத்தில் தன் வயதான மனைவியுடன் வசிப்பதையறிந்த நாம், நமது நண்பர் மூலமாக சம்பவம் குறித்து அவரிடம் பேசியதில், சாக்கோ கொலையின் பின்னணியை அவர் விவரித்தார்.

"இப்படி ஒருத்தன் எரிந்து கெடக்கான்... மர்மமாயிருக்குன்னு அன்னைக்கி எனக்குத் தகவல் வந்ததும் ஸ்பாட்டை துல்லியமாக ஆராய்ந்தேன். இத்தன வருடமா நா சாக்கோ கொலை பத்தி அனைத்து பத்திரிகைகளுக்கும் பலநூறு தடவ பேட்டி குடுத்திருக்கேன். இந்த கேஸ்ல இது வரைக்கும் பேட்டியில சொல்லாதத, வெளிப் படுத்தாத விஷயங்களை இப்ப சொல்றேன்'' என மனம் திறந்தவர்...

;;

"எரிஞ்சு பொணமா கிடந்தது சுகுமார குரூப்தாம்னு சொன்னாங்க. ஆனா என்னோட இன்வெஸ்டி கேஷன்ல இன்சூரன்ஸ் தொகை பற்றிய தகவல் வந்ததும் அலர்ட் ஆன நான், முழுமையா விசாரிச்சேன். என்னோட இன்வெஸ்டி கேஷன்ல செத்தது சுகுமார குரூப் இல்லன்னு தெளிவா தெரிஞ்சுக் கிட்டேன். கொலைக்குப் பின்னால் தலைமறைவாகி தப்பிச்சுட்டுப் போயிட் டான் சுகுமார குரூப். அந்தச் சமயத்தில் தப்பிச்ச சுகுமார குரூப் எர்ணா குளம் பக்கமுள்ள ஆல்வா பகுதியிலிருக்கும் ஒரு லாட்ஜ்ல தலைமறைவாயிருக் காம்னு எனக்கு இன்ஃபர்மேஷன் கெடைச்சது. அப்ப உள்ள சூழ்நிலையில், என்னால அவனப் புடிக்க முடியும்ற நிலைதான். இந்த விஷயத்த என்னோட மேலதிகாரியான ஆலப்புழா எஸ்.பி. ராமச்சந்திரன்ட்ட சொன்னப்ப... அவர், "அவனப் புடிக்க நீ போகவேணாம், உனக்குக் கீழ உள்ள ஆபீசர அனுப்பு'ன்னாரு. என்னயப் போக அவர் அனுமதிக்கல. எனக்கு அவர் இந்தக் கேஸ்ல ப்ரீடம் குடுக்கல்ல. மேலதிகாரி ஏன் அப்டிச் சொன்னார்னு தெரியல... நா திகைச்சுப் போயிட் டேன்.

ஆனா அவனப் புடிக்கப்போன சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாப் போவாம, நேரந்தாண்டி அங்க போனதால, இன்ஃபர்மேஷன் கெடைச்சி சுகுமார குரூப் அங்கிருந்து தப்பிச் சிட்டான். போலீஸ்லயே அவனுக்குக் தகவல் குடுக்க ஆள் இருக்கறத நெனைச்சி எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சி. இந்தக் கேஸ்ல நா ரொம்ப ரிஸ்க் எடுத்தேன். டோட்டல் வேஸ்ட். இந்தக் கேஸ்ல ஆச்சரியம் என்னான்னா... கொலை நடந்து 37 வருஷமாச்சு இன்னைய டேட் வரைக்கும் சுகுமார குரூப் புடிபடல. அவம் இருக்கானா, இறந்துட்டானான்னு யாருக்குமே தெரியல்ல'' என்றார் சன்னமான குரலில்

இதே சந்தேகத்தைத்தான் "குரூப்' படமும் கிளறுவதால்... மீண்டும் புகையையும் புகைச்சலையும் கிளப்பி யிருக்கிறது சாக்கோ கொலை.