கோஷ்டிப் பூசல்! - ஈரோடு வி.சி.க. களேபரம்!

ee

ரோடு மாவட் டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் மாநகர் மா.செ.வா? மண்டல செயலாளரா? என எழுந்துள்ள கோஷ் டிப் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத் துள்ளது.

கொங்கு மண்ட லத்தை பொறுத்தவரை, வி.சி.க. இங்கு வலிமையாக இல்லை. இச்சூழலில், ஈரோட்டில் வி.சி.க.வின் மண்டலச் செயலாளராக இருப்பவர் சிறுத்தை வள்ளுவன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் ஆகியோரின் அணிக்கிடையே இங்கே கோஷ்டி மோதல் உருவெடுத்துள்ளது.

ஈரோடு காந்திஜி ரோட்டில் ஒரு துணிக்கடை முன்பு வி.சி.க. ஆட்டோ சங

ரோடு மாவட் டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் மாநகர் மா.செ.வா? மண்டல செயலாளரா? என எழுந்துள்ள கோஷ் டிப் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத் துள்ளது.

கொங்கு மண்ட லத்தை பொறுத்தவரை, வி.சி.க. இங்கு வலிமையாக இல்லை. இச்சூழலில், ஈரோட்டில் வி.சி.க.வின் மண்டலச் செயலாளராக இருப்பவர் சிறுத்தை வள்ளுவன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் ஆகியோரின் அணிக்கிடையே இங்கே கோஷ்டி மோதல் உருவெடுத்துள்ளது.

ஈரோடு காந்திஜி ரோட்டில் ஒரு துணிக்கடை முன்பு வி.சி.க. ஆட்டோ சங்கத்தின் போர்டு, கொடிக்கம்பம் இருந்தது. துணிக்கடையினர் தங்களுக்கு இடையூறெனக்கருதி அந்த கொடிக் கம்பத்தை எடுக்க முடிவு செய்தனர். அதை எடுக்க விடமாட்டோமென கடந்த 21ஆம் தேதி, சிறுத்தை வள்ளுவன் தலைமையில் வி.சி.க.வினர் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த நேரத்தில் மா.செ. சாதிக் ஒரு கூட்டத்தோடு வந்து கொடிக்கம்பத்தையும் போர்டையும் கழற்றிச் சென்றுவிட்டார்.

er

உண்மை தெரியாமல், அதைக் கண்டித்து சிறுத்தை வள்ளுவன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த போலீசார், உங்க மா.செ. தான் கழட்டிச் சென்றிருக்கிறார் எனக்கூறி, வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் காட்ட, அதிர்ச்சியடைந்த கூட்டம், அங்கிருந்து கலைந்துசென்றது. அப்போ திருந்தே இருவருக்குமான கோஷ்டி மோதல், சமூக வலைத்தளங் களிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. "துணிக்கடைக்காரன் கொடுத்த காசுக்கு சொந்தக் கட்சிக் கொடிக்கம்பத்தையே எடுத்துட்டாய்ங்க' என்று காட்டமாக விமர்சித்தனர். இதை யடுத்து, "அவரு தோல் தொழிற்சாலை, சாயப் பட்டறை, மணல் திருட்டு என அனைத் துப் பிரச்சனைகளுக் கும் எதிராகப் போராட் டம் செய்வதாகச் சொல்லி பெரிய தொகையை பங்கு வாங்கிட்டு போவாரு', "இவரும் முழுநேரமும் கட்டப்பஞ்சாயத்து தான்' என இருதரப்புக் கோஷ்டி நிர்வாகி களும் மாறி மாறி அடுத்தவர்களைக் குற்றம் சுமத்த.. இதுகுறித்து மண்டலச் செயலாளர் சிறுத்தை வள்ளுவனிடம் கேட்டோம்.

"எங்க தலைவர் திருமா தலைமையில் ஆட்டோ சங்கக் கொடிக்கம்பம் வைத்திருந் தோம். அதை எடுக்கக்கூடாதுன்னு காவல் துறையிடம் மனு கொடுத்துவிட்டு வந்து பார்த்தால், எங்க கட்சி மா.செ.வே அதை எடுத்துவிட்டார். இதெல்லாம் உட்கட்சிப் பிரச்சனை. இவற்றைத் தாண்டி கட்சியை வளர்ப்பதே எங்கள் நோக்கம். எங்களுக்குள் வேறெந்த பிரச்சனையும் இல்லை'' என்றார்.

மாநகர் மா.செ. சாதிக்கிடம் கேட்டபோது, "எங்க உட்கட்சிப் பிரச்சனை பற்றி உங்களிடம் பேச முடியாது சார்'' என்று பேச மறுத்துவிட்டார். உட்கட்சிப் பிரச் சனைக்காக கட்சியின் கொடிக்கம்பத்தையே பிடுங்கியெடுப்பதெல்லாம் இப்பகுதியில் கட்சியை வளர்த்தெடுக்க உதவாதென்று புலம்புகிறார்கள் லோக்கல் வி.சி.க. தொண்டர்கள்.

nkn091024
இதையும் படியுங்கள்
Subscribe