முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் அலுவலக பணியாளராக இருந்த தேவேந்திரன் என்பவர் கொடுத்த புகார் குறித்து அவரிடமே கேட்போம்...
"உடுமலை ராதாகிருஷ்ணனிடம் அலுவலக உதவியாளராக நீண்ட காலமாக இருந்து வந்தேன். கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்காக ஆள் எடுக்கும் சுற்றறிக்கை 2018-ல் வெளியிட்டிருந்தார்கள். அதுபற்றி உடுமலையிடம் நான் பேசினேன். "உனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தா சொல், வேலை போட்டு தரச்சொல்றேன்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் அலுவலக பணியாளராக இருந்த தேவேந்திரன் என்பவர் கொடுத்த புகார் குறித்து அவரிடமே கேட்போம்...
"உடுமலை ராதாகிருஷ்ணனிடம் அலுவலக உதவியாளராக நீண்ட காலமாக இருந்து வந்தேன். கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்காக ஆள் எடுக்கும் சுற்றறிக்கை 2018-ல் வெளியிட்டிருந்தார்கள். அதுபற்றி உடுமலையிடம் நான் பேசினேன். "உனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தா சொல், வேலை போட்டு தரச்சொல்றேன். முதலில் ரமேஷை நீ பார்'' என்றும் அறிவுறுத்தினார். ரமேஷ்ங்கிறவர் ராதாகிருஷ்ணனின் நண்பர் ;பிசினஸ் பார்ட்னர்.
பலரும் என்னை நம்பி பணம் கொடுத்தார்கள். அலுவலக உதவியாளருக்கு 5 லட்சம், ஆய்வக உதவியாளருக்கு 7 லட்சம் என ரேட் பிக்ஸ் செய்திருந்தனர். அதன்படி பகுதி பகுதியாக 56 லட்சம், 10 லட்சம், 26 லட்சம், 32 லட்சம் என 4 முறை வசூலித்த 1 கோடியே 50 லட்சம் ரூபாயை ராதாகிருஷ்ணனிடம் சொன்னபோது, ரமேஷிடம் கொடுக்கச் சொன்னார், கொடுத்தேன். ஆனால், வேலை போட்டுத் தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் "எங்களுக்கு வேலை வேண்டாம்; கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்க' என கேட்டதால், இதனை ரமேஷிடம் சொல்ல... இழுத்தடிபடியே இருந்தார். உடுமலையிடம் சொன்னபோதும் அவரும் கண்டுக்கவே இல்லை. ஆட்சி மாறியதும் மேலும் நெருக்கடி.
உடுமலையிடம் இதனை நான் சொன்னபோது, "நீ யார்னே எனக்கு தெரியாது; ரமேஷிடம் கொடுத்திருந்தா அவரிடம் போய் கேளு'ன்னு விரட்டிவிட்டார். ரமேஷிடம் நான் கேட்க... "பணமெல்லாம் தர முடியாது, மீறி தகராறு செய்தா கொன்னுடு வோம்' என மிரட்டினார். இதனையடுத்துதான் போலீசில் புகார் கொடுத்தேன்'' என்கிறார் தேவேந்திரன்.
இது குறித்து உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது,’"பணி நியமனத்துக் கான நேர்காணலே நடக்கவில்லை. எப்படி பணம் வசூலித்திருக்க முடியும்? அலுவலக உதவியாளர்ங்கிறவர், என் வீட்டுக்கு என்னை சந்திக்க வருகிறவர்களுக்கு டீ, காபி எடுத்து வந்து கொடுப்பவர். அவரிடம்போய் அரசு வேலைக்காக பணம் வசூலிக்கச் சொல்வேனா? அவன் எங்கேனும் ஏமாந்திருந்தா நானா பொறுப்பு? அவன் சொல்வதில் எதுவும் உண்மையில்லை''‘என்று மறுத்தார்.
இதுகுறித்து தேவேந்திரனிடம் கேட்டபோது, "கால்நடைத் துறையில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருபவர்கள், எங்களைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும், புதிய நியமனங்கள் போடக்கூடாது என கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கியதால், இண்டர்வியூ நடக்கவில்லை. அதற்காக வசூலித்த பணம் இல்லைன்னு எப்படி சொல்லிட முடியும் ? சாதகமாக தீர்ப்பு வரும் என சொல்லியே பணத்தை திருப்பித் தராமல் ராதாகிருஷ்ணனும், ரமேஷும் ஏமாற்றினர்'' என்கிறார்.