மைதியான அரசியல் சூழலுள்ள நாடு களுக்கே ஊட்டச் சத்து குறைபாட் டைக் கட்டுக்குள் கொண்டுவருவது சவாலாக இருந்து வரும் சூழ்நிலையில், அமைதி சீர்குலைந்து குண்டுமழை பொழிந்து ஓய்ந்து, பொருளாதார நெருக் கடியில் சிக்கித் தவிக்கும் ஈழத்து மக்களின் நிலையைக் கேட்கவா வேண்டும். ஈழத் தமிழர்களின் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாடுகளை நீக்கவும் அவர்களின் எதிர் காலத்தை அதிலிருந்து மேம்படுத்த வும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.

ஏழை எளிய குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத் துக் குறைபாடு பற்றி சொல்லுங்கள்...!

நான் ஊட்டச் சத்து நிபுணராக மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் சூழ்நிலையில், வறுமைக்கோட் டிற்கு கீழேயுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருந்ததைக் கண்டறிந்தேன். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் சி பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இத்தகைய குறைபாடுகளால் வரும் பிரச்சனை களுடனான குழந்தைகளைச் சந்தித்தபோது ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் இறங்கினேன். நாம் ஏன் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாகக் கொடுக்கக்கூடாது? என நினைத்தேன். இதைத் தனிப்பட்ட முறையில் செய்யாமல் ஒரு இயக்கத்தின் மூலம் செய்வோம் என அதற்கு "மகிழ்மதி' என பெயர்சூட்டி அந்த அமைப்பின்மூலம் கொரோனா காலகட்டத்திலிருந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கிவருகிறோம்.

Advertisment

ss

ஈழத்துக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவை யென்ற உணர்வு எங்கிருந்து தொடங்கியது?

நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய தோழியும், ஈழத்துக் காந்தி தந்தை செல்வாவின் பேத்தியுமான பூங்கோதையைச் சந்திக்க நேர்ந்தது. ஊட்டச்சத்து பற்றாக்குறை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஐ.நா. அறிக்கையின்படி 3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுவதாவும், அதிலும் 28 சதவிகிதம் பேர் உணவுக்கே வழியின்றித் தவிப்பதாகவும் தெரியவந்தது. இதனால் 40 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்கே செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள்தான் அந்த தேசத்தின் சொத்து. அப்படிப்பட்ட பள்ளிக் குழந்தைகள் வெள்ளி முதல் ஞாயிறு வரை உணவுக்குப் பதிலாக வெறும் தேநீர் மட்டும் அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக அறிந்து மனம் வருந்தினேன்.

ஈழத்தமிழர்களின் சந்தோசம் என் அப்பாவின் கனவாக இருந்தது. அதனால் நானும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தேடலோடு இருந்த நிலையில் தான், என் பள்ளித் தோழி நடத்திவந்த பசுமைப் பள்ளி பற்றி எடுத்துரைத்தாள். உட னடியாக என்னுடைய சேமிப்பிலிருந்து என்னுடைய அப்பாவின் பிறந்தநாளன்று ஒரு தொகையை அவர்களுக்கு வழங்கினேன். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்களுடன் பயணிக்கவும் தொடங்கினேன்.

பசுமைப் பள்ளியின் நோக்கம் என்ன? அதன் செயல்பாடுகள் எதை நோக்கிப் பயணிக்கிறது?

பசுமைப் பள்ளியின் நோக்கம், உணவை இலவசமாகத் தருவதற்கு பதிலாக, தங்களுக்குத் தேவை யான காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான பயிற்சியையும் அதற்குத் தேவையான உப கரணங்களும் இலவசமாகக் கொடுப்பது. பள்ளியில் பயிரிட்டால் அந்தப் பள்ளி பசுமைப் பள்ளியாக மாறும். தேவையான ஊட்டச்சத்துகள் அங்கு விளையும் பயிர்களின்மூலம் அந்த குழந்தைகளுக்குக் கிடைக்கும். பிறகு அந்தக் குழந்தைகள் மூலமாக வீட்டுத்தோட்டம் தொடங்கும், இப்படி படிப்படியாக அந்த சமூகமே பசி, பட்டினி பஞ்சமின்றி வாழத் தொடங்கும்..

ஈழத்தில் நிறைய பகுதிகளிருந்தும் நெடுந்தீவை முதலில் தேர்வு செய்ததன் காரணம் என்ன?

ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்குமான பயணம் தான் பசுமைப் புரட்சி திட்டம். நெடுந்தீவு, இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதி. அந்தப் பகுதிக்கு செல்வதற் கான படகுப் போக்குவரத்து ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே இருக்குமாம். அதனால் அங்கு போதிய சலுகைகள் கிட்டுவது அரிதாகிவிடும். அதனால் அதிகமாகப் பாதிப்புள்ள பகுதியிலிருந்து தொடங்கவே அந்தப் பகுதியை முதலில் தேர்வுசெய்தேன்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த மண்ணில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஊட்டச்சத்து என்பது ஏற்றுக்கொள்ளமுடி யாத ஒன்று. ஒருமுறை நான் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு நாய்க்கு தரமான உணவுக்கான அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்த நபரிடம், அந்த சூப்பர் மார்க்கெட் முன்பு ஒரு குழந்தை பசியில் அவரிடம் கையேந்தியது. அவர் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தரக்குறைவாகப் பேசினார். ஒரு வசதியான வீட்டில் வாழும் நாய்க்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகூட வசதியற்ற மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதை நான் உணர்ந்தேன். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நாம் நிச்சயம் உண்டாக்கவேண்டும். உணவு விஷயத்தில் அதற்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ளேன்.

உங்களின் இலக்கு எதைநோக்கி இருக்கும்?

நடிகரின் மகள் என்பதால் வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்திருப்பேன் என அனைவரும் நினைப்பார்கள். அப்பாவோ ஏழை எளியோரின் வலியை எனக்குச் சொல்லி வளர்த்தார். அவர் வழியில் தமிழகத்திலும் கிராமம் கிராமமாகச் சென்று ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து என் பயணத்தைத் தொடரப்போகிறேன். ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழகத்தை உருவாக்குவதே என் இலக்கு.

Advertisment