"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை-கொள்ளை விவகாரம் சட்டமன்றத்தையே சூடாக்கிவிட்டது.''”
"ஆமாம்பா, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, உண்மைக் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்ன்னு எடப்பாடியிடமே முதல்வர் ஸ்டாலின் கடுமையான குரலில் சவால் விட்டிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, முதல்வரே சட்டமன்றத்தில் நேருக்கு நேராக எடப்பாடி மீது இதில் குற்றம் சாட்டியிருப்பது, விசாரணையின் வேகத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். கொடநாடு விவகாரத்தின் க்ரைம் முடிச்சுகள் அதிர்வூட்டும் வகையில் அவிழ்ந்து வருகின்றன. அதில் முக்கிய ரோலில் இயங்கியவர், ஜெ.வின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி.கனகராஜ். அ.தி.முக. ஆட்சி யில், ஐவர் குழுவாகச் செயல்பட்ட அமைச்சர்களான ஓ.பி.எஸ், எடப் பாடி, வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர், அளவுக்கு மீறி சம்பாதித்த தகவல் ஜெ.வுக்குப் போனபோது, அவர் கள் மீது கடும் கோபம் கொண்ட அவர், அந்த ஐந்து மந்திரிகளையும் கடுமையாக நடத்தி, அவர்கள் பதுக்கிவைத்திருந்த ஆவணங்கள் உட்பட அனைத்தையும் 2016 வாக்கில் அதிரடியாகப் பறிமுதல் செய்தார். இதுபற்றி அப்போதே பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மிகச் சூடான அறிக்கையினை வெளியிட் டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.''”
"ஆமாம்பா, நல்லா ஞாபக மிருக்கு.''”
"அந்த அதிரடிகளை ஜெ.வின் உத்தரவின் பேரில் அப்போது தலைமை ஏற்றுச் செய்தவர் டி.எஸ்.பி. கனகராஜ் தானாம். ஜெ.மறைந்த பிறகு, அதே கனகராஜ்தான், ஸ்பெஷல் அசைன்மெண்ட்டோடு கொடநாடு விவகாரத் தில் களமிறக்கப்பட்டார் என்கிறது விசாரணைத் தகவல். ஜெ.மறைந்த நிலையில், முதல்வ ராக அமர்ந்த எடப்பாடிக்கும் அதே டி.எஸ்.பி. கனகராஜ்தான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவ ரிடம், ஐவர் குழுவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எங்கே? யாரிடம் இருக்கிறது என்று எடப்பாடி தரப்பு விசாரித்தபோது, அவை கொடநாடு பங்களாவில், எந்த அறையில் பூட்டப்பட்டி ருக்கின்றன என்பது வரையி லான தகவல்களை கனகராஜ் விவரித்திருக்கிறார். அதை வைத்துதான் அடுத்தடுத்த டெரர் மூவ்கள் தொடங்கி இருக்கின்றன.''”
"ம்...'' ”
"ஐவர் குழுவிடம் பறி முதல் செய்து, கொடநாடு பங்களாவில் பூட்டி பாதுகாப் பாக வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அள்ளிவர கனகராஜ் தலைமையிலேயே வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது, இதை ஆர்கனைஸ் செய்த கனகராஜ், ஜெ.வின் முன்னாள் டிரைவரான கனக ராஜ் மூலமாகவே சகலத்தையும் நடத்தினாராம். இப்படி இந்த விவகாரத்தில் இரண்டு கனகராஜ் ஆக்டிவேட் ஆகி இருப்பதால், இவர்களைப் பிரித்தறியவே விசாரணை டீம்கள் அதிகம் மெனக்கெட்டதாம். இந்த விவ காரத்தில் டிரைவர் கனக ராஜோடு, சயான், சஜீவன், ஆறு குட்டி, அனுபவ் ரமேஷ் உள் ளிட்ட சிலருடன் அப்போதைய சில அமைச்சர்களும் சேர்ந்துதான் ரூட் போட்டு, திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.
"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை-கொள்ளை விவகாரம் சட்டமன்றத்தையே சூடாக்கிவிட்டது.''”
"ஆமாம்பா, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, உண்மைக் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்ன்னு எடப்பாடியிடமே முதல்வர் ஸ்டாலின் கடுமையான குரலில் சவால் விட்டிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, முதல்வரே சட்டமன்றத்தில் நேருக்கு நேராக எடப்பாடி மீது இதில் குற்றம் சாட்டியிருப்பது, விசாரணையின் வேகத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். கொடநாடு விவகாரத்தின் க்ரைம் முடிச்சுகள் அதிர்வூட்டும் வகையில் அவிழ்ந்து வருகின்றன. அதில் முக்கிய ரோலில் இயங்கியவர், ஜெ.வின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி.கனகராஜ். அ.தி.முக. ஆட்சி யில், ஐவர் குழுவாகச் செயல்பட்ட அமைச்சர்களான ஓ.பி.எஸ், எடப் பாடி, வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர், அளவுக்கு மீறி சம்பாதித்த தகவல் ஜெ.வுக்குப் போனபோது, அவர் கள் மீது கடும் கோபம் கொண்ட அவர், அந்த ஐந்து மந்திரிகளையும் கடுமையாக நடத்தி, அவர்கள் பதுக்கிவைத்திருந்த ஆவணங்கள் உட்பட அனைத்தையும் 2016 வாக்கில் அதிரடியாகப் பறிமுதல் செய்தார். இதுபற்றி அப்போதே பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மிகச் சூடான அறிக்கையினை வெளியிட் டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.''”
"ஆமாம்பா, நல்லா ஞாபக மிருக்கு.''”
"அந்த அதிரடிகளை ஜெ.வின் உத்தரவின் பேரில் அப்போது தலைமை ஏற்றுச் செய்தவர் டி.எஸ்.பி. கனகராஜ் தானாம். ஜெ.மறைந்த பிறகு, அதே கனகராஜ்தான், ஸ்பெஷல் அசைன்மெண்ட்டோடு கொடநாடு விவகாரத் தில் களமிறக்கப்பட்டார் என்கிறது விசாரணைத் தகவல். ஜெ.மறைந்த நிலையில், முதல்வ ராக அமர்ந்த எடப்பாடிக்கும் அதே டி.எஸ்.பி. கனகராஜ்தான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவ ரிடம், ஐவர் குழுவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எங்கே? யாரிடம் இருக்கிறது என்று எடப்பாடி தரப்பு விசாரித்தபோது, அவை கொடநாடு பங்களாவில், எந்த அறையில் பூட்டப்பட்டி ருக்கின்றன என்பது வரையி லான தகவல்களை கனகராஜ் விவரித்திருக்கிறார். அதை வைத்துதான் அடுத்தடுத்த டெரர் மூவ்கள் தொடங்கி இருக்கின்றன.''”
"ம்...'' ”
"ஐவர் குழுவிடம் பறி முதல் செய்து, கொடநாடு பங்களாவில் பூட்டி பாதுகாப் பாக வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அள்ளிவர கனகராஜ் தலைமையிலேயே வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது, இதை ஆர்கனைஸ் செய்த கனகராஜ், ஜெ.வின் முன்னாள் டிரைவரான கனக ராஜ் மூலமாகவே சகலத்தையும் நடத்தினாராம். இப்படி இந்த விவகாரத்தில் இரண்டு கனகராஜ் ஆக்டிவேட் ஆகி இருப்பதால், இவர்களைப் பிரித்தறியவே விசாரணை டீம்கள் அதிகம் மெனக்கெட்டதாம். இந்த விவ காரத்தில் டிரைவர் கனக ராஜோடு, சயான், சஜீவன், ஆறு குட்டி, அனுபவ் ரமேஷ் உள் ளிட்ட சிலருடன் அப்போதைய சில அமைச்சர்களும் சேர்ந்துதான் ரூட் போட்டு, திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். அப்போது களத்தில் இறங்கும் முன்பாக, கொள்ளை மட்டுமே திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக உயிர்ப்பலிகளும் நடந்திருக்கிறது என்கிறது விசாரணைத் தரப்பு.''”
"க்ரைம் தெலுங்குப் படத்தைப் பார்க்கிற மாதிரி இருக்குதேப்பா.'' ”
"ஆமாங்க தலைவரே, எல்லாம் முடிந்த சில நாட்களில், காட்டுக்கொட்டாய் என்ற பகுதியில் டிரைவர் கனகராஜ், மது அருந்திவிட்டு டூவீலரில் சென்றபோதுதான், அவரை செட்டப் விபத்து மூலம் ’சம்பவம்’ செய்திருக்கிறார்கள். அவர் இறப்ப தற்கு முன் அவருடன் டி.எஸ்.பி. கனகராஜ் பேசி யிருக்கிறார். இப்படி சகலத்தையும் ஆதாரங்க ளோடு திரட்டிய விசாரணை அதிகாரிகள், அதன் முக்கிய சூத்ரதாரியான கனகராஜிடம் இப்போது தீவிரமாக விசாரித்திருக்கிறார்கள். அப்போது அவர், எனக்கு பாஸாக இருந்தவர்கள் என் போனை உபயோகப்படுத்தி, அதன் மூலம் உத்தரவிட்டு, சிலவற்றை செய்திருக்கலாம். மற்றபடி, அந்த சம்பவத்திற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதத் தொடர்பும் ஆர்வமும் இல்லை. என் போன் மூலம் உத்தரவுகள் போனது என்றால், உத்தரவிட்ட முக்கியப்புள்ளிகள் யார் என்று உங்களால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியுமே என்று சொன்னாராம். மேலும் அவர் எடப்பாடியையும் வேலுமணியையும் சுட்டிக் காட்டி திகிலூட்டும் சில முக்கிய தகவல்களைச் சொல்லி இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, விரைவில் கொடநாடு குற்றவாளிகள் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்ற தகவல் பரபரப்பாக தகிக்கிறது.'' ”
"இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்கும் போதே பதட்டமாகுது. அந்த க்ரைமெல்லாம் இருக்கட்டும்பா, 12 மணி நேர வேலைத் திட்டம் தொடர்பாக தி.மு.க. அரசு கொண்டுவந்து நிறை வேற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு வலுக்குதே?.''”
"ஆமாங்க தலைவரே, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்று உறுதி செய்ததன் அடையாளமாகத்தான் தொழிலாளர் தினமாக மே 1-ஐ உலகமே கொண்டாடி வருகிறது. இதற்கு மாறாக, 12 மணி நேரம்வரை வேலை பார்க்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை, தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்த விவாதத்திற்குக் கூட இடம் கொடுக்கப்பட வில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஆதங்கமாக இருக்கிறது. ஆளும் கட்சியான தி.மு.க.வின் தோழ மைக் கட்சிகள் தொடங்கி, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத் திருக்கிறது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. மற்ற மாநில அரசுகள் கூட நிறைவேற்றத் துணியாத இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை, எப்போதும் தொழிலாளர் பக் கம் இருக்கும் தி.மு.க. அரசே நிறைவேற்றி இருக் கிறதே என்ற வருத்தம் எல்லோரிடமும் இருக்கிறது.''
"இப்படி ஒரு மசோதா வருகிற தகவல் தொழிற்சங்கங்களுக்குத் தெரியாதா?''”
"சில தொழிற்சங்கங்களுக்கு இதுபற்றிய தகவல் முன்னதாகவே தெரிஞ்சிருக்கு. உடனே அவர்கள், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் போய் முறையிட்டிருக்கிறார்கள். அமைச்சரோ, இது குறித்து முதல்வரின் கவனத்துக் குக் கொண்டுபோவதாகச் சொல்லியிருக்கிறார். முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக் கிறார். ஆனால், அதிகாரிகளின் ஆலோசனைதான் வென்றிருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்தால் சாதகம்தான் ஏற்படும் என்று அவர்கள் சொன்ன பாயிண்டுகளை நம்பி, முதல்வர் அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் எதிர்ப்புகளைப் பார்த்த அரசுத் தரப்பு, இந்த சட்ட மசோதா, 12 மணி நேர வேலை யைக் கட்டாயமாக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டும் அதில் இணைந்து கொள்ளலாம் என்று சமாதானம் சொன்னபோதும், அது எடுபடவில்லை. நம்மிடம் பேசிய தொழிற்சங்கத்தினர் பலரும், இந்த சட்ட மசோதா தி.மு.க. அரசுக்கு தேர்தல் நேரத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தப் போகிறது என்கிறார்கள் காட்டமாகவே.”
"இதுபற்றி அரசு மறுபரிசீலனை செய்யுமா?''’
"அந்த 12 மணி நேர வேலைத் திட்ட மசோதா, தமிழக அளவில் அதிருப்தியை சம்பாதித்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டத்தை மே 2ஆம் தேதி கூட்டவிருக்கிறார் ஸ்டாலின். அதில் இந்த சட்ட மசோதா குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது என்கிறது கோட்டைத் தரப்பு. தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வு மான ஜவாஹிருல்லா, இந்த சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறக்கூடாது என் றும், அதைத் திரும்பப் பெறுவதே ஆரோக்கிய மானது என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்தி ருக்கிறார். மற்ற கட்சிகளும் இதே கருத்தை முன் வைத்திருக்கின்றன. அதனால், இது பற்றியெல்லாம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என் கிறார்கள். இதுதவிர, சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றுவது குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட இருக்கிறதாம்.''”
"புதிய சலுகை அறிவிப்பெல்லாம் இல்லையா?''”
"இல்லாமல் போகுமா? முதலில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல், மகளிருக் கான உரிமைத் தொகையை அண்ணா பிறந்த நாளில் முதல்வர் தொடங்கி வைக்க இருப்பதால், அதற்கான பலனாளிகளைத் தேர்வு செய்வது குறித்தும் அந்தக் கூட்டத்தில் முதல்வர் அலச இருக்கிறாராம். அதேபோல் ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் அறிவிப்பாக, புதிய சலுகை அறிவிப்புகள் எதையேனும் செய்யலாமா? என்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் அவர் விவாதிக்க இருக்கிறாராம். மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் விரைவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக் கிறதாம். அதைவிடவும் முக்கியமாக, சில அமைச்சர்களின் இலா காவை அதிரடியாக மாற்றியமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். எனவே அது குறித்தும் அந்தக் கூட்டத்தில் அவர் விவாதிப்பார் என்கிறது கோட்டை வட்டாரம்.''”
"பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே...?''
"சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ அரசியல் ரீதியாக பல்வேறு தரப்பிலும் வைரலான பிறகும் தி.மு.க. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், தியாகராஜன் ஆகியோர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. அப்படி எந்த மறுப்பும் உடனடியாக வராததால், ஆடியோ உண்மை தானோ என்று பல்வேறு அரசியல்கட்சிகளும் சோசியல் மீடியாக்களும் விவாதித்த நிலையில், அதுவும் பரபரப்பாக வைரலானது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லிவரும் அதிகாரிகள், மாநில உளவுத்துறையினர் ஆகியோர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, அமைச்சர் தியாகராஜனிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அந்த விசாரணையின் முடிவில், மறுப்பு தெரிவியுங்கள் என ஸ்டாலின் உத்தரவிட, சம்மந்தப்பட்ட ஆடியோ உண்மை இல்லை என்று பழனிவேல்தியாகராஜனிடமிருந்து மறுப்பு அறிக்கை ரிலீஸ் ஆனது.''
"எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட்டி ருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி நியமிக்கப் பட்டதை அங்கீகரித்திருக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடகத் தேர்தல் சாக்கில் அவர் தரப்பிற்கு இரட்டை இலையையும் ஒதுக்கிக்கொடுத்து விட்டதால், எடப்பாடி தரப்பு அதுதொடர்பான பூரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து அழைப்பு வர, அவர் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற கெத்தோடு, பா.ஜ.க.வின் சீனியர்களான அமித்ஷா மற்றும் ஜே.பி,. நட்டாவை சந்திக்க இருக்கிறார். அவர்களுடன் கூட்டணி பற்றிப் பேச இருக்கும் அவர், ஓ.பி.எஸ்., சசிகலா வகையறாக்களை அவர்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள வற்புறுத்தினால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஊசலாட்ட மனநிலையிலும் இருக் கிறாராம். அதே நேரம், பா.ஜ.க.வோ, தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. கூட்டணி என்ற பெயரில் எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் என அனைவரையும் தங்களுக்குக் கீழ் கொண்டுவரும் முடிவோடு இருக் கிறதாம்.''”
"கர்நாடகத் தேர்தலில் கள மிறங்கியிருக்கும் பா.ஜ.க. பிரமுகரான பி.எல். சந்தோஷ், பல்வேறு கனவுகளில் சஞ்சரிக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 140 தொகுதிகளை முன்னாள் முதல்வர் எடியூரப்பா தன் ஆதரவாளர்களுக்குப் பிரித்துக்கொடுக்க, மீதத் தொகுதிகளை பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷும், ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யும் தங்கள் ஆதரவாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, புழுதிகிளப்பி வருகின்றனர். இந்தமுறையும் பா.ஜ.க. ஜெயித்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவில், தானே முதல்வராகி விட வேண்டும் என்று பி.எல் சந்தோஷ் கனவு காண்கிறாராம். அவர் ரேஞ்சுக்கு அவர் வைத்திருக்கும் இலக்கு, மோடிக்கு மாற்றாக தான் பிரதமர் வேட்பாளராக ஆக வேண்டும் என்பதுதானாம். இதையெல்லாம் அறிந்த மாஜி முதல்வர் எடியூரப்பாவோ, தப்பித்தவறி கூட சந்தோஷ் வகுக்கும் வெற்றி வியூகம் அங்கே எடுபட்டுவிடக்கூடாது என்று, தன் மகன் விஜயேந்திரா மூலம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு பள்ளம் பறிக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு கண் வைத்த சந்தோஷ் மீது மோடி தரப்பு எரிச்ச லில் இருக்கிறதாம். கர்நாடகத் தேர்தலில் நெகட்டிவ் முடிவுதான் பா.ஜ.க.வுக்கு வரும் என்றும், அதைத் தொடர்ந்து சந்தோசை யும் அவர் சீடரான அண்ணாமலையையும் ப்யூஸ் பிடுங்கி, மூலையில் உட்கார வைத்துவிடவேண்டும் என்றும், பா.ஜ.க. தரப்பிலேயே இப்போது டாக் அடிபடுகிறது.''”
"உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்ததே?''
"ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளான ரவிக்குமார், அவர் மனைவி சாந்தி ஆகியோருக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீனை வழங்கி இருந்தது உயர்நீதிமன்றம். அவர்களின் இந்த ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று ஸ்ரீமதியின் அம்மா செல்வி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். இந்த வழக்கு தொடர்பாக என்ன நடக்கிறது என்று அங்குள்ள வழக்கறிஞர் சித்தார்த் தரப்பிடம் விசாரித்தபோது, இந்த வழக்கில் ஸ்ரீமதிக்கு அநீதி நடந்திருப்பதை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. அப்போது, இந்த வழக்கின் விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டது. அதனால் விரைவில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்போகிறோம் என்று தமிழக போலீசால் சொல்லப்பட்டது. எனவே, இந்த நிலையில் பள்ளி நிர்வாகிகளின் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்வதால் என்ன ஆகப்போகிறது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஸ்ரீமதியின் அம்மா செல்வி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது என்ற தகவலே நமக்குக் கிடைத்தது.”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஸ்டான்லி மருத்துவமனையின் டீனாக இருக்கும் டாக்டர் பாலாஜி, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடந்தபோது, அதிமு.க. வேட்பாளருக்கான படிவத்தில், ஜெ.வின் கட்டைவிரல் ரேகையை, நேரில் சென்று அவர் இசைவுடன் பெற்றதாக பொய்யான வாக்குமூலம் கொடுத்து பரபரப் பானார். அதற்காக அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூபாய் 5 லட்சம் வாங்கினார் என்ற புகாரும் அப்போது எழுந்தது. இப்போது தி.மு.க. ஆட்சியிலும் ஸ்டான்லியில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கு அவர் உடந்தையாக இருப்பதாகவும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் இடம் மாறும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இவரது ஜாதகத்தை அறிந்து உஷாரான அரசின் ஒழுங்கு நடவடிக்கைத் துறை ஆணையரான உமாசங்கர் ஐ.ஏ.ஏஸ். அவரது இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்கிறது கோட்டை வட்டாரம். அ.தி.மு.க. அரசில்தான் ஆட்டம் என்றால் தி.மு.க. ஆட்சியிலும் அதே ஆட்டம் போடுகிறார் பாலாஜி.''