Advertisment

கொடநாடு! ஓ.பி.எஸ். எடுக்கும் அஸ்திரம்! எடப்பாடியை சிக்க வைக்கும் புது ஆடியோ!

ops

"விருமாண்டி' படத்தின் முன்பாதியில் கமலை மோசமாக சித்தரித்து கதை போகும், அடுத்த பாதியில் கமலின் விளக்கம் வரும். அதுபோல கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை ஓ.பி.எஸ். தரப்பு கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறது. ஜெ. தங்கிய கொடநாட்டில் அடிக்கப்பட்ட கொள்ளை பற்றி அ.திமு.க. தரப்பிடமிருந்து இதுவரை விளக்கமே வெளிவரவில்லை. கொடநாடு அடங்கிய நீலகிரி மாவட்டம் முழுவதுமே வேலுமணியின் கண்ட்ரோலில் வருகிறது. கொடநாடு கொள்ளை முடிந்த பிறகு இதுவரை எடப்பாடி உட்பட ஒருவருமே கொடநாடு பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் கொடநாடு கொள்ளை விஷயத்தில் எடப்பாடியின் பங்கு என்ன என்பதை அதே வேலுமணி ஓ.பி.எஸ்.ஸிடம் சொல்லியிருக்கிறார்.

Advertisment

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என மாறி, மாறி விசுவாசம் காட்டிய வேலுமணியும் தங்கமணியும் பொதுக்குழு நடப்பதற்கு முந்தைய இரவில் கூட ஓ.பி.எஸ். மகனுடன் தனியாக சமரசம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ops

வைத்திலிங்கம் அந்த சமரச பேச்சுவார்த்தையை உடைத்து, தங்கமணியையும் வேலுமணியையும் ஓடவிட்டார். இப

"விருமாண்டி' படத்தின் முன்பாதியில் கமலை மோசமாக சித்தரித்து கதை போகும், அடுத்த பாதியில் கமலின் விளக்கம் வரும். அதுபோல கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை ஓ.பி.எஸ். தரப்பு கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறது. ஜெ. தங்கிய கொடநாட்டில் அடிக்கப்பட்ட கொள்ளை பற்றி அ.திமு.க. தரப்பிடமிருந்து இதுவரை விளக்கமே வெளிவரவில்லை. கொடநாடு அடங்கிய நீலகிரி மாவட்டம் முழுவதுமே வேலுமணியின் கண்ட்ரோலில் வருகிறது. கொடநாடு கொள்ளை முடிந்த பிறகு இதுவரை எடப்பாடி உட்பட ஒருவருமே கொடநாடு பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் கொடநாடு கொள்ளை விஷயத்தில் எடப்பாடியின் பங்கு என்ன என்பதை அதே வேலுமணி ஓ.பி.எஸ்.ஸிடம் சொல்லியிருக்கிறார்.

Advertisment

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என மாறி, மாறி விசுவாசம் காட்டிய வேலுமணியும் தங்கமணியும் பொதுக்குழு நடப்பதற்கு முந்தைய இரவில் கூட ஓ.பி.எஸ். மகனுடன் தனியாக சமரசம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ops

வைத்திலிங்கம் அந்த சமரச பேச்சுவார்த்தையை உடைத்து, தங்கமணியையும் வேலுமணியையும் ஓடவிட்டார். இப்படி ஓ.பி.எஸ்.ஸுடன் உறவாடிக் கொண்டிருந்த காலத்தில் கொடநாடு கொள்ளையில் என்ன நடந்தது என வேலுமணி, ஓ.பி.எஸ்.ஸிடம் பலமுறை விளக்கி வந்துள்ளார்.

அந்த ரகசியங்களை எல்லாம் இப்போது நடக்கும் சண்டையில் ஓ.பி.எஸ். தரப்பு வெளியே விட திட்டமிட்டுள்ளது. கொடநாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட ஆவணங்களில் ஓ.பி.எஸ்.ஸின் ஆவணங்கள் இருந்தது. அதை ஓ.பி.எஸ்.ஸுக்கு கொடுத்தார் எடப்பாடி. அந்த தகவலைத் தவிர மற்றவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சொல்லப்படும். அத்துடன் கூடவே சசிகலா, கொடநாடு கொள்ளை பற்றி சொல்ல விரும்பிய தகவல்களும் பகிர்ந் தளிக்கப்படும். இனிதான் கொடநாடு விவகாரம் சூடு பிடிக்கும் என நம்மிடம் பெட் கட்டுகிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர். ஒருவேளை இ.பி.எஸ். தரப்பினர் இதுபோல ஓ.பி.எஸ்.ஸை போட்டுக் கொடுக்க முன்வந்தால், கொடநாடு விவகாரத்தில் அது செல்லாது. பழி முழுக்க இ.பி.எஸ். மேல் வரும், அவர் தப்ப முடியாது. இ.பி.எஸ். நிச்சயம் சிறைக்குச் செல்வார் என கோவையைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலம் காட்டு கிறார்கள்.

ssஇதற்கிடையே, பலம்வாய்ந்த அணியாக இருக்கும் இ.பி.எஸ். அணி இவ்வளவு பலமாக தொடர்வதை பா.ஜ.க. விரும்ப வில்லை. எடப்பாடி அணியில் அதிகம் கூச்சல் போடும் சி.வி.சண்முகத்தின் போக்கை ரசிக்கவில்லை. அதனால் விரைவில் சி.வி.சண்முகத்திற்கெதிராக வேலுமணி தலைமையில் ஒரு கலகம் எடப்பாடி முகாமில் வரலாம் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். வேலுமணி, எடப்பாடி சொல்வதை கேட்பதில்லை. கோவை மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் குழந்தைவேலுவின் மகன் ரவி மற்றும் செ.ம.வேலுச்சாமி ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அவர்களுக்குப் பதவி கொடுத்தால், நான் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வேன் என வேலுமணி மிரட்டிவருகிறார்.

அத்துடன், நடைபெற்ற பொதுக்குழுவுக்கு தங்கமணியும் வேலுமணியும் பணம் கொடுக்க வில்லை. அதனால் கட்சிக்காரர்களுக்கு பணம் கொடுக்க திருச்சியைச் சேர்ந்த சாலை ஒப்பந்ததாரர் திருக்குமரன் என்பவரை எடப்பாடி செட்-அப் செய்தார். அவர் பொதுக்குழுவில் எடப்பாடி பின்பு நின்ற படத்தைப் பார்த்த தி.மு.க. அமைச்சர் நேரு, அவரை ப்ளாக் லிஸ்ட் செய்து உத்தரவிட்டிருக் கிறார். ஓ.பி.எஸ்.ஸுக்கு டெல்டா மாவட்டத்தில் முக்குலத்தோர் மத்தியில் வைத்திலிங்கத்தால் ஆதரவு பெருகுவதைக் கண்ட இ.பி.எஸ். தரப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்திலிங்கத்தை சந்தித்துப் பேசினார்கள். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்பதால் அத்துடன் சமரச முயற்சிகளை கைவிட்டுவிட்டனர் என்கிறது அ.தி.மு.க. தரப்பு.

இதற்கிடையே பா.ஜ.க., ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா மூன்று தரப்பையும் சமபலத்துடன்தான் கையாண்டு வருகிறது. மூவரும் உங்கள் வழியில் செல்லுங்கள், உங்களைப் பலமாக்கிக்கொள்ளுங்கள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகளும் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும். இதற்கு ஒத்துக்கொண்டால் இரட்டை இலை அ.தி.மு.க. தரப்பிடம் இருக்கும், இல்லையென்றால் அந்த சின்னத்தை முடக்கி வைத்துவிட்டு அதை தேர்தல் நேரத்தில் வழங்கி ஒற்றுமையை பா.ஜ.க. உருவாக்கும்.

Advertisment

eps

ஜனாதிபதி வேட்பாளர் முர்மு சென்னைக்கு வந்தபோதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரையும் அழைத்திருந்தது பா.ஜ.க. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸுடன் ஒரே மேடையில் தோன்றுவதை தவிர்த்துவிட்டார். ஓ.பி.எஸ்.ஸை வைத்துக்கொண்டால்தான் இ.பி.எஸ். காங்கிரஸ் பக்கம் போவதை தடுக்க முடியும், அத்துடன் சசிகலாவும் வேண்டும்... அப்பொழுதுதான் இ.பி.எஸ். தேர்தல் வியூக அமைப்பாளர் சுனில் வரைக்கும் நகர்வுகளுக்குப் போகமாட்டார் என்பது பா.ஜ.க.வின் திட்டம் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இந்தச் சூழலில் கொடநாடு வழக்கு வேகம் பெறுவதை எடப்பாடி விரும்பவில்லை. எடப்பாடிக்காக சேலம் இளங்கோவன் குற்றவாளிகள் தரப்பில் பேசியது வீடியோவாக ஒரு தொலைக் காட்சியிலும், ஆடியோவாக நக்கீரன் இணையதளத்திலும் வெளியானது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியாக்கியுள்ளது. கனகராஜின் சகோதரர் பழனிவேலை போலீஸ் கைது செய்துள்ளது. ஜெ.வின் கார் டிரைவர் கண்ணனை விசாரணைக்கு அழைத்துள்ளது. அடுத்து எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் கைதுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அவரது முன் ஜாமீனுக்கான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன என்கிறது எடப்பாடி வட்டாரம்.

nkn060722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe