Advertisment

புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப் பற்றுங்கள்! -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

bookfair


சென்னை -நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதல்வருடன், அமைச் சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஸ் பொய்யாமொழி மற்றும் பபாசி அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். அங்கு நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையையும் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின், 1 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் கூடிய கலைஞர் பொற்கிழி விருதை 6 எழுத்தாளர்களுக்கு வழங்கினார்.  

Advertisment

பின்னர் விழா பேருரையாற்றிய முதல்வர், "சிந்தனை ஊற்றெடுக்கும் அடித்தளமாக இருக்கும் புத்தகங்களை, மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கின்ற  எண்ணத்தோடு, இந்தப் புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளை யும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1977ல் தொடங்கிய இந்த அறிவுப்பணி, இப்போது 49ஆவது ஆண்டில் இருந்துகொண்டிருக்கிறது. அன்றைக்கு 13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி, இன்றைக்கு 900 அரங்குகளுடன் இருப்பதே, இதன் வெற்றிக்கான சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது போல, புதிதாக வெற்றி பெற்றிருக்கும் பபாசி பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று உங்களைப்போல நானும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையளிக்கும் விதம


சென்னை -நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதல்வருடன், அமைச் சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஸ் பொய்யாமொழி மற்றும் பபாசி அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். அங்கு நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையையும் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின், 1 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் கூடிய கலைஞர் பொற்கிழி விருதை 6 எழுத்தாளர்களுக்கு வழங்கினார்.  

Advertisment

பின்னர் விழா பேருரையாற்றிய முதல்வர், "சிந்தனை ஊற்றெடுக்கும் அடித்தளமாக இருக்கும் புத்தகங்களை, மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கின்ற  எண்ணத்தோடு, இந்தப் புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளை யும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1977ல் தொடங்கிய இந்த அறிவுப்பணி, இப்போது 49ஆவது ஆண்டில் இருந்துகொண்டிருக்கிறது. அன்றைக்கு 13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி, இன்றைக்கு 900 அரங்குகளுடன் இருப்பதே, இதன் வெற்றிக்கான சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது போல, புதிதாக வெற்றி பெற்றிருக்கும் பபாசி பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று உங்களைப்போல நானும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையளிக்கும் விதமாகத்தான், உங்களின் செயல்பாடு களும் இருந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக... இன்னும் அதிகளவிலான மக்கள், இந்த கண்காட்சிக்கு வரவேண்டு மென்று நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்திருப்பதை நான் வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.

Advertisment

bookfair1

இதில், தனிப்பட்ட முறையில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்னவென்றால், தலைசிறந்த படைப்பாளிகளுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் பொற்கிழி விருது களை வழங்கியது. அதிலும் குறிப்பாக, தலைவர் கலைஞர் அவர்களே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் 6 எழுத்தாளர் களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான விருதுகளை நவீன தமிழ்க் கவிதையின் மிக முக்கியமான முகமாக இருக்கும் கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு கவிதைக்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காத்திரமான படைப்புகளைப் படைக்கும் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு சிறுகதைக்கும், பன்முக எழுத்துக்குச் சொந்தக்காரரான இரா.முருகன் அவர்களுக்கு நாவலுக்கும், ஓவியங்கள், சிற்பங்கள், கட்டடக்கலைகள் குறித்த ஆய்வை நெடுங்காலமாக செய்துவரும் பேராசிரியர் பாரதிபுத்திரன் அவர்களுக்கு உரைநடைக்கும், நவீன நாடக மேடைகளில் இயங்கிவரும் முக்கியமான கலைஞரான கருணாபிரசாத் அவர்களுக்கு நாடகத்திற்கும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான அறிஞரான எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து, பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற முக்கியமான வரலாற்று ஆவணத்தை தந்துள்ள வ.கீதா அவர்களுக்கு மொழிபெயர்ப்புக்கும் இன்றைக்கு வழங்கியி ருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நம்முடைய எண்ணமெல்லாம் தமிழ்ச் சமூகம், அறிவில் சிறந்த சமூகமாக உலகத்தால் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்கான அறிவுப்புரட்சி யை ஏற்படுத்த நம்முடைய மண்ணில் தோன்றி யதுதான் திராவிட இயக்கம். இந்த அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்திய முக்கியமான கருவி தான், புத்தகங்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், "என்னுடைய வாரிசுகள் என்பது, என்னு டைய புத்தகங்கள்தான்'’என்று சொன்னார். பேரறி ஞர் அண்ணா அவர்கள், "வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள்' என்று சொன்னார். அதைப்போல நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், "புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள்' என்று கட்டளையிட்டார். "அறிவுக்கான தீ பரவட்டும்' என்று அவர்கள் சொன்ன பாதையில்தான், நம்முடைய திராவிட மாடல் அரசும் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

bookfair2

இன்னும் சொல்லவேண்டுமென்றால், தனிப்பட்ட முறையில் 2017ஆம் ஆண்டு முதலே, என்னை சந்திக்க வருபவர்கள், அப்படி சந்திக்க வருகின்றபோது எனக்கு பொன்னாடைகளும், பூங்கொத்துகளும் வழங்குவதற்கு பதிலாக புத்தகங்களை வழங்கவேண்டுமென்று சொன்னேன். அப்படி பெறப்பட்ட புத்தகங்களை மாணவர்கள், இளைஞர்கள், படிப்பு வட்டங்கள், நூலகங்களுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். இது வரை, சுமார் நான்கு இலட்சம் புத்தகங்களை வழங்கியிருக்கிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல, இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழக்கூடிய நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறோம். புத்தகங்களை பரிமாறுவதை ஒரு இயக்கமாகவே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலமாக மட்டுமல்ல, திராவிட மாடல் அரசு மூலமாகவும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டுமென்று ஏராளமான திட்டங்களையும், முன்னெடுப்புகளை யும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். நாம் செய்துகொண்டிருக்கும் பணிகளில் சிலவற்றை சொல்லவேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான், தமிழ்நாடு அரசால், கன்னிமாரா நூலகத்தின் ஒரு பகுதியில் நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை நடத்த ஆண்டுதோறும் 75 இலட்சம் ரூபாயை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில், இந்த புத்தகப் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் அமைப்புக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினோம். அந்த நிதியிலிருந்து பதிப்பாளர்கள் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெற்று பயனடைந் திருக்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சி நடைபெறக் காரணம், நம்முடைய திராவிட மாடல் அரசுதான் என்று பெருமையுடன் சொல்வேன்.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்கா அமைத்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை யும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வும், தமிழ் நூல்களை உலக மொழிகளில் வெளி யிடவும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இது எல்லாவற்றையும்விட, 218 கோடி ரூபாயில், மதுரையில் அமைத்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கிறது.

bookfair3

2007-ல் தலைவர் கலைஞர், சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கி னார். அந்த பயணத்தை, இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் இன்னும் வேகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை இலக்கியத் திருவிழா, நெல்லையில் பொருநை, கோவையில், சிறுவாணி, திருச்சியில் காவிரி, மதுரையில், வைகை என்று இலக்கியத் திருவிழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமா, தமிழ் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசைதோறும் திராவிடம் என்று எழுத்தாளர் களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுவருகிறது. 

இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம்… தமிழும், தமிழ்நாடும் செழிக்க வேண்டும் என்றால், நீங்கள் வெற்றியாளர்களாக உயரவேண்டுமென் றால், புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை நேரலையிலும், செய்திகளிலும் பார்ப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, சென்னையிலும், சுற்றுப்புற மாவட்டங்களிலும் இருப்பவர்கள், இந்தப் புத்தக கண்காட்சிக்கு வாருங்கள்.…விடுமுறை நாட்களில், குழந்தைகளுடன் வாருங்கள்.… குழந் தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.

புத்தகக் கண்காட்சிகள் என்பது, எழுத்தாளர் களுக்கு மட்டுமானது அல்ல; அனைவருக்கும் சொந்தம். வாசிப்பு பழக்கம் வளரவும், சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் படைப்புகளை ஊக்குவிக்கவும் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கிறேன்'' என்றார்.

nkn140126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe