தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும்போது அங்குள்ள பெரிய தலைகளிடம், "இந்த ஏரியா மக்களோட முக்கிய பிரச்சினை என்னன்னு சொல் லுங்க. நிச்சயம் அதை நிறைவேற்றி வைக் கிறேன்''’என்று வாக்குறுதி தருவதும், வெற்றி பெற்றபிறகு அந்த நினைப்பே இல்லாமல் அரசியல் பணிகளில் மூழ்கிப்போவதும் வழக்கமாக நடப்பதுதான். தென்காசி மாவட்டம் -கரிசல் குளத்திலோ இதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது.

Advertisment

ஆ-548 கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -புத்துயிரூட்டல் மற்றும் தொடக்கவிழா மேடையில் மைக் பிடித்த ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை.வைகோ, "தமிழக வரலாற்றில் இதுபோன்ற விழா நடந்ததில்லை என்கிறார்கள். 20 ஆண்டு களுக்கு முன் மூடப்பட்ட இந்தச் சங்கம் மீண்டும் இயக்கப்படுகிறது. 20 மாத கால இடைவிடாத தொடர்முயற்சி காரணமாக, நான்கு கிராம மக்களிடம் உறுதியளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்துவிட்டோம் என்ற மனநிறை வோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். எனது குறுகிய கால அரசியல் பொதுவாழ்வுப் பயணத்தில் இதனை ஒரு சாதனை யாகவே உணர்கிறேன்''’என்று தன் தந்தையும் தலைவருமான வைகோ மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் அமர்ந் திருந்த மேடையில் பெருமிதத்துடன் பேசிவிட்டு, "எங்க பாட்டி மாரியம் மாளின் சுவாசக்காற்று, உயிர்மூச்சு உலவுகின்ற மண் இது. இந்த மண் ணைக் காப்பதற்கு என்றென்றைக்கும் பாடுபடுவேன்...''’என்று உணர்ச்சி வசப்பட்டார்.

duraivaiko

கரிசல்குளம் சங்கத்துக்கு துரை வைகோ புத்துயிரூட்டிய பின்னணி இது...

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ராஜாவுக்காக கரிசல்குளம் பகுதியில் துரை.வைகோ பிரச்சாரம் செய்தபோது, ஊர் மக்கள் ஒன்று திரண்டு "20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த கூட்டுறவு சங்கம் மீண்டும் இயக்கப்பட வேண்டும்...'’என கோரிக்கை வைத்தனர். சில குறைபாடுகளால் அப்போது கலைக்கப்பட்ட சங்கம் மீண்டும் இயங்கினால் கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி, ஆலடிபட்டி, அய்யாபுரம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்களும் அருகிலுள்ள சுற்றுவட்டார மக்களும் பயனடைவார்கள் என்றனர். கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த துரை.வைகோ அவர்களிடம், "மீண்டும் சங்கம் இயங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன்'’என்று வாக்குறுதி அளித்தார்.

பல்வேறு அரசியல் இயக்கங்களும் பலரும் இச்சங்கத்தை மீண்டும் தொடங்கிட மேற் கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட துரை.வைகோ, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை திண்டுக்கல்லில் சந்தித்தார். "இதற்காகவா சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்?''’என்று அமைச்சர் ஆச்சரியப்பட, "நான் மக்களிடம் மீண்டும் சங்கம் இயக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதை நிறைவேற்ற இயலுமா என்ற கவலையோடு, உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்...''’என்று கூற, அருகிலிருந்த அதிகாரிகளுடன் விவாதித்துவிட்டு ஐ.பெரியசாமி, "சற்று சிரமம்தான். ஆனாலும்.. மீண்டும் கரிசல்குளம் சங்கம் இயக்கப்படும். நீங்கள் மனநிம்மதியுடன் செல்லுங்கள்''’ என்றிருக் கிறார்.

Advertisment

duraivaiko

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தொடர்ந்து பேச... அரசு அதிகாரிகளை அழைத்து, "தமிழகத்தில் மூடப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் மீண்டும் திறக்கப்பட்ட முதல் சங்கமாக கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இருக்கட்டும்''என்று உத்தரவிட்டார் அமைச்சர். இதனைத் தொடர்ந்து “"கரிசல்குளம் கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றித் தாருங்கள்'’என்று அதிகாரிகள் தரப்பில் கூற, அந்த நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுநல நோக்கம் கொண்டவர்களை அழைத்து, வைப்புநிதி செலுத்துவது உள்ளிட்ட சட்டப்பூர்வ கடமை களை நிறைவேற்றித்தர முடுக்கிவிட்டார் துரை வைகோ.

இந்தச் சூழ்நிலையில்தான், பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சரானார். "திரும்பவும் முதல்ல இருந்தா? மறுபடியும் duraivaikoகாலதாமதம் ஆகிவிடுமோ?'’என்ற கவலையுடன் அமைச்சர் பெரியகருப்பனைச் சந்தித்தார் துரை.வைகோ. கூட்டுறவு சங்கக் கோப்புகளைப் பார்வையிட்ட அமைச்சர் பெரியகருப்பன், "விரைவில் சங்கம் திறக்கப்படும்'’என உறுதியளிக்க, “"அப்படி யென்றால் நீங்கள்தான் திறந்துவைக்க வேண்டும்'’ என்று கேட்டுக்கொண்டார் துரை வைகோ.

Advertisment

நடந்ததை எல்லாம் மனதில் நிறுத்தியபடியே சங்கத்தின் தொடக்க விழா மேடையில், “"இந்தச் சாதனை நிகழ்ந்திட முக்கிய காரணம் -முதலமைச் சர் அண்ணன் தளபதியின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. முதலமைச்சருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் கோடானுகோடி நன்றி உரித்தாகுக''’என்று நெகிழ்ந்தார் துரை.வைகோ.

ஆலமநாயக்கர்பட்டியில் நாம் சந்தித்த கூட்டுறவு இயக்குநர் பண்டார சாமியும் விவசாயி செல்வராஜும் "கடந்த 20 வருஷமா கஷ்டப்பட்ருக் கோம். உரத்துக்காக ஊர் ஊரா அலைஞ் சிருக்கோம். அடுத்த ஊரு சொசைட்டில போய் வாங்கும்போது அவங்க கொடுக்குறதத்தான் நாம வாங்கமுடியும். அங்கே போயி நாம ரூல் பேசமுடியாது. கூட்டுறவு சங்கம் மீண்டும் தொடங்கப் பட்டது, உண்மையிலேயே சாதனை தான். எங்க ஊருக்கு விடியல் வந்திருச்சு. இனி உரத்தட்டுப்பாடு பிரச்சனை எங்களுக்கு இல்ல. பயிர்க்கடன் வாங்கலாம். நகைக்கடன் வாங்கலாம். கறவை மாடு கடன் வாங்கலாம். எது வேணும்னாலும் வாங்கிக்கலாம். இனி எங்க ஊரு சூப்பரா இருக்கும்'' என்றனர் மகிழ்ச்சியுடன்.

உலகத் தமிழர் நலனுக்காக இந்தியப் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, கடல் கடந்தும் கர்ஜனை எழுப்பி வருபவர் வைகோ. அவருடைய வாரிசான துரை.வைகோ, தனது பாட்டி மாரியம்மாளின் ஊரான கரிசல்குளம் கிராமத்திலிருந்து உணர்வுப்பூர்வமான சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.