தி.மு.க.வில் தற்போது 15-ஆவது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. சேலத்தில், எஸ்.ஆர்.சிவலிங்கம் பொறுப்பாளராக உள்ள சேலம் கிழக்கு மாவட்டத்தில் உட்கட்சிப்பதவி ஏலம் விடப்படுவது போல் தேர்வு செய்யப்பட்டதாக புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
இது தொடர்பாக தி.மு.க உடன்பிறப்பு கள் நம்மிடம் விரிவாகப் பேசினர். "சேலம் மாவட்டத்தில், அதிகமாகப் பழங்குடியினர் வசிக்கும் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்தில் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த தும்பல் கணேஷ் என்பவர் ஒ.செ. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்காக கணேஷ், மா.செ.வுக்கு வெயிட்டான அமௌண்ட் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர். அவர் தும்பல் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது, அரசு நிதி 7.73 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக கடந்த 2016-ல் கைது செய்யப் பட்டார். கணேஷ் மீது சர்ச்சை கிளம்பியதால், அந்த பதவிக்கு எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சிவராமனைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. சிவராமனும் அரசு வேலை வாங்கித் தருவதாக
தி.மு.க.வில் தற்போது 15-ஆவது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. சேலத்தில், எஸ்.ஆர்.சிவலிங்கம் பொறுப்பாளராக உள்ள சேலம் கிழக்கு மாவட்டத்தில் உட்கட்சிப்பதவி ஏலம் விடப்படுவது போல் தேர்வு செய்யப்பட்டதாக புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
இது தொடர்பாக தி.மு.க உடன்பிறப்பு கள் நம்மிடம் விரிவாகப் பேசினர். "சேலம் மாவட்டத்தில், அதிகமாகப் பழங்குடியினர் வசிக்கும் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்தில் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த தும்பல் கணேஷ் என்பவர் ஒ.செ. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்காக கணேஷ், மா.செ.வுக்கு வெயிட்டான அமௌண்ட் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர். அவர் தும்பல் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது, அரசு நிதி 7.73 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக கடந்த 2016-ல் கைது செய்யப் பட்டார். கணேஷ் மீது சர்ச்சை கிளம்பியதால், அந்த பதவிக்கு எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சிவராமனைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. சிவராமனும் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக எஸ்.பி.யிடம் புகார் மனுக்கள் குவிந்துள்ளன.
பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்திற்கு அன்பு (எ) மருதமுத்துவின் பெயர் பரிசீலனையில் உள்ளது. கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத இவரை
ஒ.செ. பதவிக்கு பரிந்துரை செய்ய மா.செ.வை பணத்தால் குளிப்பாட்டியதுதான் ஒரே காரண மாம். பெத்தநாயக்கன்பாளையம் மத்தி ஒன்றியச் செயலாளர் பதவிக்கு முதலில் வழக்கறிஞர் மனோகரன் என்பவரை பரிந்துரை செய்தார் மா.செ. ஆனால் மனோகரன் மேற்கு ஒன்றிய பகுதியில் வசிப்பதாக ஆட்சேபணை கிளம்ப வும், அவரை தேர்தல் ஆணையர் பரந்தாமன் நிராகரித்துவிட்டார். அதன்பிறகு இந்த ஒன்றியத்திற்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி மூர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கைமாறாக மூர்த்தி தரப்பில் இருந்து எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் மனைவி பெயரில் சில ஏக்கர் நிலங்கள் கிரயம் செய்து தரப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மூர்த்தி, அ.தி.மு.க. ஆட்சியின்போது சந்தனக்கட்டைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
தலைவாசல் தெற்கு ஒன்றியத்திற்கு, உடையார் சமூகத்தைச் சேர்ந்த அழகுவேல் என்பவரை செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சிவலிங்கம். தற்போது அழகுவேல், பேரூர் செயலாளராக இருக்கிறார். ஒரு பதவியில் இருப்பவரை மற்றொரு பதவிக்கு நியமிக்கக் கூடாது. இதன் பின்னணியிலும் பணம்தான் விளையாடி இருக்கிறது. அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு முதலில் சங்கர் என்கிற சாமிநாதனை பரிந்துரை செய்ய மா.செ. முடிவுசெய்திருந்தார். இதற்காக மா.செ.வுக்கு கனமாகக் கவனிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே, மா.செ.வின் உறவினரான ரத்னவேல், கூடுதலாக 10 லட்சம் சேர்த்துக் கொடுத்ததால் ரத்னவேலை பரிந்துரை செய்துள்ளார்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
ஒருங்கிணைந்த பெத்தநாயக்கன்பாளை யம் சிட்டிங் ஒ.செ. முருகேசன் வெளிப்படை யாகவே அதிருப்தி யைச் சொன்னார். "உள் ளாட்சித் தேர்தலில் இரண்டு பேரூராட்சி தலைவர்களை, 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஜெயிக்க வைத்தேன். கட்சிக்கு உழைக்காத பலருக்கு ஒ.செ. வாய்ப்பு வழங் கப் பட்டுள்ளது. பொதுச் செயலாளர் துரைமுரு கன், எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும்படி சொல்லியும் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கேட்கவில்லை'' என்கிறார்.
தும்பல் கணேஷ் மீதான புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, "ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தபோது எனக்கும், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கூட்டுறவு இளங்கோவன் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் பேரில், அப்போது, தும்பல் பஞ்சாயத் துத் தலைவராக இருந்த என் மீது அரசு நிதி யைக் கையா டல் செய்ததாகப் பொய் வழக்கு தொடர்ந்த னர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது'' என்றார்.
வெள்ளாளப்பட்டி மூர்த்தி கூறுகையில், "1995ம் ஆண்டு, சந்தன கட்டை கடத்தியதாக என் மீது வழக்குப்பதிவு செய்தனர். 1998-99ல் அந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனேன். இப்போது என் மீது எந்த வழக்கும் இல்லை'' என்றார்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத் தின் மீதான அடுக் கடுக்கான புகார்கள் தொடர்பாக அவரிடம் பேசினோம். "ஒன்றியச் செயலாளர் பதவிக்காக யாராவது லட்சங்களில் கொடுப்பார்களா? அப்படிக் கொடுத்தால் நான் ஏன் இன்னும் கடன்காரனாக இருக்க வேண்டும்? ஒன்றியச் செயலாளர் பதவிக்கு நானாக யாரையும் பரிந்துரை செய்ய வில்லை. என் மீது பொய் புகார் சுமத்து கிறார்கள். கட்சித் தலைமை யாரை மாவட்டச் செயலாளராக நியமித்தாலும் கட்டுப்பட்டு வேலை செய்வேன். அரசியலில் ஒருவர் வளர்ந் தால் யாருக்கும் பிடிக்காது. ஒரே பதவிக்கு இரண்டு பேரிடம் பணம் வாங்க முடியுமா? இதிலிருந்தே இதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு என்று தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் எஸ்.ஆர்.சிவலிங்கம்.
பேரறிஞர் அண்ணா, "கழகப் பொறுப்பு என்பது பிள்ளையார் கோயில் சுண்டல் அல்ல; உனக்கு, எனக்கு என பங்குபோட. அது, உழைப்பவனுக்குக் கொடுக்கும் பட்டம்' என்றார். உழைப்பவர்களுக்கே பதவிகள் கிடைத்தால் சரி!