தன்னிடம் வழக்கு விசாரணைக் காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதைக்கு உள்ளாக்கிய அம்பை ஏ.எஸ்.பி.. பல்வீர்சிங் மீதான விசாரணை வேக மெடுத்து, பல்வேறு புதுப்புதுத் தகவல்கள் வெளிவருகின்றன.
பல்வீர்சிங் ராஜஸ் தான் மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் தென்மண்டல கள நிலவரம் அறியாத ஆபீஸர் என்றும், அவரது மோசமான நடவடிக்கைகள் பற்றி பல்வேறு மட்டங்களிலும் விரிவாகவே கூறுகின்றனர். ஏ.எஸ்.பி. என்ற பொறுப்பிலிருந்தாலும், தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்ற கெத்தில், தனது சப்-டிவிசன் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூத்த காவலர்கள் கூறும் கருத்துக்களை, பல்வீர்சிங் காதில் வாங்கிக் கொள்வதில்லையாம். தன்னையொத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசிப்பதால், தனது கட்டுப்பாட்டிலுள்ள சப்-டிவிசன் மக்களின் வாழ்க்கை முறைகள், பாடி லாங்வேஜ் பற்றி அறிந்ததில்லை. வடமாநில மக்களின் போக்கும், தமிழ்நாட்டு மக்களின் நடைமுறைகளும் வேறுபட்டவை. அதை ஏ.எஸ்.பி. புரிந்து கொள்ளாததின் விளைவே இதுபோன்ற கொடூர தண்டனை
தன்னிடம் வழக்கு விசாரணைக் காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதைக்கு உள்ளாக்கிய அம்பை ஏ.எஸ்.பி.. பல்வீர்சிங் மீதான விசாரணை வேக மெடுத்து, பல்வேறு புதுப்புதுத் தகவல்கள் வெளிவருகின்றன.
பல்வீர்சிங் ராஜஸ் தான் மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் தென்மண்டல கள நிலவரம் அறியாத ஆபீஸர் என்றும், அவரது மோசமான நடவடிக்கைகள் பற்றி பல்வேறு மட்டங்களிலும் விரிவாகவே கூறுகின்றனர். ஏ.எஸ்.பி. என்ற பொறுப்பிலிருந்தாலும், தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்ற கெத்தில், தனது சப்-டிவிசன் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூத்த காவலர்கள் கூறும் கருத்துக்களை, பல்வீர்சிங் காதில் வாங்கிக் கொள்வதில்லையாம். தன்னையொத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசிப்பதால், தனது கட்டுப்பாட்டிலுள்ள சப்-டிவிசன் மக்களின் வாழ்க்கை முறைகள், பாடி லாங்வேஜ் பற்றி அறிந்ததில்லை. வடமாநில மக்களின் போக்கும், தமிழ்நாட்டு மக்களின் நடைமுறைகளும் வேறுபட்டவை. அதை ஏ.எஸ்.பி. புரிந்து கொள்ளாததின் விளைவே இதுபோன்ற கொடூர தண்டனைகள் என்கிறார்கள்.
பற்களைப் பிடுங்குவது சாதாரண விஷயமல்ல, அதிலும் வாயில் கற்களை அடைத்து, வலுவாகக் கடிக்க வைத்து சித்திரவதைக்குள்ளாக்கி, பற்களைப் பிடுங்கும் தண்டனை தென்னிந்தியாவில் நடப்பதல்ல. இந்த தண்டனை முறையை தன்னுடைய ராஜஸ்தானிலிருந்தே ஏ.எஸ்.பி. கொண்டு வந்திருக்கிறாராம்.
ராஜஸ்தானில் அவரது தாய்மாமன் போலீஸ் இன்ஸ் பெக்டராக இருக்கிறாராம். ராஜஸ்தானின் கிராமப் புறங்கள் கரடு முரடான வை... முரட்டு சுபாவ மக்ககளைக் கொண்டவை. அங்குள்ள காவல் நிலையங் களில் தான் இதுபோன்ற கொடூரமான பற்களைப் பிடுங்கும் தண்ட னையைக் கொ டுத்து ஒடுக்குவார் களாம். கல்வி விழிப்புணர் வில்லாத ராஜஸ் தானின் கிராமப் பகுதிகளில் நடக்கும் இத்தகைய கொடூரம், வெளியே தெரியாம லேயே போய்விடுமாம். அங்கே செயல்படுத்தக்கூடிய விசாரணை முறைகளைத்தான், தமிழ்நாட்டின் வாழ்க்கைமுறை, கள நிலவரம் குறித்து தெரியாமல், ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் செயல்படுத்தி யிருக்கிறார்.
விசாரணையில் சிக்கியவர்களின் பற்களைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி., "இங்கு நடந்ததை வெளியே சொன்னால், குண்டாஸ், பி.சி.ஆர். கேசில் உள்ளே அடைச்சிடுவேன்'' என்று மிரட்டியனுப்புவாராம். இதுபோன்று பற் களைப் பிடுங்கியபின், இவர்களுக்குப் பதிலாக வேறு சிலரை, பொது வெளியில் பிரச்சனை செய்தவர்களென, செக்ஷன் 110 பிரிவின் கீழ் அவர்களை வருவாய்த் துறை கோட்டாட்சி யரின் விசாரணைக்கு அனுப்பிவிடுவாராம். இதற்கெல்லாம் பயந்து தான் வெளியே சொல் லாமல் இருந்திருக்கிறார் கள்.
வி.கே.புரம், ஏ.எஸ்.பி.யின் அலுவலகம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் நடந்த இந்தக் கொடூரங்களும், அத்துமீறலும் அந்தக் காவல் நிலையங்களுக்குரிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஏட்டுக்களான போகபூமன், ராஜ்குமார் இருவருக்கும் தெரியுமாம். காவல் நிலையங்களில் நடக்கும் சம்பவங்கள், பி.எஸ்.ஆர். போன்ற அனைத்து விவரங்களையும் அன்றாடம் மாவட்ட எஸ்.பி.க்கு தெரியப்படுத்தவேண்டிய இவர்கள், அதனை முறையாகத் தெரியப்படுத்துவதில்லை யாம். மேலும் ஏ.எஸ்.பி. ஒரு ஐ.பி.எஸ். ரேங்கிங் அதிகாரி என்பதால், அவர்குறித்து எஸ்.பி.யிடம் புகாரளித்தால் அது ஏ.எஸ்.பி.யின் காதுக்கும் போக வாய்ப்புள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நம்மைப் பழிவாங்கினால் நமக்குச் சிக்கலாகிவிடும் என்ற பயம் காரணமாக, எஸ்.பி.க்குத் தெரியப்படுத்த வேண்டிய முழுத்தகவலையும் இந்தத் தனிப்பிரிவு காவலர்கள் மூடி மறைத்துவிடுவார்களாம்,
மேலும், "ஐயா, அது விசாரணை கேசுய்யா, பி.எஸ்.ஆர். மட்டும் விசாரிச்சிட்டு விட்டுடுவாகய்யா" என்றும், "ஐயா, அது ஒன்டென் (110 பிரிவு) கேசுய்யா, ஆர்.டி.ஓ. விசா ரணைக்குப் போறதுய்யா" என்றும், சூழலுக்கேற்றவாறு மாவட்டத் தனிப் பிரிவிற்கு தகவலைக் கொடுத்து விடுவார்களாம். இப்படியாக, எல்லாம் முறையாக நடக்கிறது என ஒப்பேற்றிவிடுவார்களாம். இதனால் அந்தக் காவல் நிலையங்களில் நடக்கிற இதுபோன்ற சம்பவங்கள் மாவட்ட எஸ்.பி.க்குத் தெரியாமலேயே ஃபில்ட ராகியிருக்கிறது. ஆனா லும், பற்கள் பிடுங்கப் பட்டதால், ரத்தப் போக்கு அதிகமான ஜமீன் சிங்கம்பட்டியின் சூர்யா மற்றும் சுபாஷின் நிலைகண்டு ஊர்மக்களே விவகாரத்தை வெளிக்கொண்டுவர, அதே நேரத் தில், சிவந்திபுரம் மட்டன் கடை சகோதரர்கள் உள்ளிட்ட 8 பேரின் பற்களும் பிடுங்கப்பட, அனைத்தும் ஒரே நேரத்தில் அம்பலமாக, தென்மண்டல காவல்துறையே பரபரப்பானது.
மனித உரிமை கமிசனின் உத்தரவுப்படி, மார்ச் 29 அன்று, மனித உரிமைக் கமிசனின் எஸ்.பி.யான மகேஷ்வரனின் விசாரணையில், வழக்கறிஞர் மகாராஜனுடன் ஆஐரான செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன், ரூபன், வேதநாராயணன் உள்ளிட்டோர்களும் வாக்குமூலம் கொடுத்திருக் கிறார்களாம்.
இவ்விவகாரம் தொடர்பாக நெல்லை எஸ்.பி. சரவணன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார், அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் இராஜகுமாரி, வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை சப்-டிவிசன் தனிப்பிரிவு எஸ்.ஐ. சக்தி நடராஜன், அம்பை தனிப்பிரிவு ஏட்டு சந்தனகுமார், அம்பை காவல் நிலைய காவலர் மணி கண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட, ஏட்டுக்கள் வி.கே.புரம் போகபூமன், கல்லிடைக்குறிச்சி ராஜகுமார் இருவரும் நெல்லை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.