"ஹலோ தலைவரே, கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் சாதி உணர்வு மேலோங்கியிருக்குதாம்.''”
"சட்டம் ஒழுங்கைத் தாண்டி சாதிப் பாசம் பெருசா இருக்குதா?''”
"அருணகிரின்னு ஒரு அதிகாரி. முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த இவர், ஓ.பி.எஸ். காலத்தில் சி.எம். டி.ஏ.வில் செல்வாக்காக இருந்தவர். சசிகலாவுக்கும் நெருக்கமானவராம். இவர்தான், குற்றப்பட்டியலில் இருக்கும் கொடநாடு பங்களாவின் மேனேஜரான நடராஜனையும், சஸ்பெண்டுக்கு ஆளான கொங்கு மண்டல பத்திரப் பதிவு அதிகாரியான செல்வ குமாரையும் காப்பாற்ற, சசிகலாவின் உத்தரவின் பேரில் களமிறங்கி இருக்காராம். இதற்காக அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை உயர் போலீஸ் அதிகாரிகளை மூவ் பண்ணிக்கிட்டு இருக்கார்னும் சொல்லப்படுது. இவரது ஒவ்வொரு மூவ்வையும், விசா ரணை டீமும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்குது.''”
"எடப்பாடி திடீர்னு மருத்துவமனையில் அட்மிட்டாகி, அப்புறம் தேவர் ஜெயந்தி விழாவில் வழக்கமான உடல்நலத்துடன் கலந்துக்கிட்டாரே?''’
’"குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காகவே மீண்டும் அட்மிட் ஆனதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. சீனியர்களோ, அவர் சசிகலாவை, சூரியனைப் பார்த்து குரைக்கிறது என்று விமர்சித்தார். இது முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கிடிச்சி. பசும்பொன்னுக்கு அவர் வந்தா, கவனிப்பதுன்னு ஒரு டீம் ரெடியாகியிருக்கு. இது தெரிய வந்ததும் எடப்பாடி, மருத்துவமனையில் அட்மிட் ஆகி, பசும்பொன் விசிட்டைத் தவிர்த்துவிட்டு, அப்புறம் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியிருக்காரு.''”
"தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து விவாதிச்சிருக்காரே?''”
"நிர்வாக ரீதியா பல்கலைக்கழங் களின் வேந்தர் கவர்னர்தான். அதனால் துணைவேந்தர்களை அழைத்து 30-ந் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் சென்னை, பெரியார், அண்ணா, பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை, மனோன்மணியம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கலந்துக்கிட்டாங்க. இது தவிர, பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களும், அரசு செயலாளர்களும் கூட இதில் கலந்துக்கிட்டாங்க. பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றி ’பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்’ மூலம் கவர்னருக்கு விளக்கப்பட்டிருக்கு.''”
"ம்...''”
"ராக்கிங் விவகாரம் அறவே இருக்கக் கூடாது. மாணவர்களின் குறைகளைக் கண்டறிவதற்காக புகார் பெட்டிகள் வைக்கவேண்டும். மாணவியர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டும். லஞ்ச, ஊழல், முறைகேடுகள் நடக்கக்கூடாது. வினாத்தாள், விடைத்தாள் மோசடிகள் தலைகாட்டக் கூடாது, பல்கலைக்கழக நிதிகளில் ஊழல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆக்கப்பூர்வமான தகவல்களை முதலில் அறிவுறுத்திய கவர்னர், அடுத்து யூ.சி.ஜி. மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் அறிக்கைகளைப் பின்பற்றணும். தேசியக் கல்விக் கொள்கையை முழுதாக அமல்படுத்த வேண்டும் என்று அட்வைசும் எச்சரிக்கையும் கலந்த குரலில் பேசியிருக்கிறார். அதில் ஆர்.எஸ்.எஸ். சாயல் வீசியதால், துணைவேந்தர்கள் பலரின் முகத்திலும் எரிச்சல் தெரிந்தது.''”
"ஆவினில் ஊழல் விவகாரம் ஏகத்துக்கும் கொதியாய்க் கொதிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, ஆவினின் உபரி பாலில் ஒரு பகுதியை டெண்டர் மூலம் விற்பனை செய்வது வழக்கம். ஆவின் அதிகாரிகள், என்.சி.டி.எஃப்.ஐ. மூலம் இப்ப முறையாக டெண்டர் விட்டாங்க. அதையும் சிலருக்கு சாதகமாக இருக்கும்படி டெண்டர் விதிகளையும் மாற்றினார்கள். அதேபோல, டெண்டர் விதிகளின்படி குறைந்தபட்ச, கால அவகாசம் கூட தராமல் டெண்டர் அறிவிப்பினை வெளியிட்டனர். இது பத்தியெல்லாம் நக்கீரனில் எழுதியிருந்தோம். இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்து, இது குறித்து விசாரிக்கச் சொன்னார். இதனையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஆவின் எம்.டி. கந்தசாமி ஐ.ஏ.எஸ்., என்.சி.டி.எஃப்.ஐ. நிறுவன அதிகாரி ஒருவர் என மூவரிடமும் விவாதித்தார் இறையன்பு. அப்ப, தன் தவறுகளை ஆவின் தரப்பு ஒத்துக்கிடிச்சி. இதனால் அவர்களை கறார்க் குரலில் எச்சரித்து, நேர்மையான நடவடிக்கை பற்றியும் அறிவுறுத்தியிருக்கிறார் இறையன்பு. 30-ந் தேதி முறையான டெண்டர் அறி விப்பு வெளியா னது. ஆவினை முதல்வர் தன் நேரடிக் கட்டுப் பாட்டில் வச்சிக்க ணும்னும், நிர்வாக இயக்குநர் மற்றும் கமிஷனர் ஆகிய இரு பதவிகளிலும் ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக் கப்படுவதைக் கைவிட்டு, தனித் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்னும் வெளிப்படைத் தன்மையை விரும்புகிறவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.''”
"நான் டிட்கோ பற்றி ஒரு செய்தி சொல்றேன். இந்த நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருப்பவர் பங்கஜ்குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். இந்த நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள், தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம். கொரோனா தாக்குதலில் பாதிப்படைந்த கடன் தாரர்கள் பலரும், கடனைக் கட்டமுடியாம தவிச்சாங்க. அவர்களை எல்லாம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய பங்கஜ்குமார், கடனைக் கட்டாததால் உங்கள் சொத்துக்களை ஏலம் விட்டு டிட்கோவிற்குரிய பணத்தை எடுத்துக்கொள்ளப் போகிறோம்னு சொல்ல, பலரும் மிரண்டிருக் காங்க. அப்படி நடக் காமல் இருப்பதற்காக டீலிங் பேசப்படுகிறதாம்.''