க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களைக் கொண்ட ஜனநாயக நாட்டில், கவர்னர் பதவிகளுக்கென பெரிதும் வேலை கிடையாது. வெறுமனே ஒரு மாநில அரசின் செயல் பாடுகள் குறித்த ரிப்போர்ட்டு களை டெல்லிக்கு அனுப்புவதற்காகவும், எப்போதாவது மாநிலத்தில் அரசியல் நெருக்கடி நேரும்போது மாநில ஆட்சியைக் கவனித்துக் கொள்வதற்காகவும் டெல்லியால் நியமிக்கப்பட்டவரே இவர். அதேபோல், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்புவதும் இவரது பணியாகும். ஆனால், இவரோ, மாநில அரசால் அனுப்பப்படும் சட்டமன்றத் தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு கூட்டங்களுக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ்.வாதியாக உரையாற்றிவருகிறார்.

gg

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிதீவிர வார்ப்பான ஆர்.என்.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டதிலிருந்தே தி.மு.க. அரசுக்கும், இவருக்கு மிடையே முட்டல் மோதல் தொடர்ந்தபடியே இருக்கிறது. கவர்னர் தனது பதவிக்கான பணியில் கவனம் செலுத்தாமல், தன்னிச்சையாக, தமிழக அரசு கூறிவரும் 'திராவிட மாடல்' என்ற கருத்துக்கு மாறாகவே பேசிவருவதுதான் அனைத்துக்கும் காரணமாக உள்ளது.

வேலூர் சிப்பாய் எழுச்சி தினத்தை முன்னிட்டு வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், "மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டார்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறோம். ஆங்கி லேயர்கள் தான் நம்மிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். திராவிடர்கள் விந்திய மலையை அடிப்படையாக வைத்து தான் வடக்கில் இருப்பவர் களை வட இந்தியர்கள் என் றும், தென்பக்கம் இருப் பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் தான் 'திராவிடன்' என்ற வார்த்தையை முதன்முதலில் குறிப்பிட் டார்கள்'' என்று பேசியது 'திராவிட மாடல்' ஆட்சி எனக்கூறும் தமிழக அரசை சீண்டிப்பார்ப்பதாகவே உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக இதேபோல் ஜாதி, மத, இன ரீதியில் மக்களைப் பாகுபடுத்தும் பேச்சுக்களைப் பேசிவருகிறார். சமீபத்தில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், "சனாதன தர்மத்தால் உருவாக்கப் பட்டதே இந்த பாரதம். நமது இந்திய அரசிய லமைப்புச் சட்டமானது, ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே சனாதன தர்மத்தில் சொல்லப் பட்டுள்ளது'' என்றார்.

Advertisment

gg

தமிழக ஆளுநரின், திராவிடர்கள் குறித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா, "விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப் பிட்டவர்கள் ஆங்கிலேயர்களா? ஆளுநரே, ஆங்கிலேயர் இங்கே வருவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பே உங்கள் ஆதிசங்கரர், ‘திராவிட சிசு’ என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டி ருக்கிறார். உங்கள் சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்திலேயே பவுண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போஜம் என்று தேசங்களை வரையறுத்திருக்கிறார்கள். ஸ்மிருதியிலும் பஞ்சதிராவிடம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. பழமையான பிராமி மொழிக் கல்வெட்டிலும் திராவிடம் என்ற சொல் இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தனது ஆராய்ச்சியில் நாகர்களாகிய திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பதை நிரூபித்திருக்கிறார். மைக்கும், மேடையும் கிடைத்தால் எதையாவது பேசி, நீங்கள் நம்பும் சனாதனத்துக்கு முட்டுக் கொடுப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல" என்று ஆளுநருக்கு சிறப்பானதொரு வகுப்பெடுத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே கல்வியில் சிறந்து விளங்கியதாகச் சொல்லப்படுவோர் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களா? ஜாதி, வர்ணாசிரம முறைப் படி உயர்ஜாதியினர் பிராமணாள் மட்டுமே தானே? பெரும்பான்மையான கீழ்ஜாதியினரான சூத்திர மக்களுக்கு, வேதக் கல்வி என்பது மறுக்கப்பட்டதை. காதால் கேட்கவும், நாவால் படிக்கவும்கூடக் கூடாது; மீறினால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படிப்பவர் நாக்கை அறுக்கவும் வேண்டும்‘ என்ற சாஸ்திரக் கட்டளை, சனாதனத்தின் சந்நிதானக் கட்டளை என்பதை ஆளுநர் ரவியோ அல்லது அவருக்கு அந்தப் பேச்சை எழுதிக் கொடுத்தவர்களோ மறுக்க முடியுமா? ‘திராவிடம்‘ என்பது மனுதர்மத்தில் பத்தாவது அத்தியாயத்தில் உள்ளது என்பதை இந்த பிரகஸ்பதியார் ஏனோ தெரிந்து கொள்ள மறுக்கிறார்? ஆளுநராக இருப்பவர், சுமூக உறவுடன் மாநில வளர்ச்சிக்கு, வேலியாக இருக்க வேண்டுமே தவிர, வேலியே பயிரை மேய்வதாக இருப்பது கூடாது. இந்திய அரசமைப்புச் சட்ட விதிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும், அவரது பதவியின் பெருமைக்கும்கூட அது விரோதமானதாகும்'' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

gg

சர்ச்சைகளின் நாயகனாக வலம்வரும் ஆளுநர், கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்வுக்காக செய்துள்ள மரபு மீறல்கள், அனைவரையும் கொதிப் படையச் செய்துள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில், பல்கலைக்கழக வேந்தரான ஆளுனர் ஆர்.என்.ரவி, அடுத்து துணைவேந்தர் குமார் ஆகியோரையடுத்து இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரின் பெயர் இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையைத் தவிர்த்துவிட்டு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் பெயரை இடைச்செருகலாகச் சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மிகக்காட்டமாக, "பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை, அந்த பல்கலைக்கழத்தின் நிர்வாகம் நடத்துவது தான் நடைமுறை. உயர்கல்வித் துறைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல், வேந்தரை மட்டும் அனுசரித்து துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இணைவேந்தரான என்னைக் கலந்து ஆலோசிக் காமல் விழா தேதியை தன்னிச்சையாக அறித்திருக் கிறார். விழாவுக்கு சிறப்பு விருந்தினரை அழைக்கவேண்டிய நோக்கம் என்ன? ஆளுனரின் செயல்பாடுகள் பா.ஜ.க.வின் பிரச்சாரமாக இருக்கிறது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களி டையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதால், இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக இல்லை'' என்றார்.

இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலைகழகத் துணைவேந்தர் குமாரிடம் கேட்டபோது, "இந்த அழைப்பிதழே நாங்கள் அனுப்ப வில்லை. ஆளுநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது. இது குறித்து வேறு எதுவும் இப்போது வேண்டாமே'' என்றவர், "மத்தளத்திற்க்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். அதுபோல ஆகிவிட்டது என் நிலைமை'' என்று நொந்துகொண்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் பேராசிரியர் இரா.முரளி நம்மிடம், "தமிழகக் கல்வி அமைச்சருக்கு உரிய மரியாதை தரப்படாமலும், தமிழக அரசை கலந்து ஆலோசிக் காமலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப் பது கண்டிக்கத்தக்கது. மேலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பொதுவாக, கல்வித்துறை மற்றும் கலைத்துறையில் சாதித்தவர்களை பட்டமளிப்பு விழா பேருரை வழங்க அழைப்பதே வழக்கம். தனியாக சிறப்பு விருந்தினர் என்று அழைப்பது வழக்கம் இல்லை. இந்த வழக்கங்களை மீறி மத்திய அமைச்சரை ஆளுநர் அழைப்பதும், ஆளுநர் சொன்னபடி அனைத்தையும் துணைவேந் தர் கேட்டு நடப்பதும், தமிழகத்தின் உயர்கல்விப் பரப்பில் ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளதையே காட்டுகிறது. வெளிப்படையாக இப்படி கட்சி நிர் வாகியை சிறப்பு அழைப்பாளராக வரவைப்பதை, தமிழக அரசுக்கு கவர்னர் விடும் சவாலாகவே பார்க்கிறோம். இப்படியான போக்கு, பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம். இதையெல்லாம் தமிழகத்தின் கல்வியாளர்களும், தமிழக அரசும் அனுமதித்தால், உயர்கல்விக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சில கட்சிகளின் வசப்படும் ஆபத்து உள்ளது'' என்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக ஆட்டத் துக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.