"ஹலோ தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவி, டெல்லிக்குச்சென்று திரும்பி யிருக்கார்''”
"ஆமாம்பா, சில ரகசிய ரிப்போர்ட்டு களுடன் அவர் போனதாகச் சொன்னார்களே?''”
"தெளிவாவே சொல்றேங்க தலைவரே, ஐந்துநாள் பயணமாக டெல்லிக்குச் சென்ற தமிழக கவர்னர் ரவி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜ்ஜி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி பிரதமரானதைத் தொடர்ந்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள் அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அந்த வகையில் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், மோடியை சந்தித்த ரவி, அவருக்கு தனது வாழ்த்துக்களைச் சொன்னார். இருவரும் 20 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்களாம். குறிப்பாக அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், தி.மு.க. அரசின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் கவர்னரிடம் நிறைய கேட்டறிந் தாராம் மோடி. அப்போது கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பற்றி தனக்குக் கிடைத்த தகவல்களை மோடியிடம் விவரித்திருக்கிறார் கவர்னர். அவர் கையோடு எடுத்துச் சென்றிருந்த தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஒரு ரிப்போர்ட்டையும் பிரதமரிடம் கொடுத்தாராம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் இதே ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறார் கவர்னர்.''”
"இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்ட முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தள்ளிப் போகலாம் என்கிறார்களே?''”
"தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக நிறைய முயற்சிகளையும், திட்டங்களையும் வகுத்திருந்தார் முதல்வர். இதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் அமெரிக்காவிற்கு இம்மாத இறுதியில் செல்வதாகத் தகவல்கள் உலவின. தொழில் முதலீட்டை ஈர்ப்பதோடு அவரது மருத்துவப் பரிசோதனைக்காகவும் அந்தப் பயணம் இருக்கும் என்றார்கள். அதேசமயம், அடுத்த மாதம் 15-ல் அவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இருப்பதால், அதை முடித்துவிட்டு அதன்பிறகு அமெரிக்கப் பயணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இதை அவர் ஏற்கும் பட்சத்தில், அவரது அமெரிக்கப் பயணம் அடுத்த மாதத்தில் இருக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலவரம்.''”
"உள்துறைச்செயலாளராக இருந்த அமுதா

"உள்துறைச்செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தற்போது நடந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அதிரடி மாற்றத்தின் போது, உள்துறைச்செயலாளர் அமுதாவும் மாற்றப்பட்டிருக்கிறார். இதற்குக் காரணங்கள், விஜய் நடித்த "லியோ' படத்தின் காலைக் காட்சிக்கு சிறப்பு அனுமதி தந்ததும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்த எஸ்.பி. வெள்ளதுரை விவகாரமும்தானாம். அவர் ஓய்வுபெறவிருந்த நிலையில், உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்.ஸால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் வெள்ளத்துரையின் மனைவி, ஒரு பத்திரிகையாளர் மூலம் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். ஸிடம் இதைப் புகாராகக் கொண்டு சென்றதால், அவர் முதல்வர் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றார் என்றும், அதனால் வெள்ளதுரையின் சஸ்பெண்ட் ஆர்டரை முதல்வர் வாபஸ் பெறச் செய்தார் என்றும் அப்போதே டாக் அடிபட்டது. இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்த அமுதா, ’"நானாக இதில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. காவல்துறை எனக்கு அனுப்பிய உத்தரவில்தான் நான் கையெழுத்திட்டேன்' என்று சொல்லியிருந்தாராம். இருந்தும் உதயசந்திரன், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் மீண்டும் கூட்டணி அமைத்த வியூகம் மூலம் புகார் சென்றதால்தான் அவர் தற்போது மாற்றலுக்கு ஆளாகியிருக்கிறார் என்கிறார்கள். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.''”
"ஒருவழியாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. மாஜி மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. கரூர் மா.செவும், மாஜி போக்கு வரத்துத்துறை மந்திரியுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். கரூர் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷுக்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, மிரட்டி அபகரித்ததாக மாஜி மந்திரி விஜயபாஸ்கர் மீதும் அவர் சகோதரர் சேகர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கைது பயத்துக்கு ஆளான விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று இரண்டாவது முறையாக விஜயபாஸ்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனால் விஜயபாஸ்கர் எஸ்கேப் ஆகிவிட்டார்.''”
"விஜயபாஸ்கரை எங்கே கைது செய்தார் களாம்?''
"விஜயபாஸ்கரைப் பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடந்த 34 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படைகள் பல இடங்களிலும் தேடின. மேலும் அவருக்கு நெருக்கமான பலரையும் விசாரித்தனர். விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், சில பென் டிரைவ்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் பதுங்கியிருந்த விஜயபாஸ்கரையும் அவருடனிருந்த அவர் ஆதரவாளர் பிரவீனையும் 16ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள். அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் 11 பேரை கைது செய்ய, போலீஸ் டீம் தீவிரம் காட்டி வருகிறது. விஜயபாஸ்கரின் அடாவடிக்கு உதவியாக இருந்த அப்போதைய கரூர் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் இருப்பதை அறிந்து அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மாஜி மந்திரி விஜயபாஸ்கர் கைதான விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”
"இரண்டு முக்கியமான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அதிரடிகளைக் காட்டியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே. சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்துக்கு எதிராக அவர் அம்மாவின் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், சவுக்கு சங்கரின் நடத்தை ஒரு மனிதனின் நடத்தை போலவே இல்லை. மிக மோசமாக நடந்துகொண்டு இருக்கிறார். அவர் அனைத்து சட்டங்களையும் நியாயங்களையும் மீறி இருக்கிறார் என்று கடுமையாகக் கண்டித்து அதிரடி காட்டியிருக்கிறது. அதேபோல் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் சிக்கிய ஜாபர் சாதிக்கின் வழக்கை விசாரித்த, டெல்லி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம், ’ஜாபர் சாதிக்கின் தம்பியின் போன் எண்ணை வைத்துதான், அவரது குற்றங்கள் அதிகமாக நடந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த எண் குறித்து முழுமையாக விசாரித்தீர்களா? அவர் தம்பியின் மீது கூட நடவடிக்கை இல்லை. அரைகுறையாக வழக்கை நடத்திவருகிறீர்கள் என்றெல்லாம் கண்டனக்குரல் எழுப்பியதோடு, அவருக்கு ஜாமீன் வழங்கி அதிரடி காட்டியிருக்கிறது. ஜாபர் மீது அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு இருப்பதால், அவரால் வெளியே வரமுடியவில்லை.''”
"எடப்பாடியால் கோட்டையில் நடக்கவிருந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் பொறுப்பு சேர்மனாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் இருந்து வருகிறார். இந்த அமைப்புக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோ சனைக் கூட்டம்தான் 16ஆம் தேதி கோட்டையில் நடப்ப தாக இருந்தது. இந்த லோக் ஆயுக்தா தலைவரைத் தேர்வு செய்ய முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய கமிட்டி ஒன்று இருக் கிறது. அந்த கமிட்டிதான் கூடுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழலில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால், அவர் கேட்டுக்கொண்டபடி இந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டி ருக்கிறதாம். முழுநேர தலைவரைத் தேர்வு செய்யும் வரை இந்த அமைப்பின் பொறுப்பு சேர்மனாக ராஜாராமே தொடர்வார் என்கிறது அதிகாரிகள் தரப்பு.''”
"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் வெளியில் இருந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கும் ஏரியா வாரியாய்ப் பிரித்துத் தரப்பட்டன. அந்த வகையில், திருச்சி மாவட்டம் முசிறி நகர தி.மு.க. செயலாளர் சிவகுமாருக்கு, தொகுதியில் உள்ள வெங்காயக்குப் பம் ஒதுக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களை கவர்வதற்காக வேட்டி, சேலை, கிச்சன் பொருட்கள் என பலவகையான பொருட்களும் மற்ற பகுதிகளைப் போலவே, வெங்காயக் குப்பத்துக்காக சிவகுமாரிடம் கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் சிவகுமாரோ, அந்தப் பொருட்களை ஏரியாவினருக்கு வழங்காமல், முசிறியில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம். இதைக் கண்டுபிடித்த லோக்கல் தி.மு.க.வினர் அமைச்சர் பொன்முடியின் கவனத்துக்கு அதைக் கொண்டுசென்றனர். இதையறிந்து எரிச்சலான பொன்முடி, அமைச்சர் நேருவை தொடர்பு கொண்டு, விவரத்தைச் சொல்ல, சிவகுமாரை அழைத்து கடும் அர்ச்சனை நடத்தினாராம்.''”
"இதேபோல் தொட்டியம் ஒன்றிய பஞ்சாயத்தும் நேருவிடம் சென்றதாமே?''”
"திருச்சி மாவட்ட தொட்டியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்களாக திருஞானம், தங்கவேல் என இரண்டு பேர் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜனின் ஆதரவாளர்களான இவர்கள், அண்மைக்காலமாக அவரது போக்குகள் பிடிக்காமல் நேரு பக்கம் சென்றுவிட்டனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த எம்.பி. அருண்நேரு, தன்னை வரவேற்று அழைத்துச் செல்ல ஒவ்வொரு கிளைக் கழகத்துக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக காடுவெட்டி தியாகராஜனிடம் கொடுத்துவிட்டாராம். பணத்தை மற்றவர்களுக்குக் கொடுத்த அவர், தன்னைப் புறக்கணித்த தொட்டியம் ஒன்றிய தங்கவேல், திருஞானம் ஆகிய 2 ஒ.செ.க்களுக்கு மட்டும் பணத்தை தரவில்லையாம். இந்த விவகாரமும் நேருவிடம் பஞ்சாயத்துக்குப் போனதாம்.''”
"வைக்கம் போராட்ட நினைவுச்சின்னம் விரைவில் திறக்கப்படவிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, கேரள மாநில வைக்கத்தில் நிலவிய சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டம் வரலாற் றுச் சிறப்பு வாய்ந்தது. அந்தப் போராட்டத்தின் அடையாளமாக அங்கே நினைவகம் கட்ட, கேரள அரசு சிறிது இடம் வழங்க, தமிழக அரசு 1985-ல் ஒரு நினைவகத்தை அமைத்தது. இந்த நிலையில் தற்போதைய தி.மு.க. அரசு, அந்த நினைவகத்தை புனரமைக்கும் முயற்சியில் இறங்கியது. 9 கோடி ரூபாய் செலவில், செய்தி மற்றும் தொடர்புத்துறை சார்பில், இந்த புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அங்கு பிரம்மாண்ட அரங்குகளும், பெரியார் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் மற்றும் அவர் எழுதிய நூல்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு நூலகமும் புதுப்பொலிவோடு அமைக்கப்பட்டிருக்கிறது. அதை அண்மையில் பார்வையிட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறைத் அமைச்சர் சாமிநாதன் "தந்தை பெரியாரின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி இந்த பிரமாண்டமான நினைவகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழக முதல்வர் இதனைத் திறந்துவைக்க உள்ளார்'’என்றார் பெருமிதமாக.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வராக ஆக்கப்படுவார் என்று ஏற்கனவே பரபர டாக் இருந்து வந்த நிலையில், உதயநிதியை துணை முதல்வராக ஆக்கும் எண்ணம் முதல்வருக்கு வந்திருப்பதாக தற்போது அறிவாலயத் தரப்பில் ஒரு விறுவிறு தகவல் உலவ ஆரம்பித்திருக்கிறது.''”