இலங்கையில் இனவாத அரசு, ஈழப் போரின்போது அங்குள்ள பல்லாயிரக்கணக் கான தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்ததை, இந்த உலகமே அறியும். அது மட்டுமின்றி, சந்தே கத்தின்பேரில் தமிழ் இளைஞர்கள் கடத்தப் படுவதும், காணாம லாக்கப்படுவதுமான செயல்களும் அதிக அளவில் இருந்தன. மனித உரிமைகளைச் சற்றும் மதிக்காத அரசாங்கம்தான் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இன வெறியுடன் செயல் பட்டு வருகிறது.
தற்போது ராஜ பக்ஷே குடும்பத்தாரின் கைகளில் சிக்கியுள்ள அதிகாரம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதோடு, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடு பட்டவர்களை அரச பதவிகளில் அமரவைத்து அழகு பார்ப்பதும் நடக் கிறது. அப்படியாக, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்ட முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட விவகாரம் தற்போது விவாதமாகியுள்ளது.
கடந்த 2008-2009ம்

கடந்த 2008-2009ம் ஆண்டில், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிங்கள, தமிழ், இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 11 பேர் திடீரெனக் கடத்தப்பட்டு காணாமல்போனார்கள். போர்ச்சூழல் இருந்ததால், அதன் காரணமாக அவர்கள் காணாமல் போயிருக்கலாமென்று கருதப்பட்ட நிலையில்... அந்த இளைஞர்கள், பணத்துக்காக வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டார்கள் என்று புலன்விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக நடத்தப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டு நவம்பரில், இந்த கடத்தல் விவகாரத்தில் இலங்கைக் கடற்படையினரின் தலையீடு இருப்பது தெரியவந்ததாகவும், கடற்படையைச் சேர்ந்த 12 உயரதிகாரிகளின் தலையீடு இதிலிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில், அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரன்னகொடவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
புலன் விசாரணை அறிக்கையில், இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாகக் கொடூரமான விவரங்கள் வெளியாயின. கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு நிலத்தடி அறையில் அந்த இளைஞர்கள் அடைத்துவைக்கப்பட்டது, அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டது, அவர்களை விடுவிக்க அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் வசூலித்தது, பின்னர், அந்த இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் கடலில் வீசப்பட்டதற்கான சாட்சிகளின் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.
இப்படியான சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடற்படை தளபதி மீதான இந்த வழக்கு விசாரணையைத் தொடராமல் கைவிட நீதிமன்றம் முடிவெடுத்ததாகத் தெரியவருகிறது. இந்த மிகமுக்கியமான வழக்கில், கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தின ருக்கு ஓரளவு நம்பிக்கை கிடைத்த சூழலில் இத்தகைய முடிவெடுத்திருப்பதன்மூலம், இதில் தொடர்புடைய முக்கிய அதிகாரியைக் காப்பாற்றுவதற்கான முயற்சி, பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இத்தகைய முடிவு, தங்களது நம்பிக்கைமீது விழுந்த மிகப்பெரிய அடி என்று கடத்திக் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு எதிராக அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றமோ, சந்தேகத்திற்குரிய ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டைக் கைவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டு அவர்களின் மேல்முறையீட்டு மனு வைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அக்டோபர் மாதத்தில் மீண்டும் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இலங்கை சட்ட அமைச்சரே. நீதி மன்றத்தின் முடிவுகளில் அரசு தலையிடாது என்று கைவிரித்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவ காரத்தில் சிறையிலடைக் கப்பட வேண்டியவரை பதவியில் அமரவைப்பது தவறு என்றும், அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அரசின் அலட்சியப் போக்கையே இது காட்டுகிறது என்றும் சர்வதேச சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிப்பது மட்டுமல்லாது, அவர்களுக்கு உயர் பதவிகளும் வழங்கப்படுமென நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மைக்கேல் பக்லெட் (Michelle Bachelet), கடந்த செப்டம்பரில் உரையாற்றியபோது, "இலங்கையில் நடைபெற்றுள்ள பல்வேறு மனித உரிமைகள் மீறல் வழக்குகளில், இலங்கை நீதிமன்றத்தின் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. இவற்றில், 2008-2009 காலகட்டத்தில் 11 இளைஞர்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு ஆதரவான உத்தரவும் இதில் அடங்கும்'' என்று வேதனையுடன் தெரிவித்தார். போர் முடிந்து பல்லாண்டுகளான பின்னும் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு எப்போது நியாயத் தீர்ப்பு கிடைக்கும்?