ந்தனார் குருபூஜை என்ற பெயரில் சுமார் 200 பேருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் தமிழ்நாட்டில் தங்கள் ஊடுருவலை நிகழ்த்த மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்களைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். திருவள்ளுவர், தமிழர்களின் பெருமை என்ற அடையாளத்தை ஒழித்து, அவரை காவிக்கு மாற்றியும், இந்து மத ஆன்மீகக் கவிஞரெனப் போலியாகப் போற்றிப் புகழ்வதும், திருக்குறளை தட்டுத்தடுமாறி பிரதமர் பேசி கைத்தட்டல் வாங்குவதும், திருவள்ளுவர் சிலைக்கு காவி பூசுவதுமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர். அதேபோல், பட்டியலின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த, இந்து மதக் கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து பௌத்த மதத்தைத் தழுவிய, இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கரை, இந்து மத ஆதரவாள ராகச் சித்தரிப்பதும், அவருக்கும் காவிச்சாயம் பூசுவதுமான செயல்களில் ஈடுபட்டனர்.

gs

ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் எடுபடாது எனக்கருதி, தமிழ்க் கடவுள் முருகனை தங்கள் கடவுளாகக் காட்டிக் கொள்ள, வேல் பூஜை என்ற நாடகத்தை ஒருமுறை நடத்தினார்கள். முருகன் தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை என்பதைத் தொடங்கி, அதற்கு ஆதரவில்லாமல் பாதியிலேயே கைவிட்டார்! அடுத்ததாக, இந்துசமய அறநிலையத்துறையிலிருந்து தமிழகக் கோவில்களை மீட்போம் எனக்கூறி, அதற்கு ஜக்கி வாசுதேவ் மூலம் குரல் கொடுக்க வைத்து, அந்த அரசியலை தற்போது பிரதமர் மோடி வரை பேசிவருகிறார்கள்.

அதேபோல், தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்ததிலிருந்தே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக, சனாதனமே சிறந்தது எனக்கூறி, சனாதனத் தீண்டாமையை உயர்வாகப் பேசுவதும், குழந்தைத் திருமணத்தை ஆதரித்துப் பேசுவதும், உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு காரணமே நம்மை ஆண்ட வெள்ளையர்கள் தானென்று பொய்யையும் புரட்டையும் அவிழ்த்து விடுவதுமாகத் தொடர்ச்சியாக தமிழக மக்களை மதரீதியாக மூளைச்சலவை செய்யும் அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். இதன் இன்னொரு பகுதியாகத் தற்போது பூணூல் அரசியலைக் கையிலெடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.

Advertisment

gg

அக்டோபர் 4-ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் வருவதை அறிந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரும், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மா.ஆதனூரில் பிறந்தவரான திருநாளைப்போவார் என்றழைக்கப்படும் நந்தனார் குறித்து எடுத்துக்கூறி, தமிழ்சேவா சங்கம் என்ற அமைப்பின் வாயிலாக அவருக்கு குரு பூஜை எடுப்ப தாகத் தெரிவித்தார். அந்த குரு பூஜையில் ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தால், அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெறலாமென்று எடுத்துக் கூறி அழைப்பு விடுத்தார்.

அதனை ஏற்ற ஆளுநர், கடந்த 4ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை முடித் துக் கொண்டு ஆதனூர் நந்தனார் கோவி லுக்கு வந்தார். அவருக்கு வேதமந்திரங்கள் முழங்க பிராமணர்கள் கும்பம் வைத்து வர வேற்றனர். முன்னதாக, 'ஆளுநர் ஆர்.என். ரவி சனா தனத்தை தூக்கிப் பிடிக்கிறார். அவர் திரும்பிப் போக வேண்டும்.' எனக் கூறி அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

gs

Advertisment

குருபூஜை விழா மேடையில் ஆளுநர் முன்னி லையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 200 பேருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தப்பட் டது. இதில் பெரும்பான்மையாக ஆதிதிராவிடர் களும், மற்ற சமூகத்தினரில் சிலரும் கலந்துகொண்ட னர். அவர்களை தரையில் அமரவைத்து, புது வேட்டி துண்டு அணிவித்து, அவர்களுக்கு முன் சிறிய தாம்பூலத்தட்டு, மணி, நாமக்கட்டி, சூடம் காட்டும் தூரிகை, பூஜைக்கு தண்ணீர் வைக்கும் சிறு பாத்திரம், பூணூல் வைக்கப்பட்டிருந்தது. அவர் களில் சில இளைஞர்கள் தாங்கள் அணிந்திருந்த பேண்ட்டின் மீதே வேட்டியைக் கட்டிக்கொண்டு பூணூல் அணியக் காத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணர் ஒருவர் தண்ணீர் சொம்பிலிருந்த தண்ணீரை மாவிலைமூலம் தெளித்து தீட்டுக் கழித்து சுத்தப்படுத்தினார். தொடர்ந்து வேத மந்தி ரங்களை ஆளுநர் தலைமையில் பிராமணர்கள் கூற, இவர்கள் அனைவரும் மந்திரத்தை திரும்பக்கூறி பூணூல் அணிந்துகொண்டனர். பூணூல் அணிந்தபிறகு புனிதராகக் கருதப் படுவீர்கள் என்று நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

ggஇந்நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கிவைத்துப் பேசிய ஆளுநர், பட்டி யலின மக்களுக்கு எதிராக எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வன்கொடுமை நடப்பதாகவும், சமூக நீதி பேசுவர்கள் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வழக்கம்போல் தமிழ்நாடு அரசை குற்றஞ்சுமத்திப் பேசினார்.

நந்தனார் இங்குதான் வாழ்ந்தார் என்ற அடையாளமே இல்லாதபோது, கடந்த 20 ஆண்டு களுக்குமுன் அப்போது சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ்காரரான வள்ளல்பெருமான் தான் சொந்த செலவில் நந்த னார் கோயிலைக் கட்டி னார். தற்போது நந்த னார் குருபூஜை விழா எனக் கூறி பூணூல் அணி விக்கும் நிகழ்ச்சி யை சங் பரிவார அமைப்புகள் நடத்துவதை எதிர்த்து, பெருபாலான உள்ளூர் மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான் அங்கே நிறைந்திருந்தனர். அந்த ஊரில் நந்தனார் என்ற அடையாளத்தை உருவாக்கிய வள்ளல்பெருமானை ஒரு இடத்தில் கூட நினைவுகூராதது கண்டிக்கத் தக்கது என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

இதுகுறித்து காட்டுமன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் கூறுகையில், "ரூ. 2 ஆயிரம் மற்றும் பூஜை செய்யும் பொருட்கள், புது வேட்டி, துண்டு வழங்கி, பொருளாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி பூணூல் போட்டுள்ளார்கள். இவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு பூணூலை கழற்றி எறிந்துவிட்டனர். தற்போது ஆளுநர் முன்னிலை யில் பூணூல் போட்டவர்கள் நாளை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில் பூஜை செய்யமுடியுமா? இங்கு ஆர்.எஸ்.எஸ். மதப் பிரச்சார வேலையை ஆளுநர் செய்கிறார். இது ஒருபோதும் எடுபடாது'' எனக் கூறினார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நான் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவன். நந்தனாரைப் பற்றி இங்குள்ள எல்லாருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும்போது அவரை அனுமதிக்காததால் கோவிலுக்கு வெளியே நின்றே கும்பிட்டார். அப்போது நந்தியே விலகி நிற்க, நடராஜர் தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைக்கு நந்தனாரை என்ன செய்தார்கள் என்ற வரலாறு உண்டு. அந்தக் காலத்திலேயே சமூக நீதிக் காகவும், சமத்துவத்துக்காகவும், உரிமைக்காகவும் நந்தனார்தான் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டில் சமூகநீதி இல்லையென ஆளுநர் கூறுகிறார். ஆனால் உண்மையான சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது. புனிதத்துக்கும் பூணூலுக்கும் சம்பந்தமில்லை. எல்லோரும் சமம் என்பதைப் பின்பற்றித்தான் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது'' என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூகவலைத்தளப் பதிவில், 'நந்தனார் பிறந்த ஆதனூரில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கிறா ராம் ஆளுநர் சனாதனி ஆர்.என்.ரவி. இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவி லில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்துவிட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரிய புராணக் கட்டுக் கதைகளைப் புறந்தள்ளுவோம்'' எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

"நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதியில் நுழைய விரும்பிய அவரை நெருப்பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது. அவரை தீயிட்டுக் கொளுத்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியல் சாதியினருக்கு அவரது மண்ணில் பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆக, பூணூலின் மூலம் மீண்டும் ஜாதி மதப் பிரச்சனை யைப் பற்றவைத்துள்ளார் ஆளுநர்.

-தெ.சு.கவுதமன், காளிதாஸ்