ரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதாக தமிழக ஆளுநரை உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆளுநர் மாளிகை நிதி முறைகேட்டை தணிக்கை செய்ய உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

Advertisment

தமிழக ஆளுநரிடம் கௌரவ ஊடக ஆலோசகராக இருந்துவருபவர் ஒரு முக்கியப் புள்ளி. இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். காரராக தன்னைக் காட்டிக்கொள்பவர். மேலும் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அ...மலையின் தீவிர விசுவாசி என்பதால் ஆளுநரின் கௌரவ ஊடக ஆலோசகராக கொண்டுவருவதிலும் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் இணை இயக்குனரான செல்வராஜ் என்பவர் மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை கட்டவிழ்த்து விட்டு, அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அ...மலையின் விசுவாசியான அந்த முக்கியப் புள்ளியை  8-11-22 அன்று ஆளுநரின் கௌரவ ஊடக ஆலோசகராக நியமித்தனர். 

கௌவர ஊடக ஆலோசகர் பதவியிலிருப்பவருக்கு சம்பளமோ, பண பலனோ நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ கொடுக்கக்கூடாது என்பது சட்ட விதி. எனினும், ஆளுநர் தன்னுடைய நிதியிலிருந்து அந்த முக்கியப் புள்ளிக்கு மாத ஊதியமாகக் கொடுத்துள்ளார் என்ற விவகாரம் வெளியில் கசியவே... இது சட்ட விதிகளுக்கு முரணாக இருப்பதான சந்தேகத்தில், ஆர்.டி.ஐ. மூலமாக, ஆளுநரின் விருப்பு நல நிதியி லிருந்து அந்த முக்கியப் புள்ளியின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது பணமாகவோ கொடுக்கப்பட்டதா எனக் கேள்வியெழுப்பி யதற்கு, ஆமாம், ஆளுநரின் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது என்றும், அது அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்காக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தனர். அதோடு, இந்த கௌரவ ஊடக ஆலோசகர் பதவி நியமனத்துக்கான தேர்வு, வெளிப்படை யாக விளம்பரம் கொடுக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முறைப்படி பணி நியமனம் நடைபெற்றதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, முறையான நேர்முகத்தேர்வு அறி வித்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படாமல், ஆளுநரின் நியமன உத்தரவின் பேரில் பணி வழங்கப்பட்டது என தெரிவித்தனர். 

governor1

ஆராய்ச்சிப் படிப்புக்காக பணம் கொடுக்கப்பட்டது எனத் தெரிவித்த நிலையில், எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், என்ன ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறார் என்பதை ஆர்.டி.ஐ. மூலமாகக் கேட்டதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆளுநர் ஓர் ஏழை எளிய மாணவருக்கேகூட கல்வி நிதி வழங்குவதாக இருந்தால், அந்த நிதி என்ன படிப்புக்காக வழங்கப்படுகிறது என்பது குறித்த முழுமையான தகவலை பெற்று உறுதிசெய்து, அதன்பிறகு பணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்குக்கு அனுப்ப வேண்டுமே தவிர, கல்வி கற்பவரிடம் நேரடியாக வழங்குவதற்கு சட்ட விதிகளில் இடமில்லை. மேற்கண்ட நபர் இதுநாள் வரையிலும் எந்த ஆராய்ச்சிப் படிப்பும் படிக்க வில்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவந்த நிலையில், அந்த முக்கியப் புள்ளிக்கு, ஆளுநர் ரவி வழங்கிய பத்து லட்சத்தை சம்பளமாகக் கொடுத் தேன் எனச் சொன்னால் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில், அந்த முக்கியப் புள்ளி யின் ஆராய்ச்சிப் படிப்பிற்காக கொடுத்தாகச் சொல்லி தற்போது இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டார். 

Advertisment

இப்படி ஒட்டுமொத்தமாக முறைகேடு செய்திருப்பதை உறுதிப்படுத்திய காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் எஸ்.காண்டீபன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அதில் 02.09.2025 தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் முடிவில் தலைமை நீதிபதி அமர்வு, அந்த முக்கியப் புள்ளிக்கு நிதி வழங்கப்பட்ட முறை, மானிய நிதிக் குறியீட்டை மீறுவதாக உள்ளது. ஆகையால் தமிழ்நாடு தலைமை கணக்காளரால் தணிக்கை செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து காண்டீபன் கூறுகையில், "இதேபோன்று கடந்த ஐந்தாண்டுகளில் ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சாராத நிகழ்ச்சிகள் என அனைத் திலும் அந்த முக்கியப் புள்ளியின் பினாமி பெயர்களின் மூலமாக டெண்டர்கள் எடுக்கப் பட்டு இவர் ஊழல் செய்துவருகிறார். இவை அனைத்திற்கும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல முறைகேடாக இவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் விவகாரத் தில் ஆளுநர் மாளிகை சிக்கிக்கொண்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவருகிறார்கள். இதோடு நான் நிறுத்திக்கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்திற்கு சென்று சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுப்பது நிச்சயம்'' என்றார். 

ஏற்கனவே உச்சநீதிமன்றம், தமிழக அரசு அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததற்கு தமிழக ஆளுநரை கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தமிழக மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தை மோசடியாக செலவிட்டி ருப்பதாக சந்தேகமிருப்பதால் இது குறித்து தணிக்கை செய்ய பரிந் துரைத்திருக்கிறது. "இந்த விவகாரம் குறித்த விசாரணையோடு, மற்ற அனைத்தையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளியில் வரும்'' என்கிறார். 

Advertisment

-சே