டந்த வாரம் 13ஆம் தேதி யன்று மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தென்மண்டல காவல்துறை தலைவர், பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகளுக்கு கிண்டி ராஜ்பவனிலிருந்து அனுப்பட்ட ஆளுநரின் 3 பக்க பயணத்திட்டத் தைப் பார்த்ததும் அவர்கள் அனை வருக்குமே ஆச்சரியம் ஏற்பட்டது. தற்போது, கோடைகாலம் துவங்கி யுள்ள நிலையில், "குளிர் பிரதேசங் களுக்கோ அல்லது தங்களது சொந்த மாநிலங்களுக்கோ தான் ஆளுநர்கள் செல்வார்கள்'’ என்ற எதிர்பார்ப்பைத் தாண்டி, அடித்துக் கொளுத்தும் அக்னி வெயிலில் வறட்சி மாவட் டத்தை நோக்கி சூறாவளி சுற்றுப் பயணத்தை ஆளுனர் ஆர்.என்.ரவி தேர்ந்தெடுத்ததுதான் அதற்குக் காரணம்.

Advertisment

gg

சென்னையிலிருந்து 17ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6.15 மணிக்கு 6ஊ 7029 என்ற இண்டிகோ விமானத்தில் மதுரை கிளம்பும் ஆளுநர் ரவி, அன்று இரவு இராமநாதபுரத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பிறகு, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இராமேஸ் வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடும், பிறகு மத்திய மீன் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் விஞ்ஞானி களோடும் கலந்துரையாடல் நடத்துகிறார். மீண்டும் இராமநாத புரம் திரும்பி மதிய உணவுக்குப் பிறகு முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திக்கும் அவர், தேவிபட்டினத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் புகழ்பெற்ற நவக்கிரகக் கோவிலை தரிசனம் செய்வதோடு, அங்குள்ள மீனவ சமூக மக்களிடமும் உரையாடுகிறார்.

மறுநாள் புதன் கிழமை, பரமக்குடி அருகில் போகலூர் வட்டத்தில் உள்ள எட்டிவயல் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை வேளாண் பண்ணைக்கு விசிட் அடித்து விவசாயிகளோடு கலந்துரையாடலை முடித்து, உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அதன்பிறகும் சில முக்கிய நபர்களை சந்திக்கிறார். அதுவரை எல்லாம் ஓ.கே. ஆனால், தனது பயணத்திட்டத்தின் இறுதிக்கட்டமாக அன்று மாலை 5.30 மணியளவில் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தும் அவர், அதன்பிறகு மதுரை திரும்பும் வழியில் கமுதி அருகில் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

Advertisment

ஆளுநர்கள் பொதுவாக கல்லூரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்வதோடு ஆன்மீகத் தலங்களுக்கு மட்டுமே செல்வார்கள் என்ற நடைமுறைக்கு மாற்றாக, சாதியத் தலைவர்களின் நினைவிடங்களுக்கு விசிட் அடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த ‘மரியாதை செலுத்தல்’ நிகழ்ச்சியின் பின்னணி குறித்து பரவும் தகவல்கள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. இதுகுறித்து மண்ணின் மைந்தர்கள் சிலரிடம் பேசினோம்.

"வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் மோடி போட்டியிடப் போகிறார் எனப் பரவலாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுநரின் இந்த திடீர் பயணம் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆளுநரின் பயணம் அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. அதற்காகத்தான் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக கதிரவன் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டாரோ? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கதிரவனுக்குப் பதிலாக இராமநாதபுரம் பா.ஜ.க.வின் புதிய மாவட்ட தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார். அந்த தரணி முருகேசன் வைத்திருக்கும் டிரஸ்ட்தான் ‘தரணி அக்ரோ ரிசர்ச் அண்டு ரூரல் எம்ப்ளாய்மெண்ட் ஃபவுண் டேசன்’ எனப்படும் ‘டேர் ஃபவுண்டேசன்’. அங்குதான் வருகிறார் ஆளுநர். சுமார் 54 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம் செய்துவரும் அவர், அவற்றை விற்பதற்கு கடையும் வைத்துள்ளார். அதுவரை, விவசாயிகள் அனைவருக்குமே சொந்தமாக இருந்த அவரை கடந்த மாதம் தத்தெடுத்துக் கொண்டது பா.ஜ.க. அவரின் விவசாயப் பண்ணைக்கு ஆளுநர் ரவி வருவதோடு, விவசாயி களோடு சேர்த்து சில முக்கியப் பிரமுகர்களையும் அவர் அங்கு சந்திப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு மாவட்டத் தலைவரின் இருப் பிடத்தில் நடக்கும் கலந்துரை யாடல் எப்படியிருந்தாலும் அதில் அரசியல் கலக்காமல் இருக்குமா என்ன?

Advertisment

gg

அதேபோல, தேவேந்திரகுல வேளாள மக்கள் தங்கள் உயிருக்கு நிகராகக் கருதும் தியாகி இமானு வேல் சேகரன் நினைவிடத்திற்கும், தேவரின மக்கள் கடவுளாகவே வழிபடும் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்திற்கும் ஆளுநர் செல்வதின் பின்னணியி லும் அரசியல் கட்டாயம் கலந்துள் ளது. அதாவது, முழு சந்திரமுகி யாகவே மாறிவிட்டார் கவர்னர். எனவே, தனது இந்த பயணத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி இராமநாதபுரத்தில் போட்டியிடு வதற்கான பாதையை சரிசெய் வதற்காக மட்டுமே ஆளுநர் ரவி இங்கு வருவதாக மக்கள் கருதத் தொடங்கி விட்டனர்''’என்றனர் அவர்கள்.

ஒருவேளை அது உண்மை யாக இருக்குமானால், அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் தனது பயணத்தில் அரசியல் கலப்பதை வேடிக்கை பார்க்கிறார் களா தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்?