Advertisment

அமித்ஷா உத்தரவில் ஆளுநர் ரவியின் ஆபரேஷன் டி..என்! -தி.மு.கவுக்கு எதிராக ரெடியாகும் ஃபைல்கள்!

dd

தி.மு.க. அரசுக்கு எதிரான சீக்ரெட் ரிப்போர்ட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக தனி கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் மெயிண்டெயின் பண்ணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை நோக்கி தனது அரசியல் பார்வையை திருப்பவிருக்கிறது ஒன்றிய அரசு என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி சோர்ஸ்கள், "மாநில அரசின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சூழல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் மட்டுமே கவர்னர்கள் கவனம் செலுத்துவார்கள். இது குறித்து மாதத்திற்கு ஒரு ரிப்போர்ட்டை கவர்னர்கள் அனுப்பி வைப்பர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்வாகம், சட்ட ஒழுங்கு சூழல்களை மட்டுமல்லா மல், அரசின் ஊழல்களையும், ஆட்சியாளர்களின் ஊழல்களையும் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது.

ff

அதனடிப்படையில், 2 சீக்ரெட் ரிப்போர்ட்டு களை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்தப்படி இருக்கிறார் கவர்னர் ர

தி.மு.க. அரசுக்கு எதிரான சீக்ரெட் ரிப்போர்ட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக தனி கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் மெயிண்டெயின் பண்ணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை நோக்கி தனது அரசியல் பார்வையை திருப்பவிருக்கிறது ஒன்றிய அரசு என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி சோர்ஸ்கள், "மாநில அரசின் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சூழல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் மட்டுமே கவர்னர்கள் கவனம் செலுத்துவார்கள். இது குறித்து மாதத்திற்கு ஒரு ரிப்போர்ட்டை கவர்னர்கள் அனுப்பி வைப்பர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்வாகம், சட்ட ஒழுங்கு சூழல்களை மட்டுமல்லா மல், அரசின் ஊழல்களையும், ஆட்சியாளர்களின் ஊழல்களையும் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது.

ff

அதனடிப்படையில், 2 சீக்ரெட் ரிப்போர்ட்டு களை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்தப்படி இருக்கிறார் கவர்னர் ரவி. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர் கள், கட்சியின் முக்கியப் புள்ளிகள், தி.மு.க. அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், முதலீடுகள் பற்றிய ரிப்போர்ட்டுகள் டெல்லிக்கு வரத் துவங்கியுள்ளது. சமீபத்தில் டெல்லி வந்த கவர்னருக்கு இது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் அதிகம் தந்திருக்கிறார் உள்துறை அமைச்ச ரும் தமிழக அரசியலை கவனிப்பவருமான அமித்ஷா .

ஒன்றிய அரசின் சி.பி.ஐ., ஐ.பி., ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவைகளிடமிருந்து தி.மு.க. அரசுக்கு எதிரானவைகளை சேகரித்துக் கொள்கிறார் ரவி. இதனடிப்படையிலேயே தனது ரிப்போர்ட்டுகளை டெல்லிக்கு அனுப்புகிறார் கவர்னர். சட்டம் ஒழுங்கு தவிர்த்த மற்ற ரிப்போர்ட்டுகள் எதுவும் ராஜ்பவனிலுள்ள தமிழக அதிகாரிகளுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும்படி கவர்னர் ரவிக்கு அட்வைஸும் கொடுத்துள்ளது டெல்லி.

கடந்த 5 மாதத்தில் மட்டும் தமிழகத்தி லிருந்து 3000 முதல் 5000 கோடி ரூபாய் வரை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறது என சமீபத் தில் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டில் கவர்னர் குறிப்பிட்டுள்ளாராம். அரசுக்கு நெருக்க மான சில தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் ஹவாலா வழியாகவும் இது பறந்துள்ளதாம்.

Advertisment

amithsa

அதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக தனிக் கோப்புகளைப் பராமரித்து வரும் ஒன்றிய அரசு, ஆபரேஷன் டி.என். என அதற்கு பெயரிட்டிருக்கிறது. டி.என் என்றால் தமிழ்நாடு. ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதன் மூலம்தான் தி.மு.க.வின் இமேஜை உடைக்க முடியும் என்பதே மோடி-அமித்ஷாவின் கணக்கு''‘’ என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இதுதவிர, "அரசின் முக்கிய டெண்டர்கள் தொடர்பான விவரங்களை முதல்வரின் மருமகன் சபரீசன் எக்ஸல் சீட் போட்டு பராமரித்து வருகிறார் என்றும் கவர்னருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

கவர்னருக்கு கொடுக்கப்பட்ட அதே அசைன்மெண்டைத்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் கொடுத்துள்ளது டெல்லி. அதன் சேம்பிள்தான் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக, மின் வாரியத்தில் நடந்த ஊழலை சமீபத்தில் அம்பலப்படுத்தினார்.

அந்த வகையில், 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான பவர் ப்ராஜெக்ட் டெண்டர் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த ஊழல்களுக்கான ஆதாரங்களை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கொடுத்துள்ளார் அண்ணாமலை. அந்த சந்திப்பில் பா.ஜ.க. துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

modi

ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட அந்த புகாரை வாசித்த கவர்னர் ஆர்.என்.ரவி, ”"புகாரில் சொல்லப்பட்டுள்ள விபரங்களையும், இணைக்கப் பட்டுள்ள ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்க்கிறேன். ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் எனது அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுப்பேன்''‘ என்று அவர்களிடம் சொல்ல, ’"அனைத்து துறைகளிலுமே கரப்ஷனும், கலெக்சனும் நடக்கிறது. ஆனா, அந்த ஊழல்களுக்கான அடிச்சுவடே தெரியாமல் செய்வதில் தி.மு.க.வினர் கில்லாடிகள்''’என துரைசாமியும் ராமலிங்கமும் சொல்லியிருக் கிறார்கள். அதைக் கேட்டு புன்னகைத்த கவர்னர்,”"ஆதாரங்களுடன் புகார் கொடுங்கள். அப்போதுதான் அரசிடம் என்னால் கேள்வி கேட்க முடியும்''‘எனச் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையே, கவர்னரிடம் கொடுத்த அதே புகாரை பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார் அண்ணாமலை. இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில்தான், தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக துபாய்க்கு செல்லும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை உற்றுக் கவனிக்க துபாய் மற்றும் அபுதாபியில் களமிறங்கியுள்ளது ஒன்றிய அரசின் உளவுத்துறையும், வருவாய் புலனாய்வுத் துறையும். இந்த துறைகள் மட்டுமல்லாது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என ஒரு பெரிய பட்டாளமே துபாயில் குவிந்துள்ளன.

இதற்கிடையே, டெல்லியில் நடக்கும் அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிடத் திறப்பு விழாவில் பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறாரென சொல் லப்பட்ட நிலையில், விழா வுக்கான அழைப்பிதழை பா.ஜ.க. தலைவர்களுக்கும் தி.மு.க. தந்திருக்கிறது. இது எதிர்க் கட்சி களிடம் கேள்வி களை எழுப்பியுள்ளதாம்.

nkn260322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe