"ஹலோ தலைவரே, 5-ந் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் கூடியிருக்கு.''”

"ஒமிக்ரான் பரவலால் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கே?''”

hh

Advertisment

"ஆமாங்க தலைவரே, அதனால் மொத்தம் 3 நாட்கள் மட்டுமே இந்த பேரவைக் கூட்டம் நடக்குது. வழக்கம்போல அரசு சார்பிலான உரையை அவையில் படித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை முடிக்கும்போது ஜெய்ஹிந்த்னு சேர்த்துக்கிட்டாரு. போன முறை பன்வாரிலால் புரோகித் அதை சேர்க்கலை. அப்ப கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தை இடம்பெறவில்லைங்கிறதைப் பாராட்டாகச் சொல்ல, அது சர்ச்சை யானது. ஆனால் ஆர்.என்.ரவி தன் உரையை ஜெய்ஹிந்த்னு முடிப்பார்னு நாம ஏற்கனவே சொல்லியிருந்தோம். அரசு சார்பிலான உரையில் ஜெய்ஹிந்த் இல்லை. கவர்னர் அந்த வார்த்தையை உச்சரித்திருப்பதால், அது அவைக்குறிப்பில் ஏறுமானு சந்தேகம் வந்தது. ஆளுநர் உரையின் தமிழாக் கத்தில் வாழிய பாரத மணித் திருநாடுனு முடிச்சிருக்காங்க. அதுதானே கவர்னர் சொன்ன ஜெய்ஹிந்த்னு சில அதிகாரிகள் சொல்றாங்க.''”

"ஜெய்ஹிந்த்தோடு, மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஜே போடும் அம்சங்களும் ஆளுநர் உரையில் நிறைய இருந்ததே?''”

Advertisment

"ஆளுநர் உரைன்னாலே அப்படித்தான் இருக்கும். ஜெ. ஆட்சியில் கவர்னர் பர்னாலாகூட அந்தப் பாராட்டுரைகளை படிச்சிருக்காரு. அதுபோல ஆர்.என்.ரவியும், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உயர் கல்விக்குத் தேவையில்லை என தமிழக அரசு கருதுகிறது என்ற, தி.மு.க. அரசின் குரலையும் அப்படியே எதிரொலிச்சார். அது தொடர்பான மசோதாவுக்கு கடந்த 5 மாதங்களாக ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருக்கும் கவர்னர், பேரவை உரையில் நீட்டுக்கு ஆதரவான வரிகளையும் எப்படிப் படிக்கிறார்னு, தி.மு.க.வும் அ.தி.மு.க.வுமே வியப்பாப் பார்த்தது.''”

"கவர்னர் உரை ஏமாற்றம்னு அ.தி.மு.க. தரப்பு குற்றம்சாட்டுதே?''

"தி.மு.க அரசைக் கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து அ.தி.மு.கவும், நீட் தேர்வு மசோதாமீது முடிவெடுக்காத கவர்னரைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகளும் வெளிநடப்பு செய்தனர். அ.திமு.க.வில் இது குறித்து கே.பி.முனுசாமி, வேலு மணி, தங்கமணி ஆகியோரிடம் 4-ந் தேதி ஓ.பி.எஸ். கேட்டிருக்கிறார். கவர்னரை கண்டித்து நாம் வெளிநடப்பு செய்யப் போவதில்லையே? அவரது உரையைத்தானே புறக்கணிக்கிறோம். அவரது உரைங்கிறது தமிழக அரசின் உரைதானே! அதனால் புறக்கணிப்பது தவறல்ல என்று ஓ.பி.எஸ். சொல்ல... அதை ஏற்றுக்கொண்டு, கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.''”

"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல திட்டங்களுக்கான அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்ததே?''“

"ஆமாங்க தலைவரே.. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ 1000 ரூபாய் வழங்கும் திட்டம், மாதா மாதம் மின் கட்டணத்தை கணக்கிடும் முறை என்று, பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்ற வேண்டிய கியூவில் நிக்கிது. இதுபற்றிய அறிவிப்புகள் வரும் என்றும், அவை பொங்கலில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்துச்சு. ஆனால் கவர்னர் உரையில் இதெல்லாம் இல்லைன்னதும், அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க., இந்த விவகாரத்தை தி.மு.க.வுக்கு எதிரான ஆயுதமாகக் கையில் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கு.''

"ஒமிக்ரான் மிரட்டுகிற சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?''”

"சரியான கேள்விங்க தலைவரே, கொரோனாவுடன் ஒமிக்ரானும் சேர்ந்துக்கிட்டு மிரட்டுவதால், நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமானு முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் ஆலோசிச்சிருக்காங்க. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தப்ப, சட்டப்பேரவைத் தேர்தலையே நடத்திய நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் உங்களுக்கென்ன சிக்கல்ன்னு நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் என்ன செய்யறதுன்னு விவாதிக்கப்பட்டிருக்கு. அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஊசலாட்ட நிலையில் இருக்குது.''”

"ஒமிக்ரான் கட்டுப்பாட்டு விதிகளை, அப்படி ஒன்றும் மக்கள் சரியாகப் பயன்படுத்தற மாதிரி தெரியலையேப்பா?''”

"ஒமிக்ரான் தாக்கம் அதிகமிருப்பதால் தமிழக அரசு மருத்துவத்துறை வல்லுநர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்ப, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் மக்கள் மதிக்கிற மாதிரி தெரியலை. அதனால், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்னு அதிகாரிகள் தெரிவிச்சிருக்காங்க. முதலமைச்சரோ, முழு ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுமேன்னு தயங்க, அது பாதிப்புக்குள்ளாகாத வகையில், ஊரடங்கை நடைமுறைப்படுத்தலாம். பொதுப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தலாம். எங்கே மக்கள் கூடினாலும் அதைக் கட்டுப்படுத்து வதில் கடுமை காட்டலாம் என்றெல்லாம் அதிகாரிகள் சொல்லியிருக் காங்க. இந்த நிலையில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும், தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரையிலும் ஊரடங்கு எனவும் அறிவிக்கப்பட்டிருக்கு.''”

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்காங்களே?''”

rr

"ஆமாங்க தலைவரே, முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் டிரான்ஸ்பர் செய்த தி.மு.க. அரசு, உள்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிலரை மட்டும் மாற்றாமல் இருக்குது. கவர்னரைச் சந்தித்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து நீண்ட புகார் கடிதத் தைக் கடந்த வாரம் கொடுத்துவிட்டு வந் திருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச் சர்கள் வெளியே வந்து, உள்துறைச் செயலாளர் விரைவில் மாற்றப்படலாம்னு பூடகமாகச் சொல் றாங்க. அதனால் கோட்டை வட்டாரத்தில் யூகங்கள் கொடிகட்டிப் பறக்குது.''”

"கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப் பட்ட கோவை மாவட்ட பத்திரப் பதிவா ளர் செல்வகுமாரைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், அதுபோல கடந்த ஆட்சி யில் அமைச்சர்களின் முறைகேடுகளுக்குத் துணை போனதா குற்றம்சாட்டப்பட்ட பி.வி.கீதாவுக்கு தென்சென்னை மண்டல ஏ.ஐ.ஜி பதவி கொடுத்தது சம்பந்தமாகவும் நாம பேசிக்கிட்ட செய்திகளுக்கு மறுப்புச் செய்திகள் வருதே...''”

"எனக்கும் வந்ததுங்க தலைவரே.. .. இதற்கெல்லாம் காரணமா ஒரு பெண் அதிகாரி இருந்ததா நமக்கு வந்த செய்தி யைப் பற்றிப் பேசியிருந்தோம். ஆனா, அதிகாரிகள் தரப்பில் அதைக் கடுமையா மறுக்குறாங்க. அதுவும் செல்வகுமாரை அந்த அதிகாரி ரகசிய இடத்தில் சந்திச்சதா வந்த செய்தியை முழுமையா மறுக்குறாங்க. பத்திரப் பதிவுத் துறைக்குள் நடக்கும் பாலி டிக்ஸில் நிறைய விஷயங்கள் குழப்பமா வெளியே கசியுதுன்னும், அதில் பெண் அதிகாரிக்கு துளியும் சம்பந்தமில்லாத, உண்மைக்கு மாறான விஷயங்களை ஒரு சில தரப்பு ஊதிப் பெரிதாக்கிடுதுன்னும் வருத்தப்படுறாங்க.''

"டிசம்பரில் அ.தி.மு.க. பொதுக்குழு வைக் கூட்டற முடிவு தள்ளிவைக்கப் பட்டிருக்குதே?”

’"ஆமாங்க தலைவரே, டிசம்பரில் பொதுக்குழுவை அ.தி.மு.க. நடத்தியாக ணும். அங்க ஒருங்கினைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களா இருக்கும் ஓ.பி.எஸ்.சை யும், எடப்பாடியையும் ஒரே ஓட்டின் மூலம் கட்சியினர் தேர்ந்தெடுக்கிற மாதிரி, ஓட்டுப்போடும் முறையை மாத்தத் திட்டமிட்டாங்க. ஆனால் ஒரு ஓட்டுப் போட்டு ரெண்டுபேரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை எங்குமே இல்லை. இதை தேர்தல் ஆணையமும் ஏத்துக்காது. மறுபரிசீலனை பண்ணுங்கன்னு எடப்பாடியிடம் சட்ட நிபுணர்களால் சொல்லப்பட்டிருக்கு. அதனால் உஷாரான அவர், பொதுக்குழுவைக் கூட்டாமல், இப்படியே முடிந்த வரை காலத்தை ஓட்டலாம் என்று நினைக்கிறார்.''”

"ம்...''”

thangamani

"தலைவரே.. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணி வீட்டில் நடத்திய இரண்டாம்கட்ட ரெய்டில், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட ஆவணங்களும் கரன்ஸிகளும் கிடைத்திருக்குதாம். அதையெல்லாம் கணக்கெடுக்கவே அவங்களுக்கு திணறுச்சாம். அதனால் அதுபற்றிய கணக்கை அவர்கள் வெளியிடலைன்னு காவல்துறை தரப்பிலேயே பேச்சு அடிபடுது.''

"சிவசங்கர் பாபாவை காப்பாத்த பெரும் முயற்சிகள் நடக்குதே?"

rr

"உண்மைதாங்க தலைவரே, ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் சிவசங்கரைக் காப்பாற்ற ஒரு டீம் தீவிரமாக் களமிறங்கி இருக்கு. காவல்துறை தொடங்கி நீதித்துறை வரை கரன்ஸி பலத்தைக் காட்ட அது முயற்சிக்குது. இன்னும் கூட சிவசங்கருக்கு எதிரா பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தபடியே இருக்காங்க. சமீபத்தில் இப்படி புகார் கொடுத்த ஒரு மாணவியை செங்கல்பட்டு ஜே.எம்.-1 கோர்டில் வாக்கு மூலம் வாங்கினாங்க, அது சிவசங்கரின் முகத்திரையை முழுசா கிழிச்சதைப் பார்த்ததும், மறுபடியும் அந்த மாணவியை அழைத்து, சிவசங்கருக்கு அதிக சிக்கல் இல்லாதபடி புதுசா வாக்குமூலம் கொடுக்க வச்சிருக்காங்க. இந்தத் தகவல் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை புகாரா போயிருக்கு. அதனால் சிவசங்கர் அடிப்பொடிகள் கை பிசைய ஆரம்பிச் சிட்டாங்களாம்.''