ரஜினியின் அரசியல் தாமதம், விஜய் ஏரியாவில் பல்வேறு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அரங்கேற வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. ‘"அப்பா-மகன் அரசியல் சடுகுடு! ரஜினி வழியில் விஜய்!' என்ற தலைப்பில் கடந்த அக்.28-30 நக்கீரனில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் விஜய்யின் ஆரம்ப கால விசுவாசிகளும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆதரவாளர்களுமான திருச்சி ஆர்.கே.ராஜா, கன்னியாகுமரி ஜோஸ் பிரபு, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, ராணிப்பேட்டை பாரதி, மதுரை வடக்கு இன்பராஜ் போன்ற மாவட்டத் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த், அதிரடியாக நீக்கிவிட்டு, புதியவர்களை நியமித்ததை எழுதியிருந்தோம்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் டெல்லி தேர்தல் கமிஷனில் கட்சியைப் பதிவு செய்த எஸ்.ஏ.சிக்கு குடும்பத்திலிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்ப்புகள் அதிகமாயின. எல்லாவற்றிற்கும் காரணம் விஜய் அருகில் இருக்கும் விஷக்கிருமி புஸ்ஸி ஆனந்த்தான்’’ என எகிறியடித்தார் எஸ்.ஏ.சி. அத்துடன், அ.இ.த.வி. ம.இ.வின் மாநிலத் தலைவராக திருச்சி ஆர்.க
ரஜினியின் அரசியல் தாமதம், விஜய் ஏரியாவில் பல்வேறு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அரங்கேற வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. ‘"அப்பா-மகன் அரசியல் சடுகுடு! ரஜினி வழியில் விஜய்!' என்ற தலைப்பில் கடந்த அக்.28-30 நக்கீரனில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் விஜய்யின் ஆரம்ப கால விசுவாசிகளும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆதரவாளர்களுமான திருச்சி ஆர்.கே.ராஜா, கன்னியாகுமரி ஜோஸ் பிரபு, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, ராணிப்பேட்டை பாரதி, மதுரை வடக்கு இன்பராஜ் போன்ற மாவட்டத் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த், அதிரடியாக நீக்கிவிட்டு, புதியவர்களை நியமித்ததை எழுதியிருந்தோம்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் டெல்லி தேர்தல் கமிஷனில் கட்சியைப் பதிவு செய்த எஸ்.ஏ.சிக்கு குடும்பத்திலிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்ப்புகள் அதிகமாயின. எல்லாவற்றிற்கும் காரணம் விஜய் அருகில் இருக்கும் விஷக்கிருமி புஸ்ஸி ஆனந்த்தான்’’ என எகிறியடித்தார் எஸ்.ஏ.சி. அத்துடன், அ.இ.த.வி. ம.இ.வின் மாநிலத் தலைவராக திருச்சி ஆர்.கே. ராஜாவை நியமித்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் விஜய்யின் போட்டோவையும் தவறாக பயன்படுத்தும் ஆர்.கே.ராஜா மீது ஆக்ஷன் எடுக்கும் படி, நவ.08-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தின் புதிய தலைவர் மூலம், திருச்சி ஏ.சி.லோக நாதனிடம் புகார் கொடுக்க வைத்தார் புஸ்ஸி ஆனந்த். அடுத்த மூன்றே நாட் களில், அதாவது நவ.11-ஆம் தேதி, திருச்சியில் மசாஜ் சென்டர் நடத்தி வரும், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் மற்றும் நால்வர் மூலம் ஆர்.கே.ராஜா மீது நில அபகரிப்பு புகார் கொடுக்க வைத்தார். திருச்சியில் கோலோச்சும் எடப்பாடி ஆதரவாளரின் க்ரீன் சிக்னல் கிடைத்ததால், உடனே களம் இறங்கினார் ஏ.சி.லோகநாதன். பத்து போலீசை ராஜா வீட்டிற்கு அனுப்பி, ராஜாவின் மைத்துனரையும் மாமனாரையும் பாலக்கரை ஸ்டேஷனுக்கு தூக்கி வந்தார். இதுகுறித்து ராஜாவின் மனைவி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.
மிரண்டு போன ராஜா, ""எனக்கும் எனது குடும்பத்திற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு புஸ்ஸி ஆனந்த்தான் காரணம்''’என்ற வீடியோவை ரிலீஸ் பண்ணிய சில மணி நேரத்திலேயே, ""நான் எப்போதும் தளபதி விஜய்யின் விசுவாசியாக இருப்பேன். அ.இ.த.வி. ம.க.வின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்''’ என சரண்டர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் ராஜா. ஆனாலும் விடாத புஸ்ஸி ஆனந்த் கொடுத்த பிரஷ்ஷரால், ராஜாவின் செல்போனை டிரேஸ் அவுட் பண்ணி, மன்னார்குடிக்குச் சென்று மும்பை பவுல் (மன்னார்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட, மும்பை மாநில விஜய் மக்கள் இயக்கத்தின் மாஜி பொறுப்பாளர்) வீட்டை சல்லடை போட்டது திருச்சி போலீஸ்.
அங்கு ராஜா இல்லாததால் மும்பை பவுலை தூக்கிக் கொண்டு துறையூர் சிவா, தொட்டியம் பாரதிதாசன் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று சோதனை போட்டது. ராஜாவிற்கு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருவதைக் கேள்விப்பட்ட கன்னியாகுமரி ஜோஸ் பிரபு, ராணிப்பேட்டை பாரதிதாசன் உள்ளிட்ட மாஜி தலைவர்கள் 12-ஆம் தேதி சென்னைக்குச் சென்று எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியின் ஷூட்டிங்கில் இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்து கதறியுள்ளனர்.
""என்ன நடந்தாலும் சரி, உங்களைக் கைவிடமாட்டேன். புஸ்ஸி ஆனந்தின் வசிய வலையில் சிக்கிய எனது மகன் விஜய்யை மீட்டே தீருவேன். தைரியமா ஊருக்குப் போங்க''’என ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார். இதற்கிடையே 13-ஆம் தேதி மும்பை பவுல், துறையூர் சிவா, தொட்டியம் பாரதிதாசன் ஆகியோரைத் தூக்கிக் கொண்டு, சென்னை அடையாறில் இருக்கும் எஸ்.ஏ.சியின் வீட்டுக்குச் சென்று ராஜாவைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதே நாளில் ராணிப்பேட்டைக் குச் சென்ற பாரதிதாசனை, திருச்சியில் இருந்து சென்ற போலீஸ் படை கடுமையாக மிரட்டியதோடு தங்களது பாணியிலும் கவனித்துள்ளது.
14-ஆம் தேதி தீபாவளியன்று அதிகாலை தனது ஊரான களியக்காவிளை போன ஜோஸ் பிரபுவை, திருச்சியிலிருந்து டெம்போ டிராவலர் வண்டியில் வந்த போலீஸ் படை, வண்டியில் தூக்கிப் போட்டு, மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வண்டியை நிறுத்தி, வண்டிக்குள் வைத்தே மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மிரட்டல் விசா ரணை நடத்திவிட்டு அனுப்பியுள்ளனர்.
அதற்கடுத்து 17-ஆம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்று ஸ்டாலின் மாஸ்கோவையும் மதுரைக்குச் சென்று தெப்பக்குளம் அருகே இன்பராஜையும் மகேஷையும் வண்டிக்குள் வைத்தே மிரட்டி அனுப்பியுள்ளனர் திருச்சி போலீசார்.
போலீசின் இந்த ஸ்பீடுக்கு காரணம் என்ன? என திருச்சி மாநகர போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்ட போது, ""ரஜினியைத் தவிர எந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வந்து தேர்தல் நேரத்தில் குட்டையைக் குழப்பக் கூடாது என நினைக்கிறது பா.ஜ.க மேலிடம். அதனால் விஜய்க்கு ஆதரவாக போலீசை இறக்கி, அவரது அப்பாவை மிரட்டிய மாதிரியும் ஆச்சு. விஜய் பெயரிலான கட்சியை முடக் கிய மாதிரியும் ஆச்சு. இது ஒரு டிசைனான கூட்டணி. இதில் எடப்பாடி அரசு கச்சிதமாக ஆக்ட் கொடுக்கிறது'' என்றார்.
எஸ்.ஏ.சி. ஆதரவு நிர் வாகிகள் அனைவரும் செல் ஃபோனை ஆஃப் பண்ணி விட்ட நிலையில், முன் ஜாமீனா, சரண்டரா என்பது பற்றி அவர்கள் நலனில் அக்கறை கொண்ட எஸ்.ஏ.சி., மூத்த வக்கீல்களுடன் ஆலோ சனை நடத்தியுள்ளாராம்.
எல்லாவற்றிற்கும் விளக்கம் பெற கடந்த 21-ஆம் தேதி எஸ்.ஏ.சந்திரசேகரை நாம் தொடர்பு கொண்டோம். ""என்னென்னமோ நடக்குது தம்பி. இப்போதைக்கு என்னால எதையும் டீடெய்லா பேச முடியாது. 25-ஆம் தேதி நானே உங்களைக் கூப்பிட்டு விரிவா பேசுறேன்'' என்றார். அவருடைய வழக்கமான குரல் மிஸ்ஸிங்.
-ஈ.பா.பரமேஷ்வரன்