அரசு மெத்தனம்! ஆணவப் படுகொலையில் மாறிய தீர்ப்பு! -மேல்முறையீடு என்னவாகும்?

k

சாதிய ஆணவத்தின் கொடூர சாட்சியமாக இன்றும் பார்க்கப்படுகிறது அந்த வழக்கு. பட்டப் பகலில் நட்ட நடுரோட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் களை வெட்டிய துணிச்சல், இந்திய சாதியத்தின் கோரமுகத்தை உலகுக்கு வெட்ட வெளிச்சமாக் கியது.

மார்ச் 13, 2016ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா படுகாயங்களுடன் உயிர்தப்பினார். திருப்பூர் வன்கொடுமை தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில், டிசம்பர் 12, 2017ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

dd

இதில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையினர் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி அலமேலு நடராஜன். மேலும், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் கல்லூரி மாணவரான பிரசன்னா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

இதையடுத்து, ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்ய சென்னை உயர்நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் விடுவிக்கப் பட்டதை எதிர்த்து திருப்பூர் டி.எஸ்.பி. சார்பிலும், தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சத்தியநாராயணா, நிர்மல்குமார் அமர்வு இந்த வழக்குகளை விசாரித்துவந்த நிலை

சாதிய ஆணவத்தின் கொடூர சாட்சியமாக இன்றும் பார்க்கப்படுகிறது அந்த வழக்கு. பட்டப் பகலில் நட்ட நடுரோட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் களை வெட்டிய துணிச்சல், இந்திய சாதியத்தின் கோரமுகத்தை உலகுக்கு வெட்ட வெளிச்சமாக் கியது.

மார்ச் 13, 2016ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா படுகாயங்களுடன் உயிர்தப்பினார். திருப்பூர் வன்கொடுமை தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில், டிசம்பர் 12, 2017ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

dd

இதில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையினர் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி அலமேலு நடராஜன். மேலும், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் கல்லூரி மாணவரான பிரசன்னா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

இதையடுத்து, ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்ய சென்னை உயர்நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் விடுவிக்கப் பட்டதை எதிர்த்து திருப்பூர் டி.எஸ்.பி. சார்பிலும், தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சத்தியநாராயணா, நிர்மல்குமார் அமர்வு இந்த வழக்குகளை விசாரித்துவந்த நிலையில், கடந்த 22ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ll

அதன்படி, சின்னசாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியாததால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மேலும் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் கழிக்கவேண்டும். அதேபோல், அன்னலட்சுமி உள்ளிட்ட மூன்று பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே சரியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த ஆணவப் படுகொலை சம்பவத்தில், ஏ1 குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு, அவர் குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டிருப்பது அரசியல் தளத்திலும், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் அதிர் வலைகளை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பில் ஒரு இடத்தில்கூட ‘ஆணவப் படுகொலை’ என்று குறிப்பிடாமல் இருப்பதால், நாளை இதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தனது கணவர் சங்கருக்கு நீதிவேண்டி சட்டப் போராட்டம் நடத்திவரும் கவுசல்யா, உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கவுசல்யா, ""கீழ் நீதிமன்ற விசாரணையின்போது அரசுத்தரப்பு எனக்குக் கொடுத்த ஆதரவுக்கும், மேல்முறையீட்டின் போது இருந்த நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. உயர்நீதிமன்ற விசாரணையின்போது வழக்கு தொடர்பான எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. முதலில் இருந்த டி.எஸ்.பி. வழக்கை நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடத்தினார். அவர் மாறுதலான பிறகு வழக்கின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு என் பாதுகாப்பு கேள்விக்குறிதான் என்றே தோன்றுகிறது. இருந்தாலும், சங்கருக்கான நீதி கிடைக்கும்வரை என் சட்டப்போராட்டம் ஓயாது'' என்கிறார் உறுதியுடன்.

ll

இன்னொருபுறம், “""உயர்நீதிமன்றத் தீர்ப்பு எங்கள்மீது எந்தத் தவறும் இல்லையென்பதை உணர்த்தும் விதமாக, கடவுள் கொடுத்திருக்கும் தீர்ப்பாகவே பார்க்கிறோம்''’ என்று கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேரெதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்ல இருப்பதாக அரசுத் தரப்பு அறிவித்திருக்கிறது. இந் நிலையில், ஏ1 குற்றவாளியே விடுதலையாகி இருப்பதால், இனி இந்த வழக்கின் போக்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் செல்வி பழனியிடம் கேட்டபோது, ""இந்த வழக்கைப் பொறுத்தவரை போதிய ஆதாரங்கள் இல்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருப்பதால், இப்படியொரு தீர்ப்பை வழங்குவதாக உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. குற்றம் நடந்திருப்பது தெரிந்தாலும், அதில் கூட்டுச்சதி இருப்பதாக ஊர்ஜிதப் படுத்தவில்லை என்பது நீதிமன்றத்தின் பார்வையாக இருக்கிறது. குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவாளி மீதான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். விசாரணையில் ஓரளவுக்கு சந்தேகம் இருந்தாலும், அதன் பயன் குற்றவாளிக்கு சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.

பொதுவாகவே, எஸ்.சி./எஸ்.டி. தொடர்பான வழக்கு என்றாலே, ஒரு மெத்தனப்போக்கை அரசுத்தரப்பு கையாள்வதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதுவே மேல் கோர்ட்டில் தீர்ப்பாக பிரதிபலிக்கிறது. எனவே, வழக்கை தொடக்கத்தில் இருந்தே எந்தவித ஓட்டையும் இல்லாமல் கட்டமைக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. ஆனால், அப்படிக் கண்காணிப்பதில்லை என்பதையே ஆய்வுகள் சொல்கின்றன.

இதையெல்லாம் களைய வேண்டுமென்றால், அரசுத்தரப்பு இதுபோன்ற விவகாரங் களில் மெத்தனப்போக்கை கைவிட வேண்டும். விசாரணை அதிகாரிகளின் சாதியம் சார்ந்த கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தில் கூறியுள்ளபடி பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யக்கோரி கேட்டுப்பெறலாம். சங்கர் ஆணவப்படுகொலை வழக்கின் தீர்ப்பினை, இதுபோன்ற எண்ணற்ற கவனம்பெறாத வழக்கு களுக்கான படிப்பினையாகக் கொள்ளவேண்டும்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டைப் பொறுத்தவரை, 2018ஆம் ஆண்டு, தான் வழங்கிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் கருத்தில்கொள்ள வாய்ப்பிருக்கிறது. சாதாரண குற்ற வழக்காக இல்லாமல், தனிக்கவனம் செலுத்தவும் வாய்ப் பிருக்கிறது. தீர்ப்பு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இதனைத் தனி வழக்காக கருதாமல், சமூக மாற்றத்திற்கான வழக்காக உச்ச நீதிமன்றம் கையாண்டால், ஆணவக் கொலைகளுக்கு எதிரான வலுவான அடித்தளமாக அது அமையும்'' என்கிறார் விரிவாக.

இந்த வழக்கோடு எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் மட்டுமே தீர்வு என்ற குரல்கள் வலுக்கின்றன. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு வாக்கு வங்கி முக்கியமென்பதால், இது நிறைவேறுமா என்பது கேள்விக்குறிதான்.

- ச.ப.மதிவாணன்

___________________

தனிச்சட்டம் நிறைவேறுமா?

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் kkகூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், ""ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றும், அதுவரை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுகளை 2018ல் உச்சநீதிமன்றம் வழங்கியது. தடுப்பு, தீர்வு மற்றும் தண்டனை வழங்குவதற்கு என இந்த நெறிமுறைகளை மூன்று வகை களாகக் கொடுத்திருக்கிறது.

இதன்படி குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களை மாநில அரசுகள் கண்டறிந்து, அப்பகுதிகளின் காவல்துறை அதிகாரிகள் விழிப்போடு செயல்பட வலியுறுத்த வேண்டும். அது போல நிவாரண நடவடிக்கையாக, அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தம்பதியினரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும். இதில் தவறும் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. மேலும், இந்திய சட்ட ஆணையம் தயாரித்த ஆணவக்கொலைகள் தொடர்பான சட்ட மசோதாவை மத்திய அரசும் நிறைவேற்ற வில்லை. இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தாவிட்டால், பிரச்சனைகளைத் தடுக்க இயலாது'' என்கிறார்.

-க.செல்வகுமார்

nkn270620
இதையும் படியுங்கள்
Subscribe