Advertisment

தனியார் நிறுவன பெண்மணி கையில் அரசு ரகசியங்கள்! -ஐ.பி.எஸ் வட்டார சர்ச்சை

dd

மிழக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நட்பு வளையத்துக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் அரசின் முக்கிய திட்டங்களை கைப்பற்ற ஒரு பெண்மணி முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுதான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் ஹாட் டாபிக்.

Advertisment

இதுகுறித்து விசாரித்தபோது, "தலைமைச் செயலகத்தி லிருக்கும் ஒரு வங்கியில் தலைமை மேலாளராக இருந்த பாஞ்சி சுப்பிரமணியம் என்ற பெண்மணி, 3 ஆண்டுகாலம் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் பணிபுரிந்த காலத்தில் முக்கிய துறைகளில் இருந்த சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர்களின் ப்ரைவேட் செகரட்டரிகள் மற்றும் அமைச்சர்கள் என பலரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை பயன்படுத்தி தகவல் தொழி

மிழக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நட்பு வளையத்துக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் அரசின் முக்கிய திட்டங்களை கைப்பற்ற ஒரு பெண்மணி முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுதான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் ஹாட் டாபிக்.

Advertisment

இதுகுறித்து விசாரித்தபோது, "தலைமைச் செயலகத்தி லிருக்கும் ஒரு வங்கியில் தலைமை மேலாளராக இருந்த பாஞ்சி சுப்பிரமணியம் என்ற பெண்மணி, 3 ஆண்டுகாலம் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் பணிபுரிந்த காலத்தில் முக்கிய துறைகளில் இருந்த சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர்களின் ப்ரைவேட் செகரட்டரிகள் மற்றும் அமைச்சர்கள் என பலரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்டுகள் உள்ளிட்டவைகளை கைப்பற்ற அனைத்து இன்ப்ளூயன்ஸ்களையும் தற்போது பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள்'' கோட்டை வட்டாரத்தினர்.

Advertisment

pp

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் "நிர்பயா நிதி' திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடிகளை மாநில அரசுகளுக்கு ஒதுக்குகிறது ஒன்றிய அரசு. கடந்த 2020-ல் மட்டும் தமிழக காவல்துறைக்கு 303 கோடி ஒதுக்கியது. தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான சைபர் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கான அவசரகால உதவி மையங்களை ஏற்படுத்தவும், ஒன் ஸ்டாப் சென்டர்களை உருவாக்கவும், சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தவும் என 18 வகையிலான பணிகளுக்கு இந்த நிதியை செலவிடுகிறது தமிழக காவல் துறை.

இந்த நிலையில், நிர்பயா நிதி திட்டத்தின் பணிகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இணைந்து கொண் டுள்ளார் பாஞ்சி சுப்பிரமணியம்..

அந்த நிர்வாகத்தின் சார்பில் இந்த பெண்மணிதான் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் நடத்தும் கூட்டங் களில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் கூட சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இவர் கலந்துகொண்டார். சைபர் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை கையாள வேண்டிய விவகாரங்கள் தனிநபர் ஒருவர் கைகளுக்கு சென்றால் அரசு ரகசியங்கள் எப்படி பாதுகாக்கப்படும் என்ற சந்தேகத் தை ஐ.பி.எஸ் அதிகாரிகள் எழுப்புகின்றனர்.

தகவல் தொழில் நுட்பம் குறித்த தனது அறிவாற்றலை சிலாகித்து, அமைச்சர்கள்- உயரதிகாரிகள் பலரையும் தெரியும் என்றும் சொல்லிவருகிற அந்தப் பெண்மணி, தற்போது தனியாக ஒரு நிறுவனத்தை துவக்கியிருக்கிறார். இதன்மூலம் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான கான்ட்ராக்ட்டு களையும், ஸ்மார்ட் சிட்டி திட்டங் களையும் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். தனது பயோடேட்டாவில் பீரோகிராட்ஸ், வி.வி.ஐ.பி.க்கள், முதலமைச்சர், (முன்னாள்) துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்களைத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைகள் குறித்து பாஞ்சி சுப்பிர மணியத்தைத் தொடர்புகொண்டோம். "குறிப்பிட்ட நிறுவனத்தில் நான் ஒரு டெக்னிக்கல் பெர்சன். சீக்ரெட் மேட்டரை உங்களிடம் சொல்ல முடியாது. ப்ராஜக்டு களைப் பெறுவதற்காக எந்த அதிகாரிகளின் பெயரையும் நான் பயன்படுத்தவில்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

இவருக்காக தற்போது சர்வீசில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், வி.ஆர்.எஸ்.சில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.கள் என பலரும் இதன் பின்னணியில் இருந்து உதவி வருகின்றனர். சைபர் குற்றங்கள் அடங்கிய தகவல் தொழில்நுட்ப பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசுக்கு ஆபத்தானது‘’ என்று சுட்டிக் காட்டுகிறார்கள் காவல்துறையினர்.

nkn030721
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe