கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டையொட்டி அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 40 லட்ச ரூபாய் நிதி திரட்டி, மேலும் 80 லட்சம் ரூபாய் அரசிடம் நிதி பெற்று அந்த பள்ளிக்கு மிகப்பெரிய கலையரங்கமும், அழகிய நுழைவாயிலையும் அமைத்துக்கொடுத்திருக்கின்றனர்.
இந்த நூறு ஆண்டுகளில் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல்வேறு துறைகளில் பணி யாற்றியும், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். தற்போது இந்த பள்ளிக்கு நூற்றாண்டு என்பதால் இந்த பள்ளியில் படித்த, விருத்தாசலம் பகுதியிலுள்ள முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற அடிப்படையில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். அதன்மூலமே ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கமும், நுழைவாயிலும் அமைத்திருக்கிறார்கள்.
இந்த புதிய நூற்றாண்டு விழா கலையரங்கம் மற்றும் நுழைவுவாயில் திறப்

இந்த புதிய நூற்றாண்டு விழா கலையரங்கம் மற்றும் நுழைவுவாயில் திறப்பு விழா 12.06.2023 அன்று நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கத் தின் தலைவர் அருணாசலம் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஓய்வுபெற்ற ஐ.ஏஎ.ஸ் அதிகாரி புதுக்கூரைப்பேட்டை கி.தனவேல், பாடலாசிரியர் சு.கீணனூர் அறிவுமதி, கௌரவ தலைவர் சுரேஷ்சந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பள்ளியின் முன்னாள் மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதியுமான புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்துகொண்டு நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதி புகழேந்தி, "40 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த பள்ளிக்கு வந் துள்ளேன். ஒவ்வொருவரது வாழ்வின் உயர்விற்கும் பள்ளிக்கூடம் மிகவும் முக்கியமானது. இந்தப் பள்ளியில் நடந்த ஒரு பட்டிமன்றமே நான் சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு காரண மானது. நான் அதற்குப் பிறகு சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகி, அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்து, நீதிபதியாக உங்கள் முன்பு வந்துள்ளேன். நமது வாழ்க்கையின் படிக்கட்டுகளாக பள்ளிக் கூடம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் நன்றாக கட்டமைந் தால் பெற்றோர்களும் மாணவர்களுமே அந்தப் பள்ளியை பார்த்துக்கொள்வார்கள். இந்த பள்ளியைப் போன்று முன்மாதிரியாகக் கொண்டு மற்ற பள்ளிகளையும் சிறப்பாக கட்டமைக்க இந்த மாவட்ட கலெக்டர் முன்னெடுத்து செயல்பட்டால் மற்ற மாவட்டங்களுக்கும் இது பரவும்'' என்றார்.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன் நம்மிடம், "1921-ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக விருத்தாசலத்தில் இந்த அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு பி.யூ.சி. எனப்படும் புதுமுக வகுப்பு கல்லூரியும் இங்கு நடைபெற்றது. இவ்வாறு பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட பள்ளியின் நூற்றாண்டு தொடங்குவதை முன்னிட்டு இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் ஒன்றுகூடி நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கினோம். இதில் பலரும் ஆர்வமாக வந்துசேர்ந்தார்கள்.
மிகப்பெரிய இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சமூகவிரோதிகள் பள்ளிக்குள் நுழைந்துவிடுகிறார்கள். மாணவர்களின் கவனம் திசைமாறுகிறது. தவறான பழக்கங்களுக்கு ஆட்படு கிறார்கள் என்ற காரணத்தால் சிறிய பட்ஜெட்டில் சுற்றுச்சுவர் அமைக்கலாம் என்று திட்டமிட் டோம். பின் சுற்றுச் சுவருடன் கலையரங்கமாக திட்டம் விரி வடைந்தது. இந்த பள்ளி தொடங்கிய எட்டாவது வருடம் இந்தப் பள்ளியில் படித்து தற்போது 92 வயதை நெருங்கும் இந்தப் பள்ளியின் மூத்த முன்னாள் மாணவரும் விருத்தாச்சலத்தின் முன் னாள் நகர்மன்ற தலைவருமான அர.இலக்குமணன் போன்றவர்கள் பங்களிப்பை ஆர்வமுடன் செய்தனர்.
முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாமல் விருத்தாசலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பங்களிப்பைச் செய்தார்கள். நாங்கள் படித்த இந்தப் பள்ளிக்கு இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. இது போல் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முன்னாள் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளை திரும்பிப் பார்த்தால் அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளைவிட உயர்வானதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.'' என்றார்
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ம.அகர்சந்த், நகர்மன்றத் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், நகராட்சி ஆணையாளர் சேகர், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-சுந்தரபாண்டியன்