Advertisment

இருளர்களுக்கு அரசு தந்த ஒழுகும் வீடுகள்! - காண்ட்ராக்ட் கூட்டுக் கொள்ளை!

corruption

பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் உயிர் பயத்தில் பரிதவிக்கிறார்கள். இந்த சின்னஞ் சிறு கிராமம் திருவண்ணாமலை மாவட்ட தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது. இங்கு வாழும் இருளர் மக்கள் வறுமையோடு போராடி வருவதோடு, குடியிருப்புகள் கூட இல்லாமல் தவித்து வந்தனர்.

Advertisment

corruption

மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி, அங்கிருக்கும் 49 இருளர் குடும்பங்களுக்கு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் பசுமை வீடு திட்டம், பழங்குடியினர் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் குடியிருப்புகளைக் கட்டித் தர உத்தரவிட்டார். இதேபோல் அந்த மாவட்டத்தில் உள்ள பழங்குடி மற்றும் நரிக்குறவ குடும்பங்களுக்கும் 6.31 கோடி ரூபாயில் 178 வீடுகளைக் கட்டவும் மும்மு

பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் உயிர் பயத்தில் பரிதவிக்கிறார்கள். இந்த சின்னஞ் சிறு கிராமம் திருவண்ணாமலை மாவட்ட தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது. இங்கு வாழும் இருளர் மக்கள் வறுமையோடு போராடி வருவதோடு, குடியிருப்புகள் கூட இல்லாமல் தவித்து வந்தனர்.

Advertisment

corruption

மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி, அங்கிருக்கும் 49 இருளர் குடும்பங்களுக்கு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் பசுமை வீடு திட்டம், பழங்குடியினர் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் குடியிருப்புகளைக் கட்டித் தர உத்தரவிட்டார். இதேபோல் அந்த மாவட்டத்தில் உள்ள பழங்குடி மற்றும் நரிக்குறவ குடும்பங்களுக்கும் 6.31 கோடி ரூபாயில் 178 வீடுகளைக் கட்டவும் மும்முரம் காட்டினார்.

Advertisment

கிடுகிடுவென எழுந்த இந்த வீடுகளைக் கடந்த நவம்பர் 15-ந் தேதி அறநிலையத்துறை அமைச் சர் சேவூர் ராமச்சந்திரனும் அப் போதைய கலெக்டர் கந்தசாமி யும் திறந்துவைத்தனர். புது வீட்டின் சாவிகளை மகிழ்வோடு பெற்ற பயனாளிகளுக்கு மறு நாளே அதிர்ச்சியான அனுபவங் கள் காத்திருந்தன. இது குறித்து பொன்னூர் இருளர் சமூக மக்களிடமே நாம் கேட்டபோது “""ரொம்பவும் ஆசையோடு புது வீடுகளுக்குக் குடி போனோம். ஆனால் மறுநாள் லேசா பெய்த மழைக்கே எங்க வீடுகள் ஒழுக ஆரம்பிச்சிடுச்சு. அதேபோல் சுவரில் இருந்த சிமெண்ட்டும் கரைஞ்சி உதிர்ந்துச்சி. இதனால் எந்த நேரத்தில் யார் தலையில் எந்த வீடு இடிஞ்சு விழுமோங்கிற பயத்தில் நிம்மதியில்லாமல் இருக்கோம்''’ என்றார்கள் மிரட்சியோடு.

corruption

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களோ ""வீடு கட்டும் திட்டங்களுக்கான ஒர்க் ஆர்டரை பயனாளிகள் பெயரில் கொடுத்த அதிகாரிகள், பண முதலீடு செய்து வீடு கட்டும் அளவுக்கு இப்பகுதி மக்கள் இல்லாததால், வீடு கட்டும் பொறுப்பை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்துட்டாங்க. பயனாளி களின் வங்கிக் கணக்கில் இருந்து இதற்காக ஒதுக்கும் பணத்தை அவங்களுக்கு எடுத்துக் கொடுத்துடுவாங்க. இந்த முறையில்தான் இங்கே 49 வீடுகளும் கட்டப் பட்டுச்சு. அ.தி.மு.க.வைச் சேர்ந்த வர்களுக்கு இதில் 29 வீடுகளும், தி.மு.கவைச் சேர்ந்தவர்களுக்கு 20 வீடுகளையும் ஒதுக்கினாங்க. அதேபோல் வீடுகட்டும் ஒப்பந் தப் பணிகளையும் 60/40 சதம்ன்னு அ.தி.மு.க., தி.மு.க. ஒப்பந்ததாரர்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தாங்க.

அதாவது ஆளும்கட்சி ஒப்பந்ததாரர் நவச்சிவாயம் 29 வீடுகளையும் எதிர்க்கட்சி ஒப் பந்ததாரர்களான பிரபாகரன் 10 வீடுகளையும் ஒன்றிய கவுன்சிலர் கெங்குராஜ் 10 வீடுகளையும் கட்டினார்கள். 300 சதுர அடியி லான இந்த வீடுகளைத் திட்டங் களுக்குத் தக்கபடி 1.75 லட்சம், 2.10 லட்சம்ங்கிற எஸ்டிமேட்டில் கட்டி முடிச்சாகனும். இதில் தாங்களும் லாபம் பார்க்கனும், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்கனும் என்பதால், இந்த ஒப்பந்ததாரர்கள், வீட்டின் தரத் தைப் பத்திக் கவலைப்படலை. குறிப்பா ஆளும்கட்சி நமச்சிவா யம், தரமற்ற செங்கல், எம்- சான்ட்டுகளைப் பயன்படுத்திய தோடு, சிமெண்ட் அளவையும் குறைச்சி மணல் வீடுகளாக் கட் டிட்டார். அதேபோல் கெங்கு ராஜ் கட்டிய சில வீடுகளும் மோசமான கண்டிசன்லதான் இருக்கு''’என்றார்கள் கவலையும் ஆதங்கமுமாய். இந்த விவகாரம் குறித்து தெள்ளார் ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் காந்திமதியிடம் நாம் கேட்ட போது, ""பயனாளிகள் தங்களால் வீட்டைக் கட்ட முடியாதுன்னு எழுதித் தந்ததன் அடிப்படை யில்தான் ஒப்பந்ததாரர்களிடம் அதைக் கட்டித் தரச் சொன் னோம். அதில் சில வீடுகள் பற்றி புகார் வந்ததால், சரி செய்யச் சொல்லியிருக்கிறோம். முழுமை யாக குறைகள் தீர்க்கப்பட்ட பின்புதான் பில்லை செட்டில் செய்வோம்''’என்று முடித்துக் கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை யின் திட்ட இயக்குநரான ஜெய சுதா, அங்கே நேரடியாக விசாரணை நடத்தி, ஒப்பந்த தாரர் நமச்சிவாயத்தை எச்சரித் திருக்கிறார்.

கமிஷனில் கட்டப்பட்ட வீடுகள் அங்கே பயனாளிகளை திகிலில் ஆழ்த்திவருகின்றன.

-ராஜா

nkn281120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe