"ஹலோ தலைவரே, ஒட்டுமொத்த தமிழக பத்திரி கையாளர்களும் உற்சாகம் பெறும் வகையில் தமிழக அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா... பத்திரிகையாளர்களின் குரலுக்கு உரிய வகையில் செவிசாய்க்கப் பட்டிருக்கு.''”
"உண்மைதாங்க தலைவரே, சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் 25 ஆண்டு களுக்குப் பின்னர், அண்மையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. இந்த தேர்தலை நடத்தவிடாமல் செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன், அவரது மகன் ரிச்சர்ட் இருவரும் வாதாடி முறியடித்தனர். தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை 17ஆம் தேதி சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் 10லிக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங் கிய ஒரு மனுவையும் அவரிடம் கொடுத் தனர். 20 ஆண்டுகள் பணியில் இருந்து மரண மடையும் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப உதவி நிதியாக அரசு வழங்கும் 5 லட்ச ரூபாயை, உயர்த் தித் தரவேண்டும் என்பது அதில் பிரதானமாக இருந்தது. அதேபோல் மன்றம் அரசுக்குக் கட்டவேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 80 லட்சத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. மனுவை உடனே வாங்கிப் படித்த முதல்வர், தனது செயலாளரான உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸை அழைத்து, இந்தக் கோரிக்கைகளில் எதை, எதை நம்மால் உடனடியாக நிறைவேற்ற முடியும் என்று பாருங்கள். மற்ற கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றலாம் என்று அதிரடியாகச் சொல்லி, பத்திரிகையாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து மகிழவைத்திருக்கிறார்.''”
"ஆமாம்பா, அந்த கோரிக்கைகளுக்குப் பலனாக மின்னல் வேகத்தில் பத்திரிகையாளர்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தனது செயலாளருடன் கலந்து பேசிய முதல்வர், 20 ஆண்டுகள் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை, 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதேபோல் பணிக்கால சீனியாரிட்டி அடிப்படை யில் வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் குடும்ப நல நிதியும் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இந்த சலுகையைப் பெற அரசு அங்கீகார அட்டை தேவையில்லை என்றும் அறிவித்தார். இது பத்திரிகையாளர்களை வெகுவாக உற்சாகப் படுத்தி இருக்கிறது. அடுத்து துணைமுதல்வர் உதயநிதியையும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி கள் சந்தித்தனர். பத்திரிகையாளர் மன்றத்தில் உள் விளையாட்டு அரங்கம், ஜிம் வசதி உள்ளிட்டவை களை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவரிடமும் வைத்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றம், துணை மு
"ஹலோ தலைவரே, ஒட்டுமொத்த தமிழக பத்திரி கையாளர்களும் உற்சாகம் பெறும் வகையில் தமிழக அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா... பத்திரிகையாளர்களின் குரலுக்கு உரிய வகையில் செவிசாய்க்கப் பட்டிருக்கு.''”
"உண்மைதாங்க தலைவரே, சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் 25 ஆண்டு களுக்குப் பின்னர், அண்மையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. இந்த தேர்தலை நடத்தவிடாமல் செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன், அவரது மகன் ரிச்சர்ட் இருவரும் வாதாடி முறியடித்தனர். தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை 17ஆம் தேதி சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் 10லிக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங் கிய ஒரு மனுவையும் அவரிடம் கொடுத் தனர். 20 ஆண்டுகள் பணியில் இருந்து மரண மடையும் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப உதவி நிதியாக அரசு வழங்கும் 5 லட்ச ரூபாயை, உயர்த் தித் தரவேண்டும் என்பது அதில் பிரதானமாக இருந்தது. அதேபோல் மன்றம் அரசுக்குக் கட்டவேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 80 லட்சத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. மனுவை உடனே வாங்கிப் படித்த முதல்வர், தனது செயலாளரான உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸை அழைத்து, இந்தக் கோரிக்கைகளில் எதை, எதை நம்மால் உடனடியாக நிறைவேற்ற முடியும் என்று பாருங்கள். மற்ற கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றலாம் என்று அதிரடியாகச் சொல்லி, பத்திரிகையாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து மகிழவைத்திருக்கிறார்.''”
"ஆமாம்பா, அந்த கோரிக்கைகளுக்குப் பலனாக மின்னல் வேகத்தில் பத்திரிகையாளர்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தனது செயலாளருடன் கலந்து பேசிய முதல்வர், 20 ஆண்டுகள் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை, 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதேபோல் பணிக்கால சீனியாரிட்டி அடிப்படை யில் வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் குடும்ப நல நிதியும் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இந்த சலுகையைப் பெற அரசு அங்கீகார அட்டை தேவையில்லை என்றும் அறிவித்தார். இது பத்திரிகையாளர்களை வெகுவாக உற்சாகப் படுத்தி இருக்கிறது. அடுத்து துணைமுதல்வர் உதயநிதியையும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி கள் சந்தித்தனர். பத்திரிகையாளர் மன்றத்தில் உள் விளையாட்டு அரங்கம், ஜிம் வசதி உள்ளிட்டவை களை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவரிடமும் வைத்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றம், துணை முதல்வரின் சேப்பாக்கம் தொகுதியில் வருகிறது. எனவே தொகுதி எம்.எல்.ஏ. என்ற வகையில் அவற்றை அக்கறையாகக் கேட்ட உதயநிதி, நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார். கால நேரம் பார்க்காமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, அரசின் இந்த ஒத்திசைவு ஆறுதல் ஒத்தடமாக அமைந்திருக்கிறது.''”
"சரிப்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அம்பேத்கர் பற்றிய விமர்சனம் நாட்டையே கொதிப்பில் ஆழ்த்தியிருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்திய அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறை வானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ராஜ்யச பாவில் இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது. இரண்டாம் நாள் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர்னு முழக்கமிட்டுச் சொல்வதே ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தி லாவது இடம் கிடைத்திருக்கும் என்று சொன்னார். அமித்ஷாவின் இந்தப் பேச்சில் வெளிப்பட்ட எகத்தாளத்தைக் கண்ட காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. நாடாளுமன்றத்தைத் தாண்டியும் அமித்ஷா வுக்குக் கிளம்பிய எதிர்ப்பு, அனைத்து மாநிலங்களிலும் எதி ரொலிக்க ஆரம்பித்துவிட் டது. இதனால் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் ஆடிப்போய் விட்டது. இதைக்கண்டு பதறிய அமித்ஷா, நான் அம்பேத்கரை இழிவு படுத்தவில்லை. காங் கிரஸ்தான் என் பேச்சைத் திரித்து, எனக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்கி வருகிறது என்று தன் நிலையில் இருந்து ஜகா வாங்கி உடனடியாக விளக்கம் கொடுத்தார். எனினும் எதிர்ப்புச் சூறாவளி இன்னும் அடங் கிய பாடில்லை.''”
"இந்த விவகாரத்தில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் மீது பா.ஜ.க. கடும் கோபத்தில் இருக்கிறதே?''”
"பா.ஜ.க.வை பொறுத்தவரை நடிகர் விஜய்யை, அது தங்களின் மறைமுக அபிமானி யாகத்தான் கருதிவருகிறதாம். எப்படியிருந்தாலும் தேர்தல் நேரத்தில் தங்கள் கூட்டணி எக்ஸ்பிரஸில் விஜய் தொற்றிக்கொள்வார் என்றும் அது நம்புகிறதாம். இந்த நிலையில், அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த விமர்சனத்திற்கு நடிகர் விஜய்யும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கொஞ்சம் காரசாரமாகவே "அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சரை த.வெ.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். மற்ற எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை எல்லாம் எளிதாக எடுத்துக்கொண்ட பா.ஜ.க.வால், நடிகர் விஜய்யின் கண்டிப்பை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம். அதிலும் நேற்றுவரை அரசியலே தெரியாமல் வெறும் திரையில் மட்டும் அரிதாரம் பூசிவந்தவர், திடீரென்று கட்சி தொடங்கிய வேகத்தில் நம்மை எதிர்த்து விமர்சனத்தை வைப்பதா? என்று பா.ஜ.க. கோபமடைந்திருக்கிறதாம். விஜய்யின் கண்டனத்தை சீரியஸாக டெல்லி எடுத்துக்கொண்டதால், விரைவில் அவரைக் குறிவைத்து ரெய்டு நடவடிக்கைகள் பாயலாம் என்கிறது டெல்லித் தரப்பு.''”
"சரிப்பா, தமிழக பா.ஜ.க.வின் உள்கட்சித் தேர்தல் ஜனவரியில் நடக்கவிருக்கிறது என்கிறார்களே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மாவட்ட தலைவர்கள் தொடங்கி மாநில நிர்வாகிகள் வரையிலான பல்வேறு பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்களாம். அதிலும் முக்கிய பதவிகளில், கட்சித் தலைமை யாரை கை காட்டுகிறதோ, அவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள் என்கிறது கமலாலய வட்டாரம். அந்த வகையில், மாவட்ட தலைவர் பதவியில் தற்போது இருக்கும் பலரையும், உள்கட்சித் தேர்தல் மூலம் மாற்றப்போகிறார்களாம். இதனால், மாவட்ட தலைவர் பதவிகளைக் கைப்பற்ற, இப்போதே கடும் போட்டிகள் ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். கட்சியின் சீனியர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர்களுக்கும், மாவட்ட அளவில் மக்களிடம் அறிமுகம் பெற்றவர்களுக்கும் இந்தமுறை வாய்ப்பு தரவேண்டும் என்கிற எண்ணம் பா.ஜ.க. தலைமைக்கு இருக்கிறதாம். ஆனால், இதை எல்லாம் சாதி ரீதியாக உடைத்தெறிய மாவட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் சிலர் முயற்சித்துவருகிறார்களாம்.''”
"எப்படி?''”
"குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க.வில் பொதுச்செயலாளராக இருப்பவர் முரளிதரன். இவர் மிக மிக சீனியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் நீண்ட காலம் பணியாற்றியவர். பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சீனியர்மேன் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றவர் களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பதவிக்கு, இந்த முரளிதரனை இவர்கள் சிபாரிசு செய்திருக்கிறார்களாம். இவர் குறித்த அரசியல் பின்னணிகளை ஆராய்ந்த பா.ஜ.க.வின் தேசிய தலைமையும், முரளிதரனின் பெயரை டிக் அடித்து வைத்திருக்கிறதாம். இதனை அறிந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க.வி லுள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முரளிதரனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்க இப்போதே கோதாவில் இறங்கியிருக் கிறார்களாம். இதுபோன்ற விவகாரங்கள் பல மாவட்டங்களிலும் நிலவுகிறது என்கிறார்கள்.''”
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஷாக் கொடுத்திருக்கிறதே?''”
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை, அண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தி.மு.க. அரசு. இதன் மீதான விசாரணை 17ஆம் தேதி வந்தபோது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கின் விசாரணையை, தமிழக காவல்துறையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களின் இந்த ஆர்வமே உங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ.யே விசாரிக்கட்டும் என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித் திருக்கிறது. இந்த நிலையில் கள்ளச்சாராய மரண வழக்கை கையில் எடுத்திருக்கும் சி.பி.ஐ, இது தொடர்பான தனது விசாரணையை விரைவில் தொடங்கவிருப்பதாக, அவர்கள் தரப்பிலிருந்தே தகவல் வருகிறது. இந்த விசாரணை தமிழக காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.''”
"தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன், தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அடிக்கடி அரசுக்கு எதிரான விமர்சனத்தை வைத்தபோதும், பா.ம.க.வை சமாளிப்பதற் காகவே அவரைத் தங்கள் கூட்டணியில் இன்னும் தி.மு.க. வைத்துக் கொண்டி ருக்கிறது என்கிறார்கள் அந்தக் கூட்டணியில் இருக்கும் சிலரே. வேல்முருகன் தரப்போ, தான் வைக்கும் கோரிக்கை எதையும் தி.மு.க. மேலிடம் நிறைவேற்றுவதில்லை என்றும், கூட்டணிக் கட்சித் தலைவர் என்கிற மரியாதையைக் கூட திமுக அமைச்சர்களே கொடுக்கப்பதில்லை என்றும் ஆதங்கப்படுகிறார். மேலும் தனது தொகுதி வளர்ச்சிக்கான நிதியைக்கூட சுதந்திரமாக ஒதுக்க முடியவில்லை என்பதும் அவரது குற்றச்சாட்டாகும். இதுபோன்ற மனக்குறைகளை சமீபத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்திய வேல்முருகன், எனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு எதையும் செய்யமுடியாத நிலை இருக்கும்போது, அந்தப் பதவி எதற்கு? என்றும் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் முதல் கட்சியாக வாழ்வுரிமைக் கட்சி இருக்கும் என்றும், அப்படி அவர் வெளியேறினால், அ.தி.மு.க. அல்லது விஜய் கட்சியோடு கூட்டணி வைப்பார் என்றும் அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.''”
"இந்த நேரத்தில், அதிகாரிகளின் போக்கு குறித்து அமைச்சர் ஒருவரே தன் ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மாஞ்சன்விடுதி ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை யில் அண்மையில் நலத்திட்ட விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், இந்த மாவட்டத்தின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கவனிக்கச் சொன்னால், கேட்பதில்லை. சமீபத்தில் ஒரு இளைஞரை தோளில் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து, அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கேட்டார்கள். அதை அந்த அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி யும் அவர் செய்ய வில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்றுதான் இந்தத் துறையை முதல்வரே தன் னிடம் வைத்துக்கொண்டி ருக்கிறார். அதிகாரிகளுக்கு இதில் அக்கறையில்லை என்று தன் ஆதங்கத்தை வெளியிட் டார்.''”
"கொரோனாவில் மரணமடைந்த அரசு மருத் துவரின் குடும்பம் நிர்க் கதியில் போராடுகிறதே?”
"திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த விவே கானந்தன் என்ற மருத்துவர், பள்ளிப்பட்டு அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வந்தார். 2020 ஆம் ஆண்டு கொரோனா வின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இவரது மனைவிக்கு கருணை அடிப் படையில் பணி வழங்க வேண்டும் என 4 ஆண்டுகளாக மருத்துவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்ற னர். ஆனால், இதுதொடர்பாக சட்ட சபையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த மருத்துவருக்கு இரண்டு மனைவிகள். அதனால் பணி தருவதில் சிக்கல் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. பதில் கொடுத்திருக்கிறார். இது அந்த மருத்துவரின் குடும்பத்தினரையும், அரசு மருத்துவர் சங்கத்தை யும் கொதிக்க வைத்திருக்கிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவோ, "என் கணவருக்கு இரண்டு மனைவி என்று சொல்வது அவரை அவமானப்படுத்தும் பொய்த் தகவலாகும்' என்றார் காட்டமாக. அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளையோ, "ஒரு மதிப்பு மிக்க பேரவையிலேயே அமைச்சர் தவறாக தகவலைச் சொல்லலாமா? இனியாவது அந்த மருத்துவர் குடும்பத்தின் துயரத்தை அரசு துடைக்க வேண்டும்' என்கிறார் ஆதங்கமாக.''”
"நானும் ஒரு முக்கியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி, 17ஆம் தேதி சென்னைக்கு ரகசியமாக விசிட்டடித்திருக்கிறார். அவரை, த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மேனகா வருகையின் நோக்கம் என்ன? விஜய்யின் பெற்றோருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என மாநில உளவுத்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.''”