Advertisment

அரசு நிலம் கபளீகரம்! தனியாருக்குப் பத்திரப் பதிவு! -அதிர்ந்த சி.எம்.டி.ஏ!

aa

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) சொந்தமான சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தினை தனியார் நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்திருக்கும் விவகாரம் சி.எம்.டி.ஏ.வில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சென்னை விருகம் பாக்கம் சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நெற்குன்றம் கிராமப் பகுதியில் சர்வே எண் 90 மற்றும் 91-ல் சுமார் 2.49 ஏக்கர் நிலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு சொந்தமாக இருக்கிறது. தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தால் இந்த நிலம் 31.07.1985-ல் சி.எம்.டி.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 70 கோடி ரூபாய்!

Advertisment

land

சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இந்த 2.49 ஏக்கர் நிலத்தில் சர்வே எண் 91-ல் 1.53 ஏக்கர் (29.79 கிரவுண்ட்) நிலத்தை, கடந்த 18.04.2022-ல் ரேர் ரீடைல் அண்ட் இன்ஃப்ரா என்ற நிறுவனத்துக்கு விருகம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) சொந்தமான சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தினை தனியார் நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்திருக்கும் விவகாரம் சி.எம்.டி.ஏ.வில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சென்னை விருகம் பாக்கம் சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நெற்குன்றம் கிராமப் பகுதியில் சர்வே எண் 90 மற்றும் 91-ல் சுமார் 2.49 ஏக்கர் நிலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு சொந்தமாக இருக்கிறது. தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தால் இந்த நிலம் 31.07.1985-ல் சி.எம்.டி.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 70 கோடி ரூபாய்!

Advertisment

land

சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இந்த 2.49 ஏக்கர் நிலத்தில் சர்வே எண் 91-ல் 1.53 ஏக்கர் (29.79 கிரவுண்ட்) நிலத்தை, கடந்த 18.04.2022-ல் ரேர் ரீடைல் அண்ட் இன்ஃப்ரா என்ற நிறுவனத்துக்கு விருகம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து தரப்பட்டிருக்கிறது.

சேக் முகமது, தனசேகரன், இவரது மனைவி சசிரேகா ஆகிய மூவருக்கும் இந்த சொத்து சொந்தமானது என்றும், ரேர் ரீடைல் நிறுவனத் துக்கு 16 கோடியே 67 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் விற்பதாகவும் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இதன் சந்தை மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய்.

சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இந்த சொத்தினை களவாட முந்தைய காலங்களில் பலரும் முயற்சித்த போது, ’இந்த சொத்து தங்க ளுக்கு சொந்தமானது; இதனை பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என்று கடந்த 2018-ல் பத்திரப் பதிவுத்துறை தலைவருக்கும், விருகம்பாக்கம் சார்-பதிவாளருக்கும் சி.எம்.டி.ஏ. நிர்வாகத்திலி ருந்து கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதனால், கடந்த 2 வருடங்களாக எந்த பிரச்சனை யும் இல்லை.

இவ்வளவு அறிவுறுத்தல்கள் இருந்தும், தற்போது சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் சிலர் குறிவைக்க, தனியார் நிறுவனத் துக்கு கடந்த ஏப்ரல் 18-ந்தேதி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது விருகம்பாக்கம் சார்- பதிவாளர் அலுவலகம்''’என்கிறார்கள்.

பத்திரப்பதிவுத்துறை தரப்பில் விசாரித்த போது,”"விருகம்பாக்கம் சார்-பதிவாளராக இருந்த புனிதா மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்த தால் அவரை அங்கிருந்து மாற்றிவிட்டு, அந்த இடத்தில், சார்-பதிவாளர் நிலையில் மேனகா என்கிற உதவியாளரை நியமிக்கிறார் தென்சென்னை மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவர் சத்யப்ரியா. சென்னையில் போதுமான அளவில் சார்-பதிவாளர்கள் இல்லாததால், பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த நிலைதான்.

சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான குறிப்பிட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மேனகாவை வலியுறுத்துகிறார். ஆனால், சி.எம்.டி.ஏ.வின் அனுமதியில்லாமல் இந்த நிலத்தை யாருக்கும் பதிவு செய்யக் கூடாது என்கிற அறிவுறுத்தல் இருப்பதால், சத்யப்ரியாவின் வலியுறுத்தல்களை ஏற்க மறுக்கிறார் மேனகா.

dd

அவரை மாற்றிவிட்டு பம்மல் அலுவல கத்திலிருந்த உதவியாளர் ரஞ்சித்தை, விருகம்பாக்கத்துக்கு மாற்றி, அவரை வைத்து இந்த அரசு நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்கிறார்கள் (ஆவண எண்: 2970/2022, நாள்: 18.04.2022). இதன் பின்னணி யில் கனமான விஷயங்களும் ரஞ்சித் வரை பங்கீடும் நடந்துள்ளது.

உடனே, பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஐ.ஏ.எஸ்.சுக்கு சி.எம்.டி.ஏ. தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்படுகிறது. அவர் இந்த புகாரை விசாரிக்க கூடுதல் ஐ.ஜி. சீனிவாசனுக்கு உத்தரவிடுகிறார். அவரும் சத்யப்ரியாவுக்கு தகவல் தெரிவிக்க, விசாரணை நடத்துகிறார் சத்யப்ரியா.

விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட நிலம் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமானது என்றும், சி.எம்.டி.ஏ. வின் அனுமதியில்லாமல், ரஞ்சித் என்ற உதவியாளர் பத்திரப்பதிவு செய்திருக்கிறார் என்றும், அரசு நிலம் குறித்து உரிய ஆணைகள் ஏதும் பெறாமல் தன்னிச்சை யாக சார்-பதிவாளர் பொறுப்பிலிருந்த உதவியாளரின் செயல் பதிவுச் சட்டம் பிரிவு 22(ஏ)-வுக்கு முரணாக உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்து பதிவுத்துறையின் துணைத்தலைவருக்கு தனது அறிக்கையை (ந.க.எண்:7963/ஆ1/2020,நாள்:27.04.2022) சமர்ப்பித்துள்ளார் சத்யப்ரியா. இதனையடுத்து, ரஞ்சித் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

இதில் கொடுமை என்னவெனில், ரஞ்சித்துக்கு இந்த அசைன்மெண்ட்டை கொடுத்தது சத்யப்ரியா தான். ஆனால், அவரே இந்த விவகாரத்தை விசாரிப் பாராம்; அவரே ஆக்சன் எடுக்க பரிந்துரைப்பாராம். போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலம் தனியாருக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட வேண்டும். ஆனால், ரத்து செய்யப்படாமல் இருக்கிறது''’என்று விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து சத்யப்ரியாவிடம் நாம் விளக்கம் கேட்ட போது,”"பதிவுத்துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அதனால்தான் அவர் (ரஞ்சித்) விருகம்பாக்கம் மாற்றப்பட்டார். குறிப்பிட்ட நில பிரச்சனையில் சி.எம்.டி.ஏ.வின் என்.ஓ.சி. இல்லாமல் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நடவடிக் கைக்கு வலியுறுத்தினேன். மற்றபடி என்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. நான் நேர்மையான அதிகாரி. தவறு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை''’என்கிறார்.

கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டாலும் பதிவுத்துறையில் நடக்கும் மோசடிகள் அதிகரித்தபடியே இருக்கின்றன.

nkn110622
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe