Advertisment

அரசு தகவல்கள் தனியார் கையில்! கலைஞர் தொடங்கிய துறைக்கு மூடுவிழா!

ss

மிழக அரசின் வரவு-செலவு கணக்குகள் ஏடு களில்தான் பராமரிக்கப்பட்டன. அவற்றை பாதுகாக்க, நிதித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ், 1999 ஆம் ஆண்டு கணினி மயமாக்கப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தை கொண்டுவந்தார் அப் போதைய முதல்வர் கலைஞர். நிதித்துறையின்கீழ் கருவூலக் கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை, சிறுசேமிப்புத்துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம், கூட்டுறவு தணிக்கைத்துறை, தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை, ஓய்வூதிய இயக்கம் என பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.

Advertisment

ee

இதில் அரசு தகவல் தொகுப்பு விவர மையம், 1999 முதல் 2004 வரையிலான அரசின் வரவு-செலவு கணக்கு களை கணினி மூலம் தொகுக்கும் பணியை சிறப்பாக செய் துள்ளது. அதேபோல், 1980 முதல் 2016 வரை எஸ்.எஸ். எல்.சி., ஹெச்.எஸ்.சி., என்.என்.எம்.எஸ்., என்.டி.எஸ். என பல்வேறு தேர்வுமுடிவுகளை குறித்த நேரத்தில் வழங்கியுள் ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் கணக்கு

மிழக அரசின் வரவு-செலவு கணக்குகள் ஏடு களில்தான் பராமரிக்கப்பட்டன. அவற்றை பாதுகாக்க, நிதித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ், 1999 ஆம் ஆண்டு கணினி மயமாக்கப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தை கொண்டுவந்தார் அப் போதைய முதல்வர் கலைஞர். நிதித்துறையின்கீழ் கருவூலக் கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை, சிறுசேமிப்புத்துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம், கூட்டுறவு தணிக்கைத்துறை, தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை, ஓய்வூதிய இயக்கம் என பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.

Advertisment

ee

இதில் அரசு தகவல் தொகுப்பு விவர மையம், 1999 முதல் 2004 வரையிலான அரசின் வரவு-செலவு கணக்கு களை கணினி மூலம் தொகுக்கும் பணியை சிறப்பாக செய் துள்ளது. அதேபோல், 1980 முதல் 2016 வரை எஸ்.எஸ். எல்.சி., ஹெச்.எஸ்.சி., என்.என்.எம்.எஸ்., என்.டி.எஸ். என பல்வேறு தேர்வுமுடிவுகளை குறித்த நேரத்தில் வழங்கியுள் ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் கணக்குஎண் வழங்குவதிலிருந்து இறுதித்தொகை வழங்குவது வரையிலான பணிகளையும் செய்துவருகிறது. சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் பணியையும் திறம்பட செய்திருக்கிறது.

sda

Advertisment

இதில் எஸ்.எஸ்.எல்.சி., ஹெச்.எஸ்.சி. தேர்வுமுடிவுகள் பணியில் அரசு தகவல் தொகுப்பு விவர மையம் 24 மணிநேரமும் உழைத்து, குறித்த காலத்தில் நிறைவுசெய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2017-ஆம் ஆண்டுமுதல் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு தேர்வுத்துறை இயக்குநரகம், இந்தப் பணியை தன்வசம் எடுத்துக்கொண்டு, தனியாருக்கு தாரைவார்த்ததோடு, ரூ.250 கோடியை நிதியாக ஒதுக்கியிருக்கிறது. இலவசமாக பார்க்கப்பட்டு வந்த வேலையை தனியாருக்கு ஒதுக்கி, நிதிவிரயம் ஏற்படுத்தியதோடு, மதிப்பெண் சான்றிதழ் குளறுபடிக்கும் வழிவகை செய்திருக்கிறது அரசு.

இதுபோக பல்வேறு வேலைகளையும் சிறப்பாக செய்துவந்த இந்தத் துறையின் பணிகளை மேற்கொள்ள, ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ். (ஒஎஐதஙந) என்கிற திட்டத்தின் மூலமாக, விப்ரோ (ரஒடதஞ) என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது அரசு.

இந்தத் துறையில் பணிமாற்றம் கிடையாது என்பது விதிமுறை. ஆனால், அதை பொருட்படுத் தாமல் கருவூலத்துறைக்கு 50 பேரை பணிமாற்றம் செய்துள்ளனர். அவர்கள் பார்த்துவந்த டேட்டா என்ட்ரி வேலையை, சோமேஸ் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ.12 லட்சத்திற்கு ஒப்படைத்துள்ளனர். மீதமிருப்பவர்களையும் பணிமாற்றும் வேலையை ரூ.10 லட்சத்தை வாங்கிக்கொண்டு வெகு சிறப்பாகச் செய்கின்றனர்.

தமிழக அரசின் எந்தெந்த துறைகள் நஷ்டத் தில் இயங்குகின்றனவோ, அவற்றையெல்லாம் மூடிவிடலாம் என்ற நோக்கத்தோடு சமீபத்தில் ரிவியூ மீட்டிங் நடைபெற்றது. இதில் நிதித்துறை அதிகாரிகள் அனைவருமே கலந்துகொண்டனர். அப்போது அதிகாரி ஒருவர் "சிறுசேமிப்புத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது' என்று சொன்னபோது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், “"அது எம்.ஜி.ஆர். பதவி வகித்த துறையாச்சே. அதனால், அதை எடுக்க வேண்டாம்' என்று மறுத்தார்.

ss

அதேசமயம், சிறப்பாக செயல்பட்டுவரும் அரசு தகவல் தொகுப்பு விவர மையம், முன்னாள் முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்டது என்ற காரணத்திற்காக மூடுவிழா நடத்தும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். அதற் கான முதற்கட்ட வேலைகள்தான் பணிமாற்றம், தனியாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொடுப்பது போன்றதெல்லாம்.

நிதித்துறைச் செயலாள ராக பணியாற்றிய, தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்திடம் இந்த ஒட்டுமொத்த டாஸ்க் கும் ஒப்படைக்கப்பட்டது. அவர் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் இயக்குந ராக இருந்த ஆனந்த்குமா ரிடம் இந்த வேலையை கைமாற்றிவிட, செம்மையாக செய்துவந்தார். ஒருகட்டத்தில் விஷயம் விஸ்வரூபம் எடுக்கு மோ என்ற எண்ணத்தில்தான், அவரை பணிமாற்றம் செய்து விட்டு புதிய இயக்குநரை நியமிக்காமலேயே காலம் தாழ்த்தினர். தற்போது கருவூலம் இயக்குநர் ஜவகர் பொறுப்பு இயக்குநராக பதவிவகிக்கிறார்.

அதேபோல, நிதித்துறையில் இருந்த கவிதாவை அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தின் ஏ.ஓ.வாக நியமித்து, துறைக்கான மூடுவிழா வேலைகளை கவனிக்க வைத்திருக்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம். கவிதாவும் பணிமாற்ற வேலைகளில் கருத்தாக ஈடுபடுகிறார். இதுபற்றி கவிதாவிடம் கேட்டபோது, "நான் இதற்கான பதி லைச் சொல்ல முடியாது' என்று மறுத்துவிட்டார்.

நிதித்துறை அரசுச் செயலாளர் கிருஷ்ண னிடம் கேட்டபோது, “""இதில் அரசியல் தொடர்பு எதுவுமில்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். இந்தத் துறையில் பணிபுரிபவர்களின் பணி பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்'' என்றார்.

இது ஒருபுறமிருக்க, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அருகில் செயல்படும் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்விநிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ""மூன்றரை ஏக்கர் அரசுநிலத்தில் செயல்படும் இந்த நிறுவனம், வாடகையாக மாதம் வெறும் ரூ.3 ஆயிரம் மட்டுமே செலுத்துகிறது. முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் தந்தையான ரங்கராஜன்தான் இந்நிறுவனத்தின் இயக்குநர். அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் கட்டடத்தை வளைத்துப்போடும் இவர்களின் திட்டத்திற்கு, அரசு ஒத்திசைவு செய்கிறது'' என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

-அ.அருண்பாண்டியன்

படம்: குமரேசன்

nkn200819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe