சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், அரசு நிதியை கையாடல் செய்தது, சாதி வன்கொடுமை புகார்களின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அரசின் உயர் கல்வித்துறையின் எந்த ஓர் உத்தரவையும் இப்பல்கலை பின்பற்றுவதில்லை.
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கைப்பிள்ளையாக செயல்படுவதாகவும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங் களை நடைமுறைப்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
இந்த நிலையில்தான் துணைவேந்தர் ஜெகநாதன், நிரந்தர பொறுப்பு பதிவாளரான தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் செங்கான் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வியியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து, "பியூட்டர் பவுண்டேஷன்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்கள்தான் இந்த நிறுவனத்தின்
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், அரசு நிதியை கையாடல் செய்தது, சாதி வன்கொடுமை புகார்களின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அரசின் உயர் கல்வித்துறையின் எந்த ஓர் உத்தரவையும் இப்பல்கலை பின்பற்றுவதில்லை.
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கைப்பிள்ளையாக செயல்படுவதாகவும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங் களை நடைமுறைப்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
இந்த நிலையில்தான் துணைவேந்தர் ஜெகநாதன், நிரந்தர பொறுப்பு பதிவாளரான தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் செங்கான் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வியியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து, "பியூட்டர் பவுண்டேஷன்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்கள்தான் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் என்பதோடு, பெரியார் பல்கலை வளாக முகவரியிலேயே இந்நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர். பல்கலை வளாகத்தில் 2024 சதுர அடி கட்டடத்தை ஆக்கிரமித்து "பியூட்டர் பார்க்' என்ற பெயரில் அலுவலக கட்டடத் தையும் திறந்துள்ளனர்.
இதற்கெல்லாம் பல்கலையின் சிண்டிகேட் குழுவோ, உயர் கல்வித்துறையோ இன்னும் அனுமதி தரவில்லை. இத்துடன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், "அப்டெக் ஆன் ஃபோரம்' என்ற நிறு வனத்தையும் தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.
இவற்றின் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன்மூலம் கிடைக்கும் ஆதாயத்தை அடையும் நோக்கில், பல்கலை நிதியையும், அரசு நிதியையும் கையாடல் செய்துள்ளதாக புகார் கிளம்பியது.
துணைவேந்தர், பதிவாளர் மற்றும் சிலர் சேர்ந்து தனியார் நிறுவனத்தை பல்கலை வளாகத்தில் தொடங்கியதில் உள்ள விதிமீறல் குறித்து, பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், ஏற்கனவே தமிழக முதல்வருக்கும், உயர்கல்வித் துறை செயலருக்கும் விரிவான புகார் அளித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக பல்கலை தரப்பில் இருந்தும் இளங்கோவன் மீது காவல்துறையில் புகாரளித்தனர்.
இந்நிலையில், "பியூட்டர் பவுண் டேஷன்' விவகாரம் குறித்து துணை வேந்தர் ஜெகநாதனை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக, டிச. 26ம் தேதி பல்கலைக்கு இளங்கோவன் நேரில் சென்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கொதிப்படைந்த ஜெகநாதன், ""நீதான் எல்லாருக்கும் புகார் அனுப்பிவிட்டாயே. இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது?'' என்று கூறியதோடு, அவரை சாதி பெயரைச் சொல்லி திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த இளங்கோவன், துணைவேந்தர் ஜெகநாதன் மீது சேலம் கருப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், ஜெகநாதன் மீது 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 420 (ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணம் தயாரித் தல்), 409 (நம்பிக்கை மோசடி), இதனுடன் இணைந்த 511 (தண்ட னைக்குரிய குற்றங்களைச் செய்ய முயற்சித்தல்), 506 (2) (கொலை மிரட்டல்) மற்றும் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3 (1) (ஆர்), 2 (1) (எஸ்) ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டிச. 26ம் தேதி மாலையில் கைது செய்தனர்.
துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்ட விவகாரம், உயர் கல்வித் துறை வட்டாரத்தில் காட்டுத் தீ போல பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. ஜெகநாதனை இரவு 11:15 மணியளவில் ஜே.எம்-2 மாஜிஸ்ட்ரேட் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர் தரப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்ததால், மாஜிஸ்ட்ரேட் இல்லமே பரபரப்பாக காணப்பட்டது. இரு தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில்... அதிகாலையில் ஜெகநாதனுக்கு 7 நாள்கள் இடைக்கால ஜாமின் வழங்கி மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அவர் தினமும் காலையில் சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவனிடம் கேட்டபோது, ''சாதி வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனை, சிறைக்குக் கொண்டுபோகாமலேயே ஜாமினில் விடுவித்தது தவறு. அவருக்கு ஜாமின் வழங்குவதற்கு முன்பாக புகார்தாரரான எனக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஜாமின் கொடுக்கக் கூடாது என மறுக்க எனக்கு உரிமை இருக்கிறது. இதில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வேன்.
"பியூட்டர் பவுண்டேஷன்', "அப்டெக் ஆன் ஃபோரம்' என்று துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட மேலும் சிலர் சேர்ந்து பல்கலை வளாகத்தில் தனியார் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். அரசு சாரா நிறுவனம் என்று அவர்கள் சொன்னாலும், பிற நிறுவனங்களுடன் அவர்கள் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி மாணவர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட வகையில் கிடைக்கும் வருவாயில் 60 சதவீதம் பியூட்டர் பவுண்டேஷனுக்கும், 40 சதவீதம் பல்கலைக்கும் என்று கூறியுள்ளனர். அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒருவர் தனியாக நிறுவனம் தொடங்குவது சட்ட மீறலாகும்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
இது ஒருபுறம் இருக்க... "சாதி வன்கொடுமை வழக்கில் கைதான ஒருவரை, சிறையில் அடைக்காமலேயே உடனடியாக பிணை வழங்கிய விவகாரத்தின் பின்னணியில் ஆளுநர் மாளிகையின் தலையீடு இருக்கலாமோ?' என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பியுள்ளனர்.