"ஹலோ தலைவரே, புதிதாகப் பிறக்க இருக்கும் 2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது.''”
"ஆமாம்பா... இதில் வாசிப்பதற்கான கவர்னர் உரையும் விறுவிறுப்பாகத் தயாராவதாக கோட்டைத் தரப்பி-ருந்து செய்தி கசி கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டமன்றக் கூட்டம் முறைப்படி தொடங்க விருக்கிறது. இந்த வருட உரையை கவர்னர் எப்படி அணுகப் போகிறார்? என்று ராஜ்பவனிலேயே ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கவர்னர் பேசவேண்டிய உரையை கோட்டையில் அதிகாரிகள் தரமாக தயாரிச்சிக் கிட்டிருக்காங்க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தேர்தலைச் சந்திக்க இன்னும் 4 மாதங்களே இருப்பதாலும், அதற்கு இது கடைசி சட்டமன்றக் கூட்டம் என்பதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்த மக்கள்நலத் திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவைகள் கவர்னர் உரையில் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றன. 2021 தேர்தலில் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை எல்லாம் இந்த உரையில் சுட்டிக்காட்டப்பட இருப்பதோடு, மக்களைக் கவரும் புதிய அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம்பெறும் என்கிறார்கள்.'' ”
"அரசு ஊழியர்கள் தரப்பை தி.மு.க. அரசால் முழுதாக சமாதானப்படுத்த முடியவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தி.மு.க. அரசுக்கு எதிரான தங்க ளின் அதிருப்திகளைப் போராட்டங்களாக முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் நடக்கிறன்றன. ஜனவரி 6ஆம் தேதி முதல், கால வரை யறையற்ற பந்த்தை நடத்தப்போவதாக இந்த சங்கங்கள் அறிவித்துள்ளன. சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி யடையவில்லை. எனவே திட்ட மிட்டபடி 6 ஆம் தேதி ஸ்ட்ரைக்கை நடத்துவதில் அவர்கள் தரப்பு தீவிரமாகயிருக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார்? என்ற கேள்விதான் இப்போது அரசியல் விமர்சகர்களால் வைக்கப்பட்டிருக்கிறது.'' ”
"அ.தி.மு.க. தலைமையில் வலிமை யான கூட்டணியை அமைப்போம் என்ற எடப்பாடியின் கர்ஜனை இன்னும் சாத்தியமாவதற்கான முகாந்திரங்கள் தெரியவில்லையே?''”
"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் வேறு எந்த கட்சியும் அ.தி.மு.க. தலைமை யை ஏற்பதாக இன்னும் அறிவிக்க வில்லை. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று எடப்பாடி சொல்வதில் அவர்கள் கட்சியின் சீனியர்கள் தொடங்கி மா.செ.க்கள் வரை யாரும் நம்பவில்லை யாம். இதனால் சீனியர்கள் கூட எடப் பாடியிடம் விவாதிப்பதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்களாம். கூட்டணி வலிமையாகாமல் பா.ஜ.க.வுடன் மட்டும்தான் கூட்டணி என்றால், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அ.தி.மு.க. தேர்தல் ஜாம்பவான்கள் பலரும் தங்களின் மனநிலையை, எடப்பாடிக்கு சூசகமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுக்கும் வைபவம் சோபிக்கவில்லை. அதனால்தான் விருப்ப மனு கொடுக்கும் நாட்களை கூடுதலாக்கியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.''”
"அ.தி.மு.க.விலேயே எடப்பாடி பற்றிய விமர்சனங்கள் சூடாக உலவுகிறதே?''”
"எடப்பாடிக்கு, அவரது அத்தனை மேடைப் பேச்சுகளையும் எழுதிக் கொடுத்துவரும் அந்த நபர், முன்பு ஒரு தொலைக்காட்சியில் தலைமைச் செய்தியாளராக இருந்தவர். பக்குவம் இல்லாத இவர் எழுதிக் கொடுத்தபடி, கோயில் பணத்தை எடுத்துக் கல்லூரி கட்டுகிறார்கள் என்று, நடைமுறை தெரியாமல் பேசி, எடப்பாடி கொஞ்சநாளைக்கு முன்பு விமர்சனங்களுக்கு ஆளானார். இப்போது எடப்பாடி, ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட "பிரணயம்' என்ற தேர்தல் வியூக அமைப்பை நம்பிக்கொண்டிருக் கிறார். இந்த அமைப்புதான், தமிழக பத்திரிகை யாளர்கள் சிலருடன் தொடர்புவைத்துக்கொண்டு, பா.ஜ.க. அணியில் டி.டி.வி.க்கு 10 தொகுதி, ஓ.பி.எஸ்.ஸுக்கு 6 தொகுதி என்றெல்லாம் கதைக்கு உதவாத பட்டியல் போட்டு, இங்கே சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட பலவீனமானவர் களையே எடப்பாடி எப்போதும் நம்புகிறார் என்று அ.தி.மு.க.விலேயே டாக் அடிபடுகிறது.''”
"லஞ்ச ஒழிப்புத்துறையையே கலைக்க வேண்டும் என்ற அதிரடிக் குரலை அ.தி.மு.க. எழுப்பத் தயாராகிவிட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் 4,700 கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை நடந்துள்ள தாக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக அமலாக்கத்துறை புகார் தெரிவித்தது. இந்த ஊழல் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு கடந்த ஆண்டே அமலாக்கத்துறை கடிதமும் அனுப்பியது. ஆனால், இந்த புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் டி.ஜி.பி.யோ லஞ்ச ஒழிப்புத் துறையோ எடுக்கவில்லை. அதனால்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த அ.தி.மு.க., ஆதாரங்களின் அடிப்படையில், மணல் கொள்ளையில் சம்மந்தப்பட்ட துரைமுருகன் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கைப் பதிவு செய்யவேண்டும் என்று தங்கள் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் மூலம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் எடப்பாடி புகார் கொடுத்திருக்கிறார். இதன்பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க மறுத்தால், லஞ்ச ஒழிப்புத்துறையை கலைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அ.தி.மு.க. திட்ட மிட்டிருக்கிறது.''”
"த.வெ.க.வில் ஆக்டிவாக இருக்கும் செங்கோட்டையனை, அ.தி.மு.க.வினர் கரித்துக் கொட்டுகிறார்களே?''”
"என் உடம்பில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை, புரட்சித் தளபதி விஜய்யை முதல்வராக உட்கார வைக்கப் போராடுவேன் என்று அண்மையில் உணர்ச்சிமயமாய் பேசி யிருக்கிறார் செங்கோட்டையன். அந்த தரப்பில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர் இந்த செங்ஸ் தான். இவர் ஓமலூரில் எம்.எல்.ஏ.வாக இருந்த பல்பக்கி கிருஷ்ணன் என்பவரை அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு அழைத்து வந்திருக்கிறார். அடுத்தகட்டமாக சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை த.வெ.க.வுக்கு அழைத்துவர பலவிதமாக டீலிங் பேசிவருகிறார். அவர்களில் ஒருவர், கோயில் திருவிழாவில் சலங்கை கட்டி ஆடியவரான பெருந்துறை ஜெயராமன். அவர் த.வெ.க. மேடையில் ஆட ரொம்பவே யோசிக்கிறாராம். இதையெல்லாம் பார்த்து எரிச்சலான அ.தி.மு.க.வினர், இத்தனை நாளாக அவர் சாப்பிட்டதெல்லாம் அ.தி.மு.க. மூலம் கிடைத்த பணத்தால்தான். அவர் உடம்பில் இவ்வளவுநாள் ஓடியதும் அ.தி.மு.க. ரத்தம்தான். அப்படிப்பட்டவர் அ.தி.மு.க.வுக்கு ரெண்டகம் செய்துவருகிறாரே என்று கடுமையாக விமர்சித்து கரித்துக்கொட்டுகிறார்கள்.''”
"தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் தரப்பு வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது என்கிறார்களே?''”
"எதுவுமே தெரியாத அப்பாவி போல் வெளியே காட் டிக்கொள்ளும் பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் எப் படி, எப்படியெல் லாம் வசூலிக்கலாம் என்பதில் கில்லாடி யாகயிருக்கிறாராம். மாஜி பா.ஜ.க. தலைவருக்கு நெருக்கமான தங்கக் கடத்தல் பேர்வழியான பிரித்வி, அவருக்கு நிறைய காரியங்களை செய்து கொடுத்திருக்கிறாராம். இப்போது அந்த நபர், நயினார் பக்கம் வந்து அவரது வசூலுக்குத் துணைபுரிந்து வருகிறாராம். இவருடன் இருக்கும் இன்னொரு நபர், டெல்லியில் இருந்து தமிழகம் வரும் ஒன்றிய பிரமுகர்களை வரவேற்று, அவர்கள் மூலம் காரியம் சாதித்துவருகிறாராம். தற்போது பா.ஜ.க.வில் எம்.எல்.ஏ. சீட் தருவ தாகக் கூறி நயினாரின் மகன் நயினார் பாலாஜி, புளூ டைமண்ட் ஓட்டலில் அமர்ந்து கொண்டு கல்லா கட்டி வரு கிறாராம். இப்படி கலெக்ஷன் விவகாரத்தில் ஆர்வம் காட்டிவரும் நயினார், கட்சி வேலைகளில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்கிற புகார் பலமாக அவர்கள் தரப்பில் வெடித்துவருகிறது.''”
"அமலாக்கத்துறை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தையும் தீவிரமாகக் குறிவைத்திருக்கிறதே?''
"காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக திடீரென வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறது அமலாக்கத்துறை. மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீன நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டியது சி.பி.ஐ. இதைத் தொடர்ந்து கார்த்தியின் நெருங்கிய நண்பரான பாஸ்கர் ராமன் அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அம லாக்கத்துறையும் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக்கில், எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லாத நிலையிலேயே கார்த்தி சிதம்பரம் பலமுறை ஆஜராகியிருக்கிறார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் உட்பட 7 பேர் மீது குற்றச் சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி சிறப்பு நீதிமன் றம் உத்தரவளித்தது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிகள் உருவாகும் என்கிறார்கள்.''
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். காங்கிரஸில் இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தரப்புதான், நடிகர் விஜய் தரப்புடன் கூட்டணியை உருவாக்கும் ஆசையில் இன்னும் பனையூர் பக்கம் உலவிக்கொண்டிருக்கிறது. தி.மு.க. தரப்போ, காங்கிரஸோடு கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக சோனியாவே, ராகுலிடம் அழுத்தமாகப் பேசிவிட்டார். அதனால் எங்கள் கூட்டணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அடித்துச் சொல்கிறது.''”
______________
இறுதிச் சுற்று!
பரபர சேலம் பா.ம.க. பொதுக்குழு!
அன்புமணி, சவும்யா நீக்கம்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/rangbox-2025-12-29-16-38-56.jpg)
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில், பா.ம.க. தலைவராக ராமதாஸையும், அவரது மகள் ஸ்ரீமதி காந்தியை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும், ஜி.கே. மணியை மீண்டும் பா.ம.க. கௌரவத்தலைவராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் செயற்குழுவில் பசுமைத் தாயகம் அமைப்பிலிருந்து சவுமியா அன்புமணியை நீக்கியதுடன், அன்புமணியை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கடிதங்களிலும், வேட்பாளர் நியமனக் கடிதங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. பின்பு பேசிய ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, "அன்புமணிக்கு அமைச்சர் பதவியும், டாக்டர் பட்டமும், எம்.பி. பதவியும் யார் கொடுத்தது? அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்குச் சமம். பா.ம.க. என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு 15 நாட்களே போயுள்ளார் அன்புமணி. இதற்குப் பெயர் உழைப்பா?''’என சூடான கேள்வி களையெழுப்பினார்.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/rang-2025-12-29-16-38-20.jpg)