"தமிழகம் முழுக்க இருக்கும் நீர்நிலைகளை எல்லாம் குடிமராமத்து என்ற பெயரில் ஆளும்கட்சியினர் சுரண்டுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டுக் குரல் பரவலாக ஒலிக்கிறது. குறிப்பாக டெல்டா பாசனப் பகுதி இருக்கும் விவசாயிகள் மத்தியில் இந்தக் குரல் இன்னும் அதிகமாய்க் கேட்கிறது.

saa

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து களி மண், மணல் உள்ளிட்டவற்றை விவசாயப் பயன்பாட்டிற்காகவும் வீட்டு உபயோகத்துக்காகவும் மண்பாண்டங்கள் செய்வதற் காகவும் பொதுமக்கள் இல வசமாக எடுத்துக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கி யிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ’குடிமராமத்து’ என்ற நாம கரணமும் சூட்டப்பட்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துதான் சுரண்டல் நடக்கிறதாம்.

மயிலாடுதுறைப் பகுதியில் நம்மிடம் பேசிய விவசாயிகள் ""அங்கங்கே இருக்கும் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கே குளங்களைத் தூர்வாரும் அனு மதியைக் கொடுக்கிறார்கள். அவர்களால் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் குவாரிகளாக மாறிவிட்டன. ஒரு குளத்தைத் தூர்வார 90 ஆயிரம் ரூபாயை அரசு கொடுக்கிறது. 10 ஆயிரம் ரூபாயை ஏரியா வாசிகள் பணமாகவோ உழைப்பாகவோ கொடுக்கலாமாம். இதன் மூலம் தூர் வாரும் பணியைச் செய்யவேண்டும் என்றார்கள். அப்படித் தூர் வாரும் மண் ணையும் மணலையும் பொது மக்கள் இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் என்று அறிவித் தார்கள். ஆனால் இப்படி எடுக்கப்படும் மணலை ஆளும் கட்சியினரே ஆந்திராவரை அள்ளிக் கொண்டு போய் விற்றுக் கல்லா கட்டுகிறார்கள்.

Advertisment

ஒரு லாரி மணலை 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை இவர்கள் விற்கிறார்கள். இதற்காக தாசில் தார் தொடங்கி பல்வேறு அதிகாரிகளுக்கும் குளம் ஒன் றிற்கு 20 ஆயிரம் ரூபாய்வரை கமிஷன் போகிறது. மயிலாடு துறை, சீர்காழி, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், நன்னிலம்ன்னு தினசரி இந்தக் கொடுமைய நாங்கள் கண் கூடாகப் பார்க்கிறோம்'' என்றார்கள் வேதனையாய்.

sas

நன்னிலத்தில் நாம் சந்தித்த அந்த விவசாயப் பிரமுகர் ""எங்க தாலுகாவிற்கு உட்பட்ட உபயாந்தாபுரம், நெடுஞ்சேரி, மேனாங்குடி உள்ளிட்ட கிரா மங்கள், மிகவும் உட்கிராமங்கள். இதை சாதகமாக்கிக்கிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர் மேனாங் குடி குமார் என்பவர் சுற்றியுள்ள எல்லாக் குளங்கள்லயும் மணல் அள்ளிக்கிட்டு இருக்கார். கேட்டா, "அமைச்சர் காமராஜின் அக்கா மகன்தான் எடுக்குறார். நீங்க தடுத்தால், ஜெயிலுக்குப் போவீங்க'ன்னு மிரட்டறார். இதுபத்தி தாசில்தார்ட்ட புகார் கொடுத்தும் அவர் கண்டுக்கலை. கலெக்டரையும் சரிக்கட் டிட்டாங்க''’என்கிறார் வருத்த மாய்.

Advertisment

கொள்ளிடக்கரையில் நாம் சந்தித்த விவசாயிகளான கேசவ னும் கலியபெருமாளும் ""கொள் ளிடத்தைக் கட்டாந்தரையாக்கிய ஆளுங்கட்சி ஆளுங்க இப்ப குளம் குட்டைகளையும் விட்டுவைக்க வில்லை, குறிப்பாக குளசேகரநல்லூர், காமாட்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்களை திருப்பனந்தாள் அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செய லாளர் கருணாநிதி மொட்டையடிக் கிறார். மணல் இருந்தாத்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனா இப்ப அதையும் சுரண்டி எடுத்துட றாங்க. அப்படி இருந்தா நிலத்தடி நீர் எப்படி இருக்கும்? எல்லோரும் பூமி வறண்டு சாகவேண்டியதுதான்'' என்கிறார்கள் எரிச்சலாக.

சீர்காழி அருகே இருக்கும் தோப்புக் குளத்தில் கடந்த ஆண்டே முப்பது அடிக்கு மேல் மணலைச் சுரண்டி அள்ளி விட்டனர். அதே குளத்தில் இந்த ஆண்டும் அதேபோல் மணலை சுரண்டினார்கள். இதைக் கண்டு கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி லாரி, பொக்லைன் உள்ளிட்டவற்றை சிறைப்பிடித்து ஆளும்தரப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து செம்பதனிருப்பு பிச்சைப்பிள்ளையும் சக விவசாயிகளும் கூறுகையில்,’’ ""கடந்த ஆண்டு, இந்த குளத்தைத் தூர்வார ஒரு லட்சம் நிதி ஒதுக்கினாங்க. மணலை மட்டும் தோண்டி எடுத்துட்டு அப்படியே போட்டுட்டுப் போயிட்டாங்க. 30 அடிக்கு மேல் தோண்டியதால அந்தப் பக்கம் போகவே பயமா இருக்கு. விழுந்தால் அவ்வளவு தான்... அதே குளத்துக்கு 1 லட் சத்து 26 ரூபாய் நிதி ஒதுக்கி கரை கட்டச் சொல்லியிருக்காங்க. அந்த பணத்தையும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. பாரதி ஆளுங்க ஆட்டையப் போட்டுட்டு, மணலையும் நாற்பது அடிக்கு மேல தோண்டி எடுத்துட்டாங்க. இதுதான் குளம் வெட்டுற லட்சணமா?''’என்றார்கள் கொதிப்பாய்.

நிலம், நீர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இரணியன் நம்மிடம் ""வண்டல் மண்ணை தேவைப்படும் விவசாயிகள் எடுத்துக்கலாம்ன்னுதான் அரசாங்கம் சொல்லுச்சு. ஆனால் அதிகாரிகள், மணலை கொள்ளை யடிக்க வச்சி, கமிஷன் வாங்க றாங்க. தூர் எடுக்கவேண்டிய பகுதிகள் எல்லாமே ஆக்கிர மிப்பில் இருக்கு. ஆளும் கட்சிக்காரங்களை இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிற அளவுக்கு முதல்வர் எடப்பாடி சம்பாதிக்க வச்சிட்டார். ஊருக்கு ஊர் மணல் மாஃபியாக்களையும் உருவாக்கிட்டார்''’என்று முதல்வரைச் சாடுகிறார்.

கிராமங்களையும் அவற் றின் பசுமைக்கு ஆதாரங் களான நீர் நிலைகளையும் காக்கவேண்டிய குடிமராமத்துத் திட்டம் ஆளும்கட்சியினருக்கு அட்சய பாத்திரமாகிவிட்டது. கிராமங்களைப் பிச்சைப் பாத்திரங்களாக்கி வருகிறது.

-க.செல்வகுமார்